பங்குச் சந்தை ஒரு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்கிறது. அடுத்த நாள் அதலபாதாளம் நோக்கி நகர்கிறது. இந்த ரோலர் கோஸ்டர் பயணத்தைப் பார்த்து உங்கள் கையில் இருக்கும் மொத்தத் தொகையை முதலீடு செய்யத் தயங்குகிறீர்களா? கவலைய விடுங்கள். முதலீட்டு உலகில் உங்களுக்குக் கிடைத்துள்ள ஒரு மேஜிக் டூல் தான் STP.
சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் ஆனது, ஒரே நேரத்தில் மொத்தப் பணத்தையும் ரிஸ்க்கான சந்தையில் கொட்டாமல், ஒரு நிதானமாக ஓட்டம் போல, உங்கள் பணத்தை டெப்ட் ஃபண்டில் இருந்து, ஈக்விட்டி ஃபண்டிற்குச் சீராக மாற்றும் வித்தை தான் இது. சந்தை ஏறினாலும் சரி, சந்தை சரிந்தாலும் சரி.. எதற்கும் கவலைப்படாமல் லாபத்தை அறுவடை செய்ய எஸ்.டி.பி ஒரு சிறந்த வழியாகும். உங்கள் கடின உழைப்பின் பலனான சேமிப்பு, சந்தையின் ஏற்ற இறக்கங்களால் கரையாமல் பாதுகாப்பாகவும், அதேசமயம் வேகமாகவும் வளர வேண்டுமா? அப்படியானால் ஒரு புத்திசாலித்தனமான முதலீடு அவசியம். ஆக ஒவ்வொரு முதலீட்டாளரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியத்தை பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

லாபம் ஈட்ட உதவும் STP!
நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இருந்து வெளியேறி, மற்றொரு திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு உங்களுக்கு கைகொடுக்கும் ஒரு அற்புதமான வழி எஸ்.டி.பி ஆகும். சந்தையின் அதிரடி மாற்றங்களில் இருந்து உங்கள் பணத்தை பாதுகாக்கவும், ரூபாய் செலவு சராசரி மூலம் அதிக பலன் ஈட்டவும் உதவும் சிறந்த கருவியாகும்.
உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு 5 லட்சம் ரூபாய் இருக்கிறது. அதை ஒரு மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள். ஆனால் இப்போது சந்தை உச்சத்தில் இருக்கிறதா அல்லது வீழ்ச்சியடையுமா என்று உங்களுக்கு தெரியவில்லை. குழப்பமாக இருக்கிறதா? அப்படி எனில் நீங்கள் செய்ய வேண்டியது, முதலில் அந்த 5 லட்சம் ரூபாயை பாதுகாப்பான ஒரு டெப்ட் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள். அங்கிருந்து மாதம் 50,000 ரூபாய் வீதம், அடுத்த 10 மாதங்களுக்கு உங்கள் விருப்பமான மிட் கேப் ஃபண்டிற்கு தானாகவே மாறும்படி எஸ்.டி.பி செய்யுங்கள். அதன் மூலம் சந்தை ஏறும்போதும் சரிந்த போதும் வெவ்வேறு விலைகளில், நீங்கள் யூனிட்களை வாங்குவீர்கள். இது நீண்ட காலத்தில் உங்கள் லாபத்தை அதிகரிக்க உதவிகரமாக இருக்கும்.
எஸ்.டி.பி என்றால் என்ன?
எஸ்.டி.பி என்பது உங்கள் மொத்தத் தொகையை ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், ஒரு மியூச்சுவல் ஃபண்டிலிருந்து மற்றொரு மியூச்சுவல் ஃபண்டிற்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நிலையான தொகையை மாற்றும் முறையாகும். இது ஒரு குறிப்பிட்ட முதலீட்டில் இருந்து, அதிக லாபம் தரும் ஈக்விட்டி போன்ற திட்டங்களுக்கு உங்கள் பணத்தை மாற்றம் செய்ய வழிவகுக்கும்.
எஸ்.டி.பி-ன் நன்மைகள்!
ரூபாய் செலவு சராசரி: சந்தை சரிவில் இருக்கும் போது அதிக யூனிட்களையும், சந்தை உச்சத்தில் இருக்கும் போது குறைவான யூனிட்களையும் வாங்குகிறீர்கள். இதனால் உங்கள் வாங்குதல் விலை சராசரியாகி, எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்க உதவுகிறது.
வரிச் சலுகை: இது ஒரு முக்கியமான அம்சம். நீங்கள் ஒரு ஃபண்டில் இருந்து மற்றொரு ஃபண்டுக்கு பணத்தை மாற்றும் போது, அது பணத்தைத் திரும்பப் பெறுதலாக கருதப்படுவதில்லை. எனவே இந்த மாற்றத்தின் போது நீங்கள் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியதில்லை.
முதலீட்டு ஒழுக்கம்: பணம் தானாகவே ஒரு திட்டத்தில் இருந்து மற்றொரு திட்டத்திற்கு மாறுவதால், ஒரு முறையான முதலீட்டு ஒழுக்கம் உருவாகிறது. அவசரபட்டு பணத்தை எடுத்து வீணாக்குவதையோ அல்லது சந்தையின் சூழலை பார்த்து பயந்து ஒதுங்குவதையோ, தவறான முடிவுகள் எடுப்பதையோ இது தவிர்க்கிறது.
மொத்தத்தில், மொத்த முதலீட்டையும் ஒரே இடத்தில் முடக்காமல், நிதானமாகச் செய்து அதிக லாபம் ஈட்ட விரும்புபவர்களுக்கு எஸ்.டி.பி ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
Disclaimer:இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited(இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications