மாதம் ரூ.10000 முதலீடு செய்ய தயாரா.. ரூ.39 லட்சம் ஈஸியா வருமானம் ஈட்டலாம்.. எத்தனை ஆண்டுகளில்?

பொதுவாக நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரை செய்வது மியூச்சுவல் ஃபண்ட்களைத் தான். பங்கு சந்தைகளுக்கு மாற்றாக பார்க்கப்படும் மியூச்சுவல் ஃபண்டுகள், இன்றைய காலத்தில் முக்கிய முதலீட்டு அம்சங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.

இப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்டில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், 39 லட்சம் ரூபாய் 10 ஆண்டுகளில் வருமானம் ஈட்ட முடியுமா? அது சாத்தியமா? வாருங்கள் பார்க்கலாம்.

தீமேட்டிக் ஃபண்டுகள்

தீமேட்டிக் ஃபண்டுகள்

கடந்த 10 ஆண்டுகளில் பல தீமேட்டிக் ஃபண்டுகள் நல்ல லாபத்தினை கொடுத்து வருகின்றன. அந்த வகையில் நல்ல லாபம் கொடுத்த ஃபண்டுகளில் ஆதித்யா பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் ஃபண்ட் திட்டமும் இன்று. இந்த ரெகுலர் திட்டம் வருடத்திற்கு சுமார் 20.58% வருமானம் கொடுத்துள்ளது.

இந்த திட்டத்தில் மாதம் 10 ரூபாய் எஸ்ஐபி மூலம் 10 ஆண்டுகள் முதலீடு செய்திருந்தால், இன்று உங்கள் கார்ப்பஸ் மதிப்பு 39 லட்சம் ரூபாயாகும்.

இவ்வளவு லாபமா?

இவ்வளவு லாபமா?

ஆதித்யா பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூன்று ஆண்டுகளில் 31.13% வருமானத்தினை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் நேரடி திட்டமானது முதலீட்டாளர்களின் முதலீட்டில் 32.65% என்ற விகிதத்தில் ஆண்டுக்கு அதிகரித்துள்ளது.

இதே 5 ஆண்டுகள் முதலீட்டு திட்டத்தில் இந்த திட்டம் ரெகுலர் திட்டத்தில் 26.15% வருமானம் கொடுத்துள்ளது. இதே ஆண்டுக்கு முதலீட்டாளர்களின் வருமானம் 24.80% என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது.

எதில் முதலீடு

எதில் முதலீடு

இந்த ஆதித்யா பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் இந்தியா திட்டம் (ABSL) தொழில் நுட்பம், டெலிகாம், மீடியா மற்றும் பொழுதுபோக்கு மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் முதலீடு செய்யும் ஒரு ஓபன் எண்டட் ஃபண்டாகும்.

அசெட் அலகேஷன்

அசெட் அலகேஷன்

ஆதித்யா பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் டெக் ஜாம்பவான்கள் ஆன, இன்ஃபோசிஸ், டிசிஎஸ்,ஹெச் சி எல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் அடங்கும்.

இதன் சொத்தில் 24.09% இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இதே டிசிஎஸ் நிறுவனத்தில் 9.48%மும், டெக் மகேந்திராவில் 8.8% பங்கும், ஹெச் சி எல் டெக்னாலஜி நிறுவனத்தில் 7.19%மும் முதலீடு செய்துள்ளது. இது தவிர கிளியரிங் காப்பரேஷன் ஆப் இந்தியாவில் 7.19%மும், பார்தி ஏர்டெல்லில் 3.86%மும், மைண்ட் ட்ரீ- யில் 3.86%மும் முதலீடு செய்துள்ளது.

மொத்தத்தில் தனது மொத்த சொத்தில் இந்த ஃபண்ட் 77.7% ஐடி துறையில் முதலீடு செய்துள்ளது.

துறை வாரியாக எவ்வளவு?

துறை வாரியாக எவ்வளவு?

 

டெக்னாலஜி துறை - 78.32%

கம்யூனிகேஷன் - 7.76%

சேவை - 6.50%

கேப்பிட்டல் குட்ஸ் - 1.70%

நுகர்வோர் துறை - 0.99%

மற்ற துறைகள் - 7.73%

ரிஸ்க் அதிகம்

ரிஸ்க் அதிகம்

பொதுவாக தீமேட்டிக் ஃபண்டுகள் சற்று ரிஸ்க் அதிகம் என்று கூறப்படுவதுண்டு. அதேசமயம் லாபமும் அதிகம் என்பார்கள். ஏனெனில் குறிப்பிட்ட தீமை தேர்தெடுத்து அதில் முதலீடு செய்யும்போது, அந்த துறை நல்ல செயல்பாட்டுடன் இருக்கும்போது நல்ல லாபம் தான். அதேசமயம் ஏதேனும் சரிவு ஏற்பட்டாலும் அதுவும் பெருத்த அடியாக இருக்கும். ஆக போதிய அனுபவம் இல்லாதவர்கள் பொதுவாக தீமெட்டிக் ஃபண்டுகளை தேர்தெடுப்பதை தவிர்க்கலாம். சரியான ஆலோசகர்களுடன் முதலீடு செய்வது அவசியமாகும்.

 

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+