மாத மாதம் வருமானம் வேண்டுமா? அப்படின்னா அஞ்சலகத்தின் இந்த திட்டத்தினை பாருங்க..!

இந்தியாவினை பொறுத்தவரையில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், இன்றும் மக்களிடத்தில் மிக முக்கிய திட்டங்களாக இருப்பது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான்.

ஏனெனில் முதலீட்டுக்கு பங்கமில்லாத, பாதுகாப்பான நிரந்தர வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டங்களாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக நம்மில் பலருக்கும் இருக்கும் ஆசை என்றால் அது, இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலத்திலாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். மாத மாதம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பென்சன் தொகைபோல பென்ஷன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைப்போம். அந்த வகையில் நாம் இன்று பார்க்ககூடிய திட்டம் அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானம் தரும் சேமிப்பு திட்டமாகும்.

 வயதானவர்களுக்கு ஏற்ற திட்டம்

வயதானவர்களுக்கு ஏற்ற திட்டம்

அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம் மாத மாதம் வருமானம் பெற முடியும். இதனால் இது வயதானவர்களுக்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. இது வயதான காலகட்டத்தில் நிதி ரீதியிலாக ஒரு பாதிப்பினை கொடுக்கிறது.

குறைந்தபட்ச முதலீடு

குறைந்தபட்ச முதலீடு

ஒரு தனிநபர் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். இதனை கூட்டு கணக்காகவும் தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தினை தனிநபர் அல்லது கூட்டு சேமிப்பு திட்டமாகவும் தொடங்கிக் கொள்ள முடியும். கூட்டு சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்.

முதிர்வு காலம்

முதிர்வு காலம்

இந்த மாதாந்திர வருமான திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். இதனை முதிர்வுகாலம் முடிந்த பின்னரும் நீட்டித்துக் கொள்ளலாம். இது வயதானவர்களுக்கு மாதாந்திர வருமானமாக இருப்பதால், வயதானவர்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

அஞ்சலகத்தின் இந்த மாத வருவாய் திட்டத்திற்கு தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6% என்ற விகிதத்தில் உள்ளது. இதில் கூட்டு வட்டி கிடையாது. சிம்பிள் (Simple interest ) வட்டி தான். நீங்கள் அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தினை தொடங்கிய தேதியிலிருந்து, ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்க ஆரம்பிக்கப்படும்.

 முதிர்வு காலம் வரை வட்டி

முதிர்வு காலம் வரை வட்டி

அதேபோல முதிர்வு காலம் வரை இந்த வட்டி தொகை வழங்கப்படும். வட்டி தொகையை நீங்கள் மாதந்தோறும் எடுக்காவிட்டாலும், வட்டித் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது. வட்டி ஆரம்பம் ஆரம்பத்தில் எப்படியோ- திட்டம் முழுவதும் அப்படி தான் கிடைக்கும். அதே போல இந்த திட்டத்திற்கு அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வட்டி விகிதத்தினை மாற்றும். எனினும் உங்களுக்கு அதில் ஏதும் பிரச்சனை இருக்காது.

வட்டி டூ தொடர் வைப்பு நிதி திட்டம்

வட்டி டூ தொடர் வைப்பு நிதி திட்டம்

நீங்கள் இந்த திட்டத்தில் இணையும்போது 6.6% வட்டி விகிதம் எனில் அதே வட்டி விகிதம் தான் இறுதி வரையில் தொடரும். ஆக உங்களுக்கு வட்டி குறைந்தால், வருமானம் குறையுமே என்ற கவலை வேண்டாம். இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டியினை, உங்களது அஞ்சலக சேமிப்பு கணக்கில் கிரெடிட் செய்து கொள்ளலாம். அல்லது வங்கி கணக்கில் ஆகும்படியும் செய்து கொள்ளலாம். அதோடு இதில் கிடைக்கும் வட்டி விகிதத்தினை தொடர் வைப்பு நிதி திட்டமாகவும் தொடர்ந்து கொள்ளலாம்.

கூடுதல் முதலீடு செய்யலாமா?

கூடுதல் முதலீடு செய்யலாமா?

ஆக உங்களது முதலீடானது இந்த திட்டத்தில் இருமுறையில் பெருகும். ஆக இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும். இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக செலுத்தப்படும் வைப்பு தொகைக்கு, சாதாரண அஞ்சல் சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தின் அடிப்படையிலேயே வட்டி வழங்கப்படும்.

இடையில் முடித்துக் கொள்ளலாமா?

இடையில் முடித்துக் கொள்ளலாமா?

இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். எனினும் இடையில் அதாவது 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை மூடப்பட்டால் 2% வரை தொகை கழிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எனில் 1% கழிக்கப்படும். அஞ்சலத்தின் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய நீங்கள் அஞ்சலக சேமிப்பு கணக்கினை வைத்திருக்க வேண்டும்.

நாமினி வசதி உண்டா?

நாமினி வசதி உண்டா?


அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் நாமினி வசதி உண்டு. ஆக உங்களுக்கு பிறகு உங்கள் குடும்பத்தினர் இந்த சலுகையினை பெறுமாறு செய்து கொள்ளலாம். அதேபோல உங்களது முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி வருமானமாக கருதப்பட்டு, அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

மாத வருமானம்?

மாத வருமானம்?

இந்த திட்டத்திலும் காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாறுபடும். எவ்வளவு தொகைக்கு எவ்வளவு கிடைக்கும்?

ரூ.1 லட்சம் முதலீடு - மாதம் 550 ரூபாய் வட்டி கிடைக்கும்.

ரூ.2 லட்சம் முதலீடு - மாதம் 1,100 ரூபாய் வட்டி கிடைக்கும்.

ரூ.3 லட்சம் முதலீடு - மாதம் 1,650 ரூபாய் வட்டி கிடைக்கும்.

ரூ.4 லட்சம் முதலீடு - மாதம் 2,200 ரூபாய் வட்டி கிடைக்கும்.

ரூ.4.5 லட்சம் முதலீடு - மாதம் 2,475 ரூபாய் வட்டி கிடைக்கும்.

ரூ.9 லட்சம் முதலீடு - மாதம் 4,950 ரூபாய் வட்டி கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+