உங்கள் எதிர்காலத்திற்காக தொடர்ந்து சேமிக்க விரும்பினால், மியூச்சுவல் ஃபண்ட் உங்களுக்கு சிறந்த முதலீட்டு விருப்பமாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்டுகள் பல்வேறு வகையான நிறுவனங்களில் முதலீடு செய்யும் லார்ஜ் கேப், மிட் கேப், ஃப்ளெக்ஸி கேப், ஸ்மால் கேப் மற்றும் செக்டரல் ஃபண்டுகள் என பல்வேறு வகைகளில் வருகின்றன.
இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் செலுத்திய ரூ. 10,000 எஸ்ஐபி ஆனது தற்போது பல கோடி மதிப்புள்ள ஃபண்ட் ஆக மாறியுள்ளது. இந்த மூன்று மியூச்சுவல் ஃபண்டுகளும் முதலீட்டாளர்களை பணக்காரர்களாக்கியது. அந்த ஃபண்டுகள் என்ன என்பதை பார்க்கலாம்

கோடக் ஸ்மால் கேப் ஃபண்ட்: பிப்ரவரி 2005 இல் தொடங்கப்பட்ட கோடக் ஸ்மால்கேப் ஃபண்ட் இதுவரை 18.23% ஆண்டு வருமானத்தை அளித்துள்ளது. இந்த ஃபண்டில் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு முதலீட்டாளர் மாதந்தோறும் ரூ.10,000 எஸ்ஐபி செய்திருந்தால், அவருடைய முதலீடு ரூ.1.02 கோடியாக இருந்திருக்கும். இதில் செய்யப்பட்ட முதலீடு ரூ.18 லட்சம் மட்டுமே.
எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட்: செப்டம்பர் 2009 இல் தொடங்கப்பட்ட எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட், இதுவரை 20.74% வருமானத்தை அளித்துள்ளது. ஒரு முதலீட்டாளர் 15 ஆண்டுகளாக இந்த ஃபண்டில் ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி செய்திருந்தால், அவருடைய முதலீடு ரூ.1.25 கோடியாக இருந்திருக்கும். இதில் செய்யப்பட்ட முதலீடு ரூ.18 லட்சம் மட்டுமே
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்: செப்டம்பர் 2010 இல் தொடங்கப்பட்ட நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் இதுவரை 22.22% வருமானத்தை அளித்துள்ளது. ஒரு முதலீட்டாளர் கடந்த 14 ஆண்டுகளாக இந்த ஃபண்டில் ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி செய்திருந்தால், அவருடைய முதலீடு ரூ.1.27 கோடியாக இருந்திருக்கும். இதில் செய்யப்பட்ட முதலீடு ரூ.18 லட்சம் மட்டுமே ஆகும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி. (SIP) என்றால் என்ன?: ஒரு சிஸ்டமேட்டிக் முதலீட்டுத் திட்டம் அல்லது எஸ்.ஐ.பி. (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு முறையாகும். இதில் ஒரு முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை தேர்வு செய்து அதில் முறையான இடைவெளியில் முதலீடு செய்வதுதான் எஸ்.ஐ.பி. இந்த முதலீட்டுத் திட்டம் காலப்போக்கில் ஒரு சிறிய அளவிலான பணத்தை முதலீடு செய்வதன் மூலம் செயல்படுகிறது. அது அதிக வருமானத்தை பெறக்கூடிய, ஒருமுறை பெரும் தொகையை முதலீடு செய்வதற்கு மாற்றாக செயல்படுகிறது.
எஸ்.ஐ.பி. (SIP) எப்படி வேலை செய்கிறது?:நீங்கள் ஒரு சிஸ்டமேட்டிக் முதலீட்டு திட்டத்தை தேர்வு செய்தவுடன், தொகை தானாகவே உங்கள் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும். இவற்றில் சில முன்னரே தீர்மானிக்கப்பட்ட கால இடைவெளியில் நீங்கள் வாங்கும் மியூச்சுவல் ஃபண்டில் மீண்டும் முதலீடு செய்யப்படும். நாள் முடிவில், அதன் நிகர சொத்து மதிப்பைப் பொறுத்து உங்கள் மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்கள் ஒதுக்கப்படும்.


Click it and Unblock the Notifications