மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை சம்பாதித்து வருகின்றனர். அதன்படி சில மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இரட்டிப்பாகவோ அல்லது மூன்று மடங்காகவோ அதிகரிக்க செய்கிறது. சில ஃபண்டுகள் பெரும் லாபத்தை அளிக்கின்றன. குறிப்பாக SIP மூலம் முதலீடு செய்வது முதலீடு செய்பவர்களின் செல்வத்தை பல மடங்கு அதிகரிக்கிறது.
கடந்த பத்து ஆண்டுகளில், 6 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு 3.5 மடங்குக்கு மேல் வருமானத்தை அளித்துள்ளன. ரூ. 10 ஆயிரம் எஸ்ஐபியை ரூ. 52 லட்சம் வரை வழங்கிய ஃபண்டுகள் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 152 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளன. ஆனால் இதில் 6 மியூச்சுவல் ஃபண்டுகள் மட்டுமே முதலீட்டாளர்களின் முதலீட்டை 3.5 மடங்குகளுக்கு மேல் அதிகரித்துள்ளன. அவற்றில், லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப், இஎல்எஸ்எஸ், லார்ட் அண்ட் மிட் கேப், ஃபோகஸ்டு, ஃப்ளெக்ஸி கேப், மல்டி கேப், வேல்யூ/கான்ட்ரா ஃபண்ட் வகைகளை ஆய்வு செய்து, எஸ்ஐபியில் எக்ஸ்ஐஆர்ஆர் அடிப்படையில் இந்தப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. இப்போது டாப் 6 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்னவென்று பார்ப்போம்.
முதலீட்டாளர்களின் செல்வத்தை மூன்றரை மடங்கு உயர்த்தியுள்ள இந்த ஃபண்டுகளில் இரண்டு ஸ்மால் கேப் ஃபண்டுகள், இரண்டு மிட் கேப் ஃபண்டுகள், ஒரு ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் மற்றும் ஒரு இஎல்எஸ்எஸ் ஃபண்ட் ஆகியவை அடங்கும்.
குவாண்ட் ஸ்மால்கேப் ஃபண்ட்: இந்த ஃபண்ட் கடந்த பத்து ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் செல்வத்தை 4.33 மடங்கு அதிகரித்து இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இத்திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் ரூ. 10000 எஸ்ஐபி தொடங்கப்பட்டிருந்தால், இப்போது முதலீடு 4.33 மடங்கு அதிகரித்திருக்கும். அதாவது ரூ. 12 லட்சம் முதலீடு மதிப்பு ரூ. 51.92 லட்சமாக இருந்திருக்கும். இந்தத் திட்டத்தின் வருடாந்திர வருமானம் 27.88 சதவீதம் ஆகும்.
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்:இந்தத் திட்டம் முதலீட்டாளர்களின் முதலீட்டை 3.99 மடங்கு அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் எஸ்ஐபி ரூ.10,000 தொடங்கப்பட்டிருந்தால் இப்போது முதலீட்டு மதிப்பு ரூ. 47.84 லட்சமாக இருந்திருக்கும். டாப்-6 பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
குவாண்ட் ELSS டேக்ஸ் சேவர் ஃப்ண்ட்: இந்தத் திட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 எஸ்ஐபி முதலீடு செய்திருந்தால், இப்போது முதலீட்டு மதிப்பு ரூ. 45.93 லட்சமாக இருந்திருக்கும். முதலீட்டாளர்களின் செல்வம் 3.78 மடங்கு அதிகரித்திருக்கும். ஆண்டு வருமானம் 25.37 சதவீதம் ஆகும்.
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட்: இந்த ஃபண்ட் கடந்த பத்து ஆண்டுகளில் 24.77 சதவிகித வருமானத்தை அளித்துள்ளது. அப்போதிலிருந்து எஸ்ஐபியில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ. 10,000, ஆனது இப்போது 3.66 மடங்கு அதிகரித்து ரூ.43.94 லட்சமாக இருந்திருக்கும்.
குவாண்ட் ஃபிளெக்ஸி கேப் ஃப்ண்ட்: இந்த ஃபண்ட் 10 ஆண்டுகளில் முதலீட்டு மதிப்பை 3.61 மடங்கு அதிகரித்துள்ளது. ரூ. 10 ஆயிரம் எஸ்ஐபி இப்போது ரூ. 43.27 லட்சமாக இருந்திருக்கும். ஆண்டு வருமானம் 24.48 சதவீதம் ஆக உள்ளது.
குவாண்ட் மிட்கேப் ஃபண்ட்: இந்த ஃபண்ட் 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்ஐபியில் ரூ.10000 தொடங்கியிருந்தால் ரூ.42.72 லட்சம் அதாவது முதலீட்டு மதிப்பு 3.56 மடங்கு அதிகரித்திருக்கும். ஆண்டு வருமானம் 24.24 சதவீதம் ஆகும்.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications