இன்றைய காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பட்டிதொட்டியெல்லாம் பரவ ஆரம்பித்துவிட்டது. உண்மையில் இந்த முதலீடுகள், தற்போது மக்களை வெகுவாக கவர ஆரம்பித்துள்ளன.
அது குடிசை வீட்டில் இருக்கும் சாமானிய மக்கள் முதல் கொண்டு, மாடி வீட்டு அம்பானி வரை அனைவரையும் கவரும் ஒரு முதலீடாகவும் உள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டில் நல்ல கொடுக்கும் என சில வகையான பண்டுகளை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதனை பற்றித் தான் இந்தக் கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.
பேலன்ஸ்டு ஃபண்டுகளை வாங்கலாம்?
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் முதல் பண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட் அல்லது ஹைபிரிட் ஃபண்ட் திட்டங்கள் தான். இன்றைய காலகட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஒரு திட்டமான இந்த பேலன்ஸ்டு ஃபண்டுகள் உள்ளன. இது ஹைபிரிட் ஃபண்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடுகள் பங்கு சந்தை மற்றும் கடன் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.
நல்ல லாபம் கொடுக்கலாம்
பொதுவாக நிபுணர்கள், இந்த வகையான ஃபண்டுகளையே ஆரம்பத்தில் பரிந்துரை செய்கின்றனர். இது நீண்டகால நோக்கில் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதொரு திட்டமாகும். இதுவே கடன் சார்ந்த முதலீட்டு திட்டங்கள் நிலையான போர்ட்போலியோவை அளிக்கும். ஒரு வேளை பங்கு சந்தை சரிந்தாலும், கடன் சந்தைகள் அதனை சமாளிக்கும்.ஆக இது நடப்பு ஆண்டில் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
டைனமிக் அசெட் அலகேசன் ஃபண்ட்
ரிஸ்க் எடுக்கலாம். ஆனால் அதை சரிகட்டும் விதத்தில் மற்ற முதலீடுகளை பாதுகாக்க வேண்டும் என்றால் அசெட் அலொகேஷன் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம். எனினும் நிறைய முதலீட்டாளர்களுக்கு அசெட் அலகேஷன் பற்றி தெரிவதில்லை. இதனால் தங்களது முதலீடுகளை ஒரே இடத்தில் சென்று குவிக்கின்றனர். இதனால் அது சரியும் போது மொத்தமாக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் டைனமிக் அசெட் அலகேஷன் பண்டுகளில், உங்களது பணம் பலவற்றிலும் பிரித்து போடுவார்கள். இதனால் உங்களுக்கு ரிஸ்க் குறைவு. எனினும் ஒரளவு ரிட்டர்ன் இருக்கும்.
ப்ளெக்ஸி ஃபண்டுகள்
முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டிய முதலீட்டு திட்டம் இது. இந்த திட்டத்தில் நிதி மேலாளர்கள் லார்ஜ் கேப் பண்டுகள், ஸ்மால் கேப் பண்டுகள், மிட் கேப் பண்டுகள் என பலவற்றிலும் முதலீடு செய்கின்றனர். இது சந்தையில் நிலவரத்திற்கு ஏற்ப முதலீடு செய்யப்படுகிறது. இதனால் இதுவும் நல்ல லாபம் கொடுக்கும் ஒரு முதலீட்டு திட்டமாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications