இந்தியாவில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிக் கணக்குகள் தொடர்பான சில புதிய விதிகளை கடந்த ஜனவரி 1 முதல் அமல்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் வங்கித் துறையின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலுக்கு உதவும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் வாடிக்கையாளர்களின் நிதி மேலாண்மையில் முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த மாற்றங்கள் வங்கி கணக்குகளின் பராமரிப்பு, பரிவர்த்தனை முறைகள், மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியவை.
புதிய விதிமுறைகளை இன்று முதல் அமல்படுத்தியுள்ளன. இதில் முக்கியமாக மினிமம் பேலன்ஸ் (Minimum Balance) மற்றும் ATM பணம் எடுக்கும் கட்டணங்களில் (ATM Withdrawal Charges) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளை தெரிந்துகொள்ளாமல் இருப்பது, வாடிக்கையாளர்களுக்கு அதிக கட்டணச் செலவாக முடிவடையக்கூடும் என்பதால், உடனே இவற்றை பற்றித் தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

செயலற்ற வங்கி கணக்குகள் (Dormant Accounts): இரண்டு ஆண்டுகளாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படாத கணக்குகள் செயலற்ற கணக்குகளாக கருதப்படுகின்றன. இத்தகைய கணக்குகள் 2025 ஜனவரி 1 முதல் மூடப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இன்ஆக்டிவ் வங்கி கணக்குகள் (Inactive Accounts): ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எந்த நடவடிக்கையும் செய்யப்படாத கணக்குகள் இன்ஆக்டிவ் கணக்குகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இத்தகைய கணக்குகளும் மூடப்படும்.
ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் (Zero Balance Accounts): நீண்ட காலமாக எந்தத் தொகையும் வரவு வைக்கப்படாமல், பூஜ்ஜிய இருப்புடன் உள்ள கணக்குகள் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளாக கருதப்படுகின்றன. இத்தகைய கணக்குகள் மூடப்படும் அல்லது குறைந்தபட்ச இருப்புத் தேவைகள் விதிக்கப்படலாம்.
எந்த வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது?
- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI):
- முந்தைய மினிமம் பேலன்ஸ் - ரூபாய் 3,000,புதிய மினிமம் பேலன்ஸ் -ரூபாய் 5,000
- கனரா பேங்க் (Canara Bank):
- முந்தைய மினிமம் பேலன்ஸ் - ரூபாய் 1,000,புதிய மினிமம் பேலன்ஸ் - ரூபாய் 2,500
- பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB):
- முந்தைய மினிமம் பேலன்ஸ் -ரூபாய் 1,000,
- புதிய மினிமம் பேலன்ஸ் -ரூபாய் 3,500
இந்த மினிமம் பேலன்ஸ் அளவை பராமரிக்க தவறினால், வாடிக்கையாளர்கள் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. ATM பணம் எடுக்கும் கட்டணங்களில் முக்கிய மாற்றங்கள்
இந்தியாவின் பல்வேறு வங்கிகள் ATM Withdrawal தொடர்பாக புதிய கட்டணங்களை அறிவித்துள்ளன. குறிப்பாக, மெட்ரோ நகரங்கள் (Metro Cities) மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்கள் (Non-Metro Cities) என வேறுபடுத்தி விதிகள் மாற்றப்பட்டுள்ளன. மற்ற வங்கிகளின் ATM-களை பயன்படுத்தும் போது, இலவச வரம்பை கடந்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூபாய் 30 கட்டணம் விதிக்கப்படும்.
எனவே ,விதிமுறைகளின் நோக்கங்கள் என்னவென்றால், செயலற்ற மற்றும் இன்ஆக்டிவ் கணக்குகளை மூடுவதன் மூலம், மோசடிகள் மற்றும் தவறான பயன்பாடுகளைத் தடுக்க முடியும் என்றும் செயல்படாத கணக்குகளை நீக்குவதன் மூலம், வங்கிகள் தங்களின் மேலாண்மையை மேம்படுத்தலாம் என்றும் புதிய விதிமுறைகள் வாடிக்கையாளர்களை KYC (Know Your Customer) விவரங்களைப் புதுப்பிக்கத் தூண்டும், இதனால் டிஜிட்டல் வங்கி சேவைகளின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த மாற்றங்கள் குறித்து வங்கிகள் தங்கள் விதிமுறைகளை தொடர்ந்து புதுப்பித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் அதிக கட்டணச்செலவுகளை தவிர்க்க தங்களின் வங்கி கணக்குகளின் நிலையை சரிபார்த்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மேலும்,உங்கள் வங்கியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்த, உடனே வங்கி கிளையினைத் தொடர்புகொள்ளவும்!
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications