பிபிஎஃப் (PPF) என்றாலே 15 வருஷம் பணம் லாக் ஆகிடும் என்ற பயமா? கவலையை விடுங்கள், உங்கள் பணத்தை நீங்களே கையாளுவதற்கு அரசு சில முக்கிய வழிகளை திறந்து வைத்துள்ளது. 15 ஆண்டுகள் வரை காத்திருப்பது அதிக லாபம் என்றாலும், உங்கள் வாழ்க்கையின் அவசரத் தேவைகளான கல்வி, திருமணம் அல்லது மருத்துவ செலவுகளுக்கு நடுவிலேயே கை கொடுக்கிறது இந்த திட்டம்.
7-வது நிதியாண்டு தொடங்கிவிட்டால், உங்கள் கணக்கில் இருக்கும் தொகையில் 50% வரை, நீங்கள் பகுதி வித்டிராயல் செய்து கொள்ளலாம். அதுவும் ஒரு பைசா கூட வரி கட்ட தேவையில்லை. அது எப்படி சாத்தியம்? எவ்வளவு பணம் எடுக்கலாம்? இதற்கான நிபந்தனைகள் என்ன? 2026-ன் புதிய விதிமுறைகளின் படி உங்கள் பிபிஎஃப் பணத்தை ஸ்மார்ட்டாக எப்படி பெறலாம்.

இந்திய அரசால் 1986-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பொது வருங்கால வைப்பு நிதி, இந்தியாவில் உள்ள பாதுகாப்பான மற்றும் அதிக பலன் தரக்கூடிய நிதி முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். தொடர்ச்சியான மற்றும் நீண்ட கால ஆதாயங்களை வழங்கும் இத்திட்டம், இந்திய குடிமக்கள் தங்களின் எதிர்காலத்திற்காக தேர்ந்தெடுக்கக் கூடிய மிகச் சிறந்த முதலீட்டு கருவிகளில் ஒன்றாக திகழ்கிறது.
அரசின் பின்புலம் உள்ள சேமிப்பு திட்டமான இதில், நிலையான வருமானம் கிடைக்கிறது. வரிச் சலுகையும் கிடைக்கிறது. மேலும் முதிர்வு காலத்திற்கு ஒரு கணிசமான கார்ப்பஸ்-ஐ பெற முடியும். தற்போதைய சூழலில் இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.1% கிடைக்கிறது. இருப்பினும் 15 ஆண்டுகள் முதிர்வு காலம் என்பதால் பலரும் இந்த திட்டத்தை தவிர்க்கின்றனர். ஆனால் இதன் மூலம் பணிபுரியும் நபர்கள் நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய கார்ப்பஸ்-ஐ உருவாக்கி கொள்ள முடியும், இதன் மூலம் ஓய்வு காலத்திற்கு பின் தங்கள் வாழ்வாதாரத்தை, எவ்வித சிரமமும் இன்றி அமைத்துக்கொள்ள முடியும்.
பிபிஎஃப் திட்டத்தின் கீழ் நீங்கள் செய்யும் முதலீடு, முதிர்வுத் தொகை மற்றும் கிடைக்கும் வட்டி ஆகிய மூன்றுக்கும் வரி விலக்கு உண்டு.
பிபிஎஃப்-ல் அடிப்படையில் மூன்று வகையான பணம் எடுக்கும் முறைகள் உள்ளன. ஒன்று பகுதி வித்டிராயல், முதிர்வுக்கு முன்னரே முழுமையாக மூடுதல் மற்றும் முதிர்வுக்கு பின் பணம் எடுத்தல். 15 ஆண்டு கால லாக்-இன் காலம் முடிவதற்கு முன்பே உங்கள் பணத்தை எப்படி எடுப்பது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.உங்கள் முதலிட்டில் பாதியை எடுக்க வேண்டுமெனில் கணக்கு தொடங்கி ஐந்து ஆண்டுகள் முழுமையாக முடிந்த பிறகு, எவ்வித அபராதமும் இன்றி, உங்கள் கணக்கில் உள்ள இருப்பில் 50% வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
அவசரத் தேவைகளுக்காக உங்கள் பிபிஎஃப் கணக்கை முழுமையாக மூட அரசு அனுமதி அளிக்கிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. உங்கள் பிபிஎஃப் கணக்கு தொடங்கி 5 நிதியாண்டுகள் முடிந்த பிறகு மட்டுமே இதை செய்ய முடியும். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து உங்களுக்கு வழங்கப்பட்ட வட்டியில் 1% குறைத்து அசலுடன் வழங்கப்படும். இதுவும் கூட கணக்கு வைத்திருப்பவர், கணவன்/மனைவி அல்லது குழந்தைகளுக்கு ஏற்படும் தீவிர மருத்துவ சிகிச்சைகள் அல்லது குழந்தைகளின் உயர்கல்வி செலவுகள், கணக்கு வைத்திருப்பவர் வெளிநாட்டிற்கு இடம்பெயர்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக இடையில் முடித்து கொள்ளலாம்.
இதெல்லாவற்றையும் தாண்டி உங்கள் 15 ஆண்டு கால முதலீடு முடிந்தால், வட்டியுடன் கூடிய 100% தொகையையும் வரி ஏதுமின்றி எடுத்துக்கொள்ளலாம். அதை தாண்டியும் ஒருவர் இந்த கணக்கை நீட்டிக்க நினைத்தால், 5 ஆண்டு தொகுப்புகளாக நீட்டிக்கலாம். நீட்டிக்கப்பட்ட 5 ஆண்டு காலத்தில், அந்த தொடக்கத்தில் இருந்த இருப்பில் 60% வரை மட்டுமே எடுக்க முடியும். அதை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பணம் எடுக்க அனுமதி உண்டு.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications