முதலீடு செய்வதில் இரண்டு முக்கியமான மந்திரங்கள் உள்ளன. அவை சிறந்த மற்றும் சரியான முதலீட்டை தேர்ந்தெடுப்பது மற்றும் இரண்டாவது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது. இதன் மூலம் கூட்டு வட்டியின் பலனை பெற்று அதிக வருமானத்தை அடைய முடியும். அதன் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் திறம்பட செயல்பட்ட ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 2 வழிகள் உள்ளன. நீங்கள் மொத்த தொகையாக முதலீடு செய்யலாம் அல்லது SIP முறையில் முதலீடு செய்யலாம். SIP திட்டம் மூலம் சிறு தொகையிலிருந்து முதலீடு செய்யலாம். மேலும் உங்கள் விருப்பப்படி மாதம் தோறும் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை, அரையாண்டுக்கு ஒரு முறை என SIP முதலீட்டை தொடங்கலாம்.

ஏப்ரல் 17-ஆம் தேதி, 2001-ஆம் ஆண்டு குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டால் தொடங்கப்பட்ட ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டான குவாண்ட் மல்டி அசெட் ஃபண்ட் வழங்கிய வருமானத்தைப் பார்ப்போம்.
லம்ப்சம் முதலீட்டைப் பொறுத்த வரையில், இந்த குவாண்ட் மல்டி அசெட் ஃபண்ட் 11.72 சதவீத வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது. அதாவது, திட்டம் தொடங்கும் போது யாராவது ரூ.1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், முதலீடு 13 மடங்கு அதிகரித்து ரூ.13.25 லட்சத்தை எட்டியிருக்கும்.
SIP முதலீடு: ஒரு முதலீட்டாளர் 12 மாத காலத்திற்கு குவாண்ட் மல்டி அசெட் ஃபண்டில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால், வெறும் ரூ. 1.2 லட்சத்தை மட்டுமே முதலீடு செய்து, 1.4 லட்சம் பெற்றிருப்பீர்கள். அப்படியானால் ஆண்டுக்கு 34.33 சதவீத லாபம் கிடைத்திருக்கும்.
அதேபோல், ரூ.10,000 SIP முதலீட்டை 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்திருந்தால், உங்களுடைய 3.6 லட்சம் முதலீடு ரூ.5.31 லட்சமாக வளர்ந்திருக்கும், இதனால் 27.05 சதவீதம் லாபம் கிடைத்திருக்கும்.
அதேபோல், யாராவது 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ரூ.10,000 SIP முதலீடு செய்தால்.. உங்களுடைய 6 லட்சம் முதலீடு ரூ.12.47 லட்சமாக வளர்ந்திருக்கும், இதனால் 27.05 சதவீதம் லாபம் கிடைத்திருக்கும்.
ஏழு ஆண்டுகளில், ரூ.10,000 SIP முதலீடு 21.49 லட்சமாக உயர்ந்திருக்கும், இதனால் 26.42 சதவீதம் லாபம் கிடைத்திருக்கும்.
எப்பொழுதுமே வருமானம் அதிகமாக இருக்க வேண்டுமானால் அதற்கு நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும். அதற்கு சான்றாக ஒருவர் இந்த குவாண்ட் மல்டி அசெட் ஃபண்டில் 2001-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து முதலீடு செய்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் கடந்த 23 ஆண்டுகளில் மொத்தமாக 28.10 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருப்பார். அப்படியானால் தற்போது அவருடைய மொத்த கார்பஸ் 1.69 கோடியாக வளர்ந்திருக்கும்.
மேலும் ஒரு பண்டின் கடந்த கால பெர்ஃபார்மன்ஸ் வைத்து, இனிவரும் காலங்களில் அவை திறம்பட செயல்படும் என்று சொல்ல முடியாது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களும் கடந்த 20 ஆண்டுகளில் எந்த ஃபண்ட் திறம்பட செயல்பட்டுள்ளது என்பதை விவரிக்கவே. இதன் மூலம் நாங்கள் உங்களை முதலீட்டு முடிவு எடுக்க சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த ஒரு முதலீட்டு முடிவு எடுப்பதற்கு முன்பும் ஆராய்ந்து உங்கள் நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று சுய விருப்பத்துடன் முதலீடு செய்யுங்கள்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications