உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் உள்ள இந்த 7 லார்ஜ் கேப் ஃபண்டுகள் கடந்த 1 வருடத்தில் அதன் முதலீட்டாளர்களுக்கு 35% லாபத்தை அளித்துள்ளன. எந்தவொரு மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்வதற்கு முன், இந்தத் திட்டம் கடந்த காலத்தில் எவ்வளவு லாபம் கொடுத்துள்ளது என்பதைச் சரிபார்க்க வேண்டும். இது ஸ்மால் கேப், மிட் கேப், லார்ஜ் கேப் அல்லது ஏதேனும் ஆபத்தான திட்டமாக கூட இருக்கலாம். எனவே முதலீட்டாளர்கள் கடந்த 1 ஆண்டு அல்லது 3 ஆண்டு அல்லது 5 ஆண்டு வருமானத்தை தற்போதைய திட்டம் வரை சரிபார்க்க வேண்டும்.
அந்த வகையில், கடந்த 1 வருடத்தில் அபரிமிதமான லாபத்தைக் கொடுத்த சில லார்ஜ்கேப் பங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த லார்ஜ்கேப் திட்டங்கள் குறைந்தது 80 சதவீதத்தை லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகின்றன. இந்த லார்ஜ் கேப் பங்குகள் டாப் 100 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளாகும். அவற்றின் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் அவை இங்கு தரப்படுத்தப்பட்டுள்ளன.

நவம்பர் 8, 2024 வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இந்த 7 பங்குகளும் கடந்த ஓராண்டில் 35% வரை லாபம் ஈட்டியுள்ளன. லார்ஜ்கேப் பிரிவில் 32 திட்டங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த சொத்துக்கள் (AUMs) ரூ 3.79 லட்சம் கோடியாக உள்ளது.
இந்த 7 லார்ஜ் கேப் ஃபண்டுகள் 35 சதவீத வருமானத்தைக் கொடுத்துள்ளன. அவை என்ன என்பதை பார்க்கலாம்.
பந்தன் லார்ஜ்கேப் ஃபண்ட்: பந்தன் லார்ஜ்கேப் ஃபண்ட் ஆனது ஓராண்டில் சுமார் 35.40% உயர்ந்துள்ளது. இதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.1.745 கோடிகளாக உள்ளது.
டிஎஸ்பி டாப் 100 ஈக்விட்டி ஃபண்ட்: டிஎஸ்பி டாப் 100 ஈக்விட்டி ஃபண்ட் ஆனது ஒரு வருடத்தில் சுமார் 35.78% உயர்ந்துள்ளது. இதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.4,503 கோடியாக உள்ளது.
இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ்கேப் ஃபண்ட்: இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ்கேப் ஃபண்ட் ஆனது ஒரு வருடத்தில் 5.18 ஆக உயர்ந்துள்ளது. இதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.1,279.96 கோடியாக உள்ளது.
ஜேஎம் லார்ஜ் கேப் ஃபண்ட்: ஜேஎம் லார்ஜ் கேப் ஃபண்ட் ஆனது ஓராண்டில் சுமார் 34.73% வரை உயர்ந்துள்ளது. இதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.470.93 கோடியாக ஆக உள்ளது.
குவாண்ட் லார்ஜ் கேப் ஃபண்ட்: குவாண்ட் லார்ஜ் கேப் ஃபண்ட் ஆனது ஓராண்டில் சுமார் 37.54% உயர்ந்துள்ளது. இதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.2,577.89 கோடியாக ஆக உள்ளது.
வைட்ஓக் கேபிடல் லார்ஜ் கேப் ஃபண்ட்: வைட்ஓக் கேபிடல் லார்ஜ் கேப் ஃபண்ட் ஆனது கடந்த ஓராண்டில் சுமார் 34.67% வரை உயர்ந்துள்ளது. இதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.640.26 கோடியாக உள்ளது.
டாரஸ் லார்ஜ் கேப் ஃபண்ட்: டாரஸ் லார்ஜ் கேப் ஃபண்ட் ஆனது ஓராண்டில் சுமார் 34.91% உயர்ந்துள்ளது. இதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.50.22 கோடியாக உள்ளது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications