இந்தியாவின் முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டு இன்று ஒவ்வொரு நபருக்கும் தேவைப்படும் ஆவணமாக இருக்கிறது. பல்வேறு அரசு மற்றும் தனியார் சேவைகளைப் பெற ஆதார் அடையாளம் கட்டாயமாக இருக்கும் நிலையில், அதன் பயன்பாட்டை இன்னும் எளிமைப்படுத்தும் வகையில் புதிய டிஜிட்டல் ஆதார் Appஐ இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய App, இந்தியர்களின் அடையாள உறுதிப்படுத்தல் முறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முக அங்கீகாரம் (Face Authentication), QR Code வழி ஸ்கேன், 100% பாதுகாப்பு, தனியுரிமை பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இந்த Appன் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்காக மிக முக்கியமான ஒரு முன்னேற்றமாக கருதப்படுகிறது.

புதிய Appன் முக்கிய அம்சங்கள்:முக அங்கீகாரம் (Face Authentication), இந்த அம்சத்தின் மூலம் ஆதார் வைத்திருப்பவர் தான் உண்மையான உரிமையாளர் என்பதை உறுதி செய்ய முடியும். மற்றவரால் இந்த Appல் தவறாக நுழைய முடியாது. UPI பணப்பரிவர்த்தனை செய்வது போல, இந்த Appன் மூலம் ஹோட்டல்கள், கடைகள், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் QR Code ஸ்கேன் செய்வதன் மூலம் உடனடி அடையாள உறுதிப்படுத்தல் செய்யலாம். பயனர் விருப்பப்படி தேவையான டேட்டா மட்டுமே பகிர முடியும். முழுமையான தனியுரிமை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இனி ஹோட்டல், கடை, அரசு அலுவலகங்களில் ஆதார் copy கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
Appன் பயன்கள்: இப்போது ஆவணங்கள் காணாமல் போகும் அல்லது கசிந்து போகும் ஆபத்து குறைந்துவிடும். இந்த App இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பயனர் நட்பு மற்றும் பாதுகாப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆதாரின் போலியான copyகளால் ஏற்படும் மோசடிகளை முற்றிலும் தடுக்கும் வகையில் இந்த App வடிவமைக்கப்பட்டுள்ளது. வங்கிகள், அரசு சேவைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்து துறைகளும் இதை எதிர்காலத்தில் பயன்படுத்தலாம்.
பீட்டா பரிசோதனை மற்றும் எதிர்கால திட்டங்கள்: இந்த App தற்போது பீட்டா சோதனையில் உள்ளது. ஆதார் சம்வாத் நிகழ்வில் பங்கேற்றுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர் முதலில் இதைப் பயன்படுத்தும் வாய்ப்பு பெறுகின்றனர். UIDAI (Unique Identification Authority of India) இந்த Appஐ விரைவில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த App வெற்றிகரமாக பயன்பாட்டுக்கு வந்தால் பல்வேறு துறைகள் அதை இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அரசு சேவைகளில், விவசாயிகள் சான்றிதழ் பெறுவது, பஞ்சாயத்து சேவைகள் போன்றவற்றில் உடனடி ஆதார் அடையாள உறுதி செய்ய முடியும். தனியார் துறைளில், வங்கிகள், சுகாதார மையங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை இந்த Appஐ நவீன அடையாள உறுதிப்படுத்தல் முறையாக பயன்படுத்தலாம். இனி ஆன்லைனில் ஆதார் OTP பின்பற்றாமல் Face Authentication மூலம் உடனடியாக அடையாளம் உறுதி செய்யும் வசதி கிடைக்கும்.
சவால்கள் மற்றும் எதிர்பார்ப்பு: இதற்கான பெரிய சவால், கிராமப்புற மக்கள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய அறிவு இல்லாதவர்களிடம் இதை எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பது தான். அதே நேரத்தில், இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு முக்கியக் கட்டமாக இது மாறும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
மொத்தத்தில், இந்த புதிய ஆதார் App இந்தியாவின் அடையாள ஆதார முறையை ஒருங்கிணைத்து பாதுகாப்பான மற்றும் முன்னேற்றமான டிஜிட்டல் வாழ்க்கைக்குத் தள்ளுகிறது. எதிர்கால இந்தியா முழுவதும் ஆதார் பயன்பாட்டை மிக அதிக அளவில் பாதுகாப்பாகவும் எளிதாகவும் மாற்றும் வகையில் இந்த App வரவேற்கத்தக்க முன்னேற்றம்.


Click it and Unblock the Notifications