என்.எஸ்.சி. எனப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்திற்கு(National Savings Certificate), சமீபத்தில் மத்திய அரசு வட்டி விகிதத்தினை உயர்த்தியது. இந்த வட்டி விகிதமானது 7%ல் இருந்து, 7.7% ஆக அதிகரித்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது ஏப்ரல் 1 முதல் ஜூன் 30,2023 வரையிலான காலகட்டத்திற்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு மட்டும் அல்ல, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் பத்திரம், அஞ்சலகத்தின் மாதாந்திர சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட திட்டங்களுக்கும் வட்டி விகிதமானது அதிகரித்துள்ளது. தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டம் உட்பட பல சேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதத்துடன் சேர்த்து, 80 சி பிரிவின் கீழ் வரி சலுகையும் கிடைக்கும்.

வருமானம் எவ்வளவு? : இந்த திட்டத்திற்கு முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். இதில் 1000 ரூபாய் முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் கழித்து, 1403 ரூபாயாக முதிர்வாகியிருக்கும். இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீடு என்பது கிடையாது. இதில் குறைந்தபட்ச முதலீடாக 1000 ரூபாயில் இருந்து, 100 ரூபாயின் மடங்கில் முதலீடு செய்து கொள்ளலாம்.
இடையில் முடித்துக் கொள்ளலாமா? : இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் 80சின் கீழ் வரிச்சலுகை இருந்தாலும், முதிர்வின்போது கிடைக்கும் வருமானத்திற்கு வரி உண்டு. டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதில்லை. இந்த கணக்கினை மூன்று காரணங்களுக்காக முன் கூட்டியே முடித்துக் கொள்ளலாம். ஒன்று ஜாய்ண்ட் அக்கவுண்ட்டாக தொடங்கியிருந்தால், அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால் இடையில் முடித்துக் கொள்ளலாம். கோர்ட் ஆர்டர் இருந்தாலும் முடித்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications