அரசின் அசத்தலான தேசிய ஓய்வூதிய திட்டம்.. பல புதிய மாற்றங்கள்.. இனி இன்னும் பெஸ்ட்..!

இன்றைய காலகட்டத்தில் தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு மிகப்பெரிய கவலையே, தங்களது ஓய்வுகாலத்தில் பென்ஷன் இல்லையே என்பது தான்.

அந்த கவலையை போக்கும் விதமாக மத்திய அரசு அஞ்சலகம் மூலம் பல திட்டங்களை வழங்கி வருகின்றது.

அப்படியான திட்டங்களில் ஒன்று தான் நேஷனல் பென்ஷன் திட்டம். இந்த ஓய்வூதிய திட்டத்தினை, ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காகவும் மத்திய அரசு வழங்கி வருகின்றது.

மக்களின் நலன்

மக்களின் நலன்

முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு, பல அம்சங்களையும் சேர்த்து வழங்கும் ஒரு திட்டம் என்பிஎஸ். 2004ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இது பின்னர் 2009க்கு பிறகு தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லதரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

யாரெல்லாம் இந்த திட்டத்தில் இணையலாம்

யாரெல்லாம் இந்த திட்டத்தில் இணையலாம்

அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை மக்கள் என அனைவருமே, அரசின் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளும் இதில் உண்டு.

என்ன ஆவணங்கள் தேவை?

என்ன ஆவணங்கள் தேவை?

பொதுவாக எந்தவொரு சேமிப்பு திட்டங்களிலும் இணைய தேவைப்படும் ஆவணங்கள் தான் இந்த திட்டத்திலும் தேவை. குறிப்பாக முகவரிச் சான்று, அடையாளச் சான்றிதழ், பிறந்த தேதிக்கான சரியான ஆவணம் உளளிட்டவை தேவைப்படும். இந்த ஆவணங்களை முன்னிலை முனையம் என்று அழைக்கப்படும் POPs கொடுத்து இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் எப்படி இணைவது?

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் எப்படி இணைவது?

பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன. இது குறித்தான முழு விவரங்களை அறிய முதலீட்டாளர்கள் https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையத்தின் மூலம் அரசின் இன்னொரு திட்டமான அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தினையும் அறிந்து கொள்ளலாம்.

TIER-1 – எவ்வளவு குறைந்தபட்சம் செலுத்தலாம்?

TIER-1 – எவ்வளவு குறைந்தபட்சம் செலுத்தலாம்?

இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர், கணக்கு முடிவு பெறும் வரையில் அல்லது ஓய்வு பெறும் வரையில் நிதியினை திரும்ப பெற முடியாது. எனினும் இந்த தேசிய ஓய்வூதிய திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியேறும் போது மட்டுமே, இக்கணக்கினை முடித்து பணத்தை திரும்ப பெற முடியும். இதில் குறைந்தபட்சம் 6000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அவ்வாறு செலுத்தாவிடில் இந்த கணக்கு முடக்கப்படும்.

TIER-2 – எவ்வளவு குறைந்தபட்சம் செலுத்தலாம்?

TIER-2 – எவ்வளவு குறைந்தபட்சம் செலுத்தலாம்?

இந்த இரண்டாவது ஓய்வூதிய திட்டத்தில் சேருபவர்கள், இந்த திட்டத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் செலுத்திய பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கணக்கினை முதல் வகையான கணக்கிற்கான கூடுதல் இணைப்புக் கணக்காகவும் எடுத்து கொள்ளலாம். சந்தாதாரர் டயர் 1ல் கணக்கு தொடங்கியிருந்தால் மட்டுமே, டயர் 2ல் கணக்கு திறக்க முடியும். இந்த கணக்கில் நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 2000 ரூபாய் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.

புதிய விதிகளுக்கு வரவேற்பு

புதிய விதிகளுக்கு வரவேற்பு


அரசின் இந்த என்பிஎஸ் திட்டத்தில் சமீபத்தில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றியில் முக்கியமானது எஸ்பிஎஸ் சந்தாதாரர் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முழு கார்பஸினையும் பெற முடியும். இது முன்னர் பென்ஷனை முழுவதும் ஒரே நேரத்தில் பெற முடியாது. இதில் 60% மட்டுமே திரும்ப பெற முடியும். 40% நீங்கள் வருடாந்திர திட்டத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் மாத மாதம் உங்களுக்கு ஒரு வருமானமாக கிடைக்கும்.

நிபந்தனை உண்டு

நிபந்தனை உண்டு

எனினும் அவசர நிலை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக ஓய்வூதிய நிதியை எடுப்பதற்கு ஊக்குவிக்க கூடாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கார்பஸ் 5 லட்சம் ரூபாய் வரை இருந்தால் மட்டுமே வருடாந்திரா ஓய்வூதிய திட்டத்தை பெறாமல், முழு தொகையையும் திரும்ப பெற முடியும்.

வயது அதிகரிப்பு

வயது அதிகரிப்பு

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நுழைய அதிகபட்ச வயது 65 வயதாக இருந்த நிலையில், 70 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் முதிர்வு வயதும் 75 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு அரசின் இந்த திட்டத்தில் பல வரி சலுகைகளும் உள்ளதால், முதிர்வு காலத்திற்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

பணத்தை முன் கூட்டியே திரும்ப பெறுதல்

பணத்தை முன் கூட்டியே திரும்ப பெறுதல்

NPS கணக்கில் இருந்து முதிர்வுக்கு முன்பே ஒரு தொகையை பெற முன்னதாக 1 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 2.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் முதலீட்டை தேர்வு செய்ய வாய்ப்புண்டு. எனினும் பங்கு சந்தையில் அதிகபட்ச வரம்பு என்பது 50% மட்டுமே.

இதனையும் கொஞ்சம் கவனிங்க

இதனையும் கொஞ்சம் கவனிங்க

ஓய்வூதிய திட்ட முதலீட்டிலிருந்து ஒரு பகுதியை அவசரகால நிதியாக பெறுவது சாத்தியம் என்றாலும், ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து, மூன்றாண்டுகள் கழித்தே அவசரகால நிதியை பெறமுடியும். ஓய்வூதிய திட்டத்தில் முதிர்வு காலம் வரும் முன்னர், 3 முறை மட்டுமே அவசர கால நிதியை பெற முடியும். ஒவ்வொரு அவசரகால பெறுதல்களுக்கும் இடையில், குறைந்தது ஐந்தாண்டுகள் இடைவெளி அவசியமாகிறது. ஆனால், சிறப்பான மருத்துவ தேவைகளுக்கு இந்த விதி பொருந்தாது.

எதில்? எவ்வளவு?

எதில்? எவ்வளவு?

இந்த திட்டத்தில் உள்ள மற்றொரு சிறப்பம்சமே, இந்த திட்டத்தில் எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம் என்பது தான். வழக்கமாக 75% வரையில் ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம். இதனால் இந்த திட்டமானது அரசின் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் இபிஎஃப்பினை சற்று வருவாய் அதிகம் பெற வாய்ப்புகள் அதிகம்.

முன்னதாக திட்டமிடுங்கள்

முன்னதாக திட்டமிடுங்கள்

ஆக நீங்கள் இளம் வயதிலேயே சேமிக்க தொடங்கினால் பெரும் தொகையை பெற முடியும். இதே உங்கள் வயதின் அடிப்படையில் இந்த தொகைகள் மாறுபடலாம். ஆக முடிந்த மட்டில் முன்னதாக திட்டமிட்டால், நாம் கணிசமான தொகையை நமது ஓய்வுகாலத்தில் பெற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+