இந்தியாவினை பொறுத்த வரையில் முதலீடு என்றாலே வங்கி வைப்பு நிதி என்பதை தாண்டி, பல ஆயிரம் திட்டங்கள் இருந்து வருகின்றன. எனினும் சாமானியர்கள் மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் பிக்சட் டெபாசிட் மற்றும் அஞ்சலக திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கலாம்.
வங்கியின் வரி சேமிப்பு பிக்சட் டெபாசிட் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம் என்பது 5 ஆண்டுகள் லாக் இன் காலமாக உள்ளன.
இந்த திட்டங்களில் சேமிப்பினை முதலீடு செய்வதற்கு முன்பாக, அவை எவ்வாறு செயல்படுகின்றன.மற்ற முக்கிய அம்சங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தேசிய சேமிப்பு பத்திரம் என்பது நிரந்தர வருமானம் தரும் சேமிப்பு திட்டமாகும். இது இந்திய அரசின் கீழ் இயங்கும் அஞ்சலக திட்டமாகும். இதில் சந்தை அபாயமும் இல்லை. பாதுகாப்பு என்பதும் உள்ளது. வரி சலுகையும் இருந்து வருகின்றது.
இதில் வட்டி விகிதம் அதிகம் என்பதால் வருமானமும் அதிகம். சமீபத்தில் தான் அரசு இந்த திட்டத்திற்கு வட்டி விகிதத்தினை அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.7% ஆக வழங்கப்படுகின்றது.
இந்த சேமிப்பு பத்திரத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். அதன் பிறகு 100-ந் மடங்கில் செய்து கொள்ளலாம். இதில் அதிகபட்ச வரம்பு என்பது இல்லை. இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் என்பது கூட்டு வட்டியாகும். எனினும் மொத்த பணமும் முதிர்வு காலத்தில் மட்டுமே கிடைக்கும்.
வரி சேமிப்பு பிக்சட் டெபாசிட் இந்த வரி சலுகை டெபாசிட் திட்டங்களுக்கு 80சி பிரிவின் கீழ் வரி சலுகை என்பது கிடைக்கும்.
எஸ்பிஐ-யில் வரி சேமிப்புடன் கூடிய 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு வட்டி விகிதம் 6.50% ஆக வழங்கப்படுகிறது.

இதில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து பிக்சட் டெபாசிட்டும், அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாயாக உள்ளது. இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் கிடைக்க வழிவகை செய்து கொள்ளலாம்.

சமீபத்திய வட்டி அதிகரிப்பில் தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு மட்டுமல்ல, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், மாதாந்திர சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட அஞ்சலக திட்டங்களுக்கு வட்டி அதிகரிப்பு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications