பலரும் பிக்சட் டெபாசிட்களை பாதுகாப்பான முதலீடு என்று எண்ணுவதுண்டு. இதனால் தங்களிடம் சிறிது பணம் சேர்ந்தால் உடனே அவற்றை FD-யில் போட்டு விடுவார்கள். இப்படி இருக்கும் சிலருக்கு திடீரென அவசர செலவு ஏற்பட்டால் அப்போதும் இந்த பிக்சட் டெபாசிட் பணத்தை பாதியில் எடுத்துக் கொள்ளலாமா? என்ற யோசனை தான் முதலில் வரும்.
முதிர்வு காலத்திற்கு முன்பே FD-யில் போட்ட பணத்தை எடுப்பதா? அல்லது அதற்கு எதிராக கடன் வாங்குவதா? என்ற குழப்பம் அவ்வப்போது வருவதுண்டு. பிக்சட் டெபாசிட்டை பாதியில் எடுத்தால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். அதே சமயம் பிக்சட் டெபாசிட்டுக்கு எதிராக கடன் வாங்கினால்.. அவர்கள் சொல்லும் காலத்திற்குள் பணத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்தி விட வேண்டும். இந்தப் பதிவில் எது நமக்கு லாபகரமான தேர்வு? என்பது குறித்து பார்ப்போம்.

அவசர காலங்களில் பணம் தேவைப்படும் போது பிக்சட் டெபாசிட்டை பாதியில் எடுப்பதா? அல்லது கடன் வாங்குவதா? என்ற பிரச்சனைக்கு தீர்வு எதுவும் இல்லை. ஏனெனில் சில சூழ்நிலை வரும்போது FD முதலீட்டை பாதியில் எடுத்துக் கொள்ளலாம். சில சூழ்நிலையில் FD-க்கு எதிராகக் கடன் வாங்கலாம்.
உதாரணமாக நீங்கள் ரூ.10 லட்சம் பிக்சட் டெபாசிட் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது உங்களுக்கு ரூ.5 லட்சம் பணம் தேவைப்படுகிறது என்றால்.. FD முதலீட்டை பாதியில் எடுக்கலாமா? அல்லது அதற்கு எதிராக கடன் வாங்கலாமா? என்பது குறித்து பார்ப்போம்.
FD-க்கு எதிரான கடன் என்றால் என்ன?: FD-க்கு எதிரான கடன் என்பது பிக்சட் டெபாசிட் தொகையை வங்கிகள் பிணையமாக வைத்துக்கொண்டு கடன் வழங்கும். எப்படி நகையை கொண்டு அடமானம் வைத்து பணம் பெறுகிறோமோ? அதே போல உங்களுடைய FD முதலீடு வங்கியில் இருக்கும். அதற்கு எதிராக கடன் பெற முடியும். டெபாசிட் தொகையில் 90 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை கடனாகப் பெற முடியும்.
மைனர் பெயரில் பிக்சட் டெபாசிட் கணக்கு திறக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு கடன் கிடைக்காது. அதேபோல சில பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக கடன் பெற முடியாது. உதாரணமாக ஐந்து ஆண்டு வரி சேமிப்பு பிக்சட் டெபாசிட்டை எடுத்துக்கொள்ளலாம். அதை வைத்து உங்களால் கடன் பெற முடியாது.
பிரேக்கிங் FD: முன்கூட்டியே FD பணத்தை பெற நினைத்தால் அதைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இதை பிரேக்கிங் FD என்று கூறுவார்கள். ஒரு முதலீட்டாளர் முதிர்வு தேதிக்கு முன்பே FD கணக்கை மூட முடியும்.
நீங்கள் பாதியில் உங்கள் FD முதலீட்டை திரும்பப் பெற்றால்.. அதற்கு உங்கள் முதலீட்டுத் தொகையில் 1 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும். நீங்கள் பிக்சட் டெபாசிட் வட்டிக்கு வரி செலுத்த வேண்டியிருந்தால், இந்த அபரதத்தோடு சேர்த்து இழப்பு அதிகமாக இருக்கலாம். இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம்.
நீங்கள் ரூ.10 லட்சம் பணத்தை 8 சதவீத வட்டி விகிதத்தில் 2 வருட காலத்திற்கு பிக்சட் டெபாசிட் செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 1 வருடம் கழித்து உங்களுக்கு ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் எந்த விருப்பத்தை தேர்வு செய்வது?
பிரேக்கிங் FD: நீங்கள் 30 சதவீத வருமான வரி அடுக்கின் கீழ் வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் வரும் வட்டியில் 2.4 சதவீதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும். தற்போது உங்களுக்கு கிடைக்கும் உண்மையான வட்டி விகிதம் என்னவோ 5.6 சதவீதம் மட்டுமே. 5.6 சதவீதம் வட்டி கிடைத்தால் உங்கள் வட்டி வருமானத்தில் ரூ. 28,000 வரை செலுத்த வேண்டும். அதோடு பாதியில் பிக்சட் டெபாசிட்டை எடுப்பதற்கு 10 லட்சத்தில் 1 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டால் 10,000 ரூபாய் செலுத்த வேண்டும். இதையெல்லாம் சேர்த்து பார்த்தால் ரூ. 38,000 வரை உங்களுக்கு வட்டி இழப்பு ஏற்படும்.
எனவே நீங்கள் எந்த வரி அடுக்கின் கீழ் வருகிறீர்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
FD-க்கு எதிராக கடன்: நீங்கள் FD-க்கு எதிராக கடன் வாங்கினால் உங்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் கூடுதல் வட்டி வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக 8 சதவீதம் உங்களுக்கு வட்டி கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். FD-க்கு எதிராக நீங்கள் கடன் பெற்றால் 10% வட்டி செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் கடனுக்கு வட்டி தொகையாக ரூ. 50,000 செலுத்த வேண்டி வரலாம். எனவே உங்கள் வருமான வரி அடுக்கின் படி எவ்வளவு இழப்பு ஏற்படும்?, கடன் பெற்றால் எவ்வளவு இழப்பு ஏற்படும்? என்பதை கணக்கிட்டு அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டும்.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications