பொதுவாக இன்றைய காலகட்டங்களில் முதலீடு பற்றிய ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது எனலாம். அதிலும் ஓய்வுகாலத்திற்கான முதலீடு பற்றிய ஆர்வம் மிக அதிகரித்துள்ளது.
நமது குட் ரிட்டர்ன் வாசகர் ஒருவர், என்னுடைய பெயர் செல்வா, வயது 34. நான் ஏப்ரல் 2021 முதல் ஓய்வுக்கால நிதியாக 1 கோடி ரூபாய் சேர்க்க வேண்டும் என்பது என் இலக்கு.
அதற்கு நான் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும். தற்போது நான் ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட் (flexicap growth fund) மற்றும் யுடிஐ குரோத் ஃபண்டில் (uti growth fund) மொத்தம் ரூ.3000 முதலீட்டினை செய்து வருகிறேன். இது சரியாக உள்ளதா, மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமா? வேறு என்ன மாற்றம் செய்யலாம் என கேட்டிருந்தார். இது குறித்து நிதி ஆலோசகர்களிடம் பேசினோம்.
தற்போதைய நிலவரப்படி?
பொதுவாக ஒரு முதலீடினை செய்யும்போது பணவீக்கத்தினையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ரிட்டையர்ட்மென்ட் வயது 59 என எடுத்துக்கொண்டால், இன்னும் 25 ஆண்டுகளில் உங்கள் சேமிப்பைச் செய்து முடிக்க வேண்டும். உங்கள் முதலீடுகளை ஏப்ரல் 2021 முதல் செய்து வருகிறீர்கள் எனில், இதனை அப்படியே தொடரும் பட்சத்தில், வருடத்திற்கு 12% லாபம் என எடுத்துக் கொண்டாலும் கூட, மாதம் 3,000 ரூபாய் முதலீட்டின் மூலம், நீங்கள் செய்த முதலீடு 9,72,000 ரூபாயாகும்.
இதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் - ரூ63,38,209
மொத்த மதிப்பு - ரூ.73,10,209
படிப்படியாக அதிகரியுங்கள்
மேற்படி செல்வாவின் முதலீட்டினை அப்படியே தொடரும் பட்சத்தில், அவரின் முதிர்வு தொகை 73 லட்சம் ரூபாயாக மட்டுமே இருக்கும். எனினும் இந்த 27 வருட காலத்தில் அவரின் வருவாய் விகிதம்,சம்பளம் என்பது ஒரே அளவில் இருக்க வாய்ப்பில்லை. ஆக சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க அவரின் முதலீட்டினை அதிகரிக்கலாம்.
உதாரணத்திற்கு சராசரியாக மாதம் ரூ.6000 முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம்.
வருமானம் எதிர்பார்ப்பு - 12%
முதலீட்டு காலம் 25 ஆண்டுகள்
முதலீட்டு தொகை - 18,00,000
வட்டி வருவாய் - ரூ.95,85,811
மொத்த மதிப்பு - ரூ.1,13,83,811
இது போதாது?
பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிடும்போது 2022ல் உங்களுக்கு மாதம் 50,000 ரூபாய் தேவைப்படுகின்றது என வைத்துக் கொள்வோம். 25 ஆண்டுகள் கழித்து (2047ல்) உங்களுக்கு 2,14,594 ரூபாயாக தேவைப்படலாம். இங்கு பணவீக்கம் சராசரியாக 6% ஆக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது.
ஆக உங்களின் இலக்கு ரூ. 1 கோடி ரூபாய் என கூறுகிறீர்கள். ஆக பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிடும்போது, உங்களுக்கு மொத்தம் 25 ஆண்டுகள் கழித்து 4,29,18,707 ரூபாய் தேவைப்படும்.
எவ்வளவு தான் முதலீடு செய்யணும்?
பணவீக்கத்தின் அடிப்டையில் நீங்கள் உங்கள் இலக்கினை அடைய மாதம், 25,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அப்படி செய்யும் பட்சத்தில் 25 ஆண்டுகள் முதலீட்டின் மூலம், உங்கள் முதலீடு 75,00,000 ரூபாயாக இருக்கும்.இதே வட்டி வருவாய் 12% என கொண்டால் 3,99,40877 ரூபாயாக இருக்கும். ஆக மொத்தம் ஓய்வு காலத்திற்கான கார்ப்பஸ் ஆக உங்கள் கையில் 4,74,40,877 ரூபாயாக இருக்கும்.
சாத்தியமா?
இது பலருக்கும் சாத்தியமான விஷயமாக இல்லாவிட்டாலும், உங்களின் இலக்கு பெரியதாக உள்ள நிலையில், அதனை அடைய நிச்சயம் இந்த முதலீட்டினை செய்ய வேண்டியிருக்கும். அப்படி இல்லாவிட்டாலும், நிச்சயம் வருடத்திற்கு வருடம் உங்கள் முதலீட்டினை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அப்போது தான் இலக்கினை அடைவது சாத்தியமாகும்.
இதனையும் கருத்தில் கொள்ளுங்கள்
உங்களது இலக்கினை அடைவதற்கு திட்டமிடுவதற்கு முன்பே, மருத்துவ செலவினங்களுக்காக ஹெல்த் இன்சூரன்ஸ், நிலையான வருமானம் தரும், பிபிஎஃப், அல்லது என். எஸ்.சி, குழந்தைகளின் கல்விக்கான முதலீடு இப்படி பலவற்றையும் திட்டமிடுதல் வேண்டும். அதோடு அவசர தேவைக்களுக்காக விரைவில் பணம் எடுத்துக் கொள்ளும் ஒரு திட்டத்தில் போட்டு வைக்கலாம். இல்லையெனில் வங்கிக் கணக்குகளில் போட்டு வைக்கலாம்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications