இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரிய அளவில் பரவவில்லை என்றாலும், நம்மை பயமுறுத்தும் அளவுக்கு சுமாராக 37,300 பேருக்கு பரவி இருக்கிறது. சுமார் 1,218 பேர் மரணித்து இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ், உலக வர்த்தகம், வியாபாரம், போக்குவரத்து மற்றும் வங்கிச் சேவைகளிலேயே பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்து இருக்கின்றன.
அப்படி இந்த மே 01, 2020 வெள்ளிக் கிழமை முதல் அமலுக்கு வந்த சில ஏடிஎம் நடைமுறைகள் மற்றும் பென்ஷன் நடைமுறைகளைப் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
பென்ஷன்
Employees Provident Fund Organisation (EPFO) அமைப்பு, இந்த மே 2020 முதல் முழு பென்ஷனைக் கொடுக்க இருக்கிறார்களாம். இதனால் சுமார் 6.30 லட்சம் பென்ஷனர்கள் மாதா மாதம் பயன் பெறுவார்களாம். இதனால் அரசுக்கு சுமாராக 1,500 கோடி ரூபாய் செலவாகுமாம்.
ரயில்வேஸ்
ரயிலில் பயணம் செய்ய, முன் பதிவு செய்பவர்கள், ரயிலில் ரிசர்வேஷன் சார்ட் போடுவதற்கு 4 மணி நேரத்து முன்பு வரை போர்டிங் ஸ்டேஷனை மாற்றலாம். போர்டிங் ஸ்டேஷனை மாற்றுபவர்கள், ரயில் டிக்கெட்டை ரத்து செய்தாலோ அல்லது பயணம் மேற்கொள்ளவில்லை என்றாலோ ரீஃபண்ட் கொடுக்கமாட்டார்களாம்.
எப்போதில் இருந்து
இப்போது வரை இந்திய ரயில்வேஸ், தன் சேவைகளை தொடங்கவில்லை. எல்லாமே ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மீண்டும் இந்திய ரயில்வேஸ் தன் பயணிகள் ரயில் சேவைகளை தொடங்கும் போது இந்த விதிமுறைகளை எல்லாமே தவறாமல் கடைபிடிகுமாம். எனவே ரயில் பயணிகள் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்.
விமான சேவை
ஏர் இந்தியாவில் மே 01, 2020-க்குப் பிறகு, தங்கள் விமான டிக்கெட்களை ரத்து செய்கிறார்கள் என்றால், கூடுதலாக கேன்சலேஷன் கட்டணம் வசூலிக்கப்படாதாம். டிக்கெட் புக் செய்து 24 மணி நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்தாலோ அல்லது டிக்கெட்டை மாற்றினாலோ, ஏர் இந்தியா எந்த கட்டணமும் வசூலிக்காதாம்.
ஏடிஎம் புதிய நடைமுறை
இந்தியாவில் கணிசமானவர்களுக்கு அரசு வங்கிக் கணக்குகளை தொடங்கிக் கொடுத்து இருக்கிறது. பெரும்பாலான பாமர மக்களுக்கு இன்று வரை ஏடிஎம் தான் அவர்களின் முதல் வங்கி நண்பன். எனவே எல்லா தரப்பு மக்களும் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும் ஏடிஎம் வழியாக கொரோனா வைரஸ் பரவி விடக் கூடாது என சில புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்து இருக்கிறார்களாம்.
என்ன விஷயம்
புதிய நடைமுறைகள் படி, ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரமும், ஒருவர் பயன்படுத்திய பின், சுத்தப்படுத்தப்பட வேண்டும் (infection-free after every use) எனச் சொல்கிறார்கள். நாள் ஒன்றுக்கு ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் ஏடிஎம் அறைகளை, நகராட்சி தரப்பில் இருந்து, இரண்டு முறை சானிட்டைஸ் செய்வார்களாம்.
சென்னையில் தொடக்கம்
இந்த நடைமுறையை, தமிழகத்தில் சென்னையிலும், உத்திரப் பிரதேசத்தின் காசியாபாத்திலும் தொடங்கி இருக்கிறார்களாம். அப்படி ஒருவேளை முறையாக சானிட்டைஸ் செய்யப்படவில்லை என்றால், ஏடிஎம் சீல் செய்யப்படும் என மணி கன்ட்ரோல் வலை தளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது. ஆக மக்களே ஏடிஎம் பயன்படுத்தும் போது கூட உஷாராக இருங்கள்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications