புதுகார் வாங்குவது முக்கியமில்லை.. இதை தெரியாம வாங்கிட்டா அவ்வளவு தான்.. பணம் பாஸ் பணம்..!!

நாம் சம்பாதித்த பணத்தை ஒவ்வொரு ரூபாயாகச் சேமித்து, பல வருடக் கனவை நனவாக்கி புத்தம் புதிய கார் வாங்கும் அந்தத் தருணம் வாழ்வில் மறக்க முடியாதது. கார் என்பது வெறும் வாகனம் மட்டுமல்ல, வெறும் ஆடம்பரம் செலவு இல்லை; கார் குடும்பத்தின் உறுப்பினர் போன்றது, குடும்பத்தின் பாதுகாப்பு, மகிழ்ச்சி, மரியாதை என எல்லாவற்றையும் ஒருசேர தரும் ஒரு முதலீடு.

இப்படிப்பட்ட ஒரு முதலீட்டில் 100ல் 97 பேர் மறக்கும் ஒரு விஷயம் தான் டிசிஎஸ் தொகை. ஆம் கார் வாங்கும் போது நாம் செலுத்தும் வரியை திரும்ப பெறும் ஒரு வாய்ப்பு உள்ளது. இதை பலரும் மறந்துவிடுக்கின்றனர்.

புதுகார் வாங்குவது முக்கியமில்லை.. இதை தெரியாம வாங்கிட்டா அவ்வளவு தான்.. பணம் பாஸ் பணம்..!!

புதிய கார் வாங்கும் போது டீலரிடம் கொடுக்கும் பணத்தில் ஒரு சிறிய பகுதியை அரசு "டாக்ஸ் கலெக்டட் அட் சோர்ஸ்" (TCS) என்ற பெயரில் வாங்குகிறது. கார் விலை 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் 1 சதவீத TCS கட்டாயம். 15 லட்ச ரூபாய் கார் என்றால் 15,000 ரூபாய், 30 லட்ச ரூபாய் SUV என்றால் 30,000 ரூபாய் - இப்படி டீலரே அரசுக்கு செலுத்துகிறது.

ஆனால் இந்தப் பணம் உங்களுக்கு திரும்பக் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஒவ்வொரு வருடமும் வருமான வரி தாக்கல் செய்யும் போது இதை எளிதாகத் திரும்பப் பெறலாம் அல்லது வரி கழிக்கலாம்.

TCS என்றால் என்ன? ஏன் கொடுக்க வேண்டும்?
கார், நகை, வெளிநாட்டுப் பயணம் போன்ற பெரிய செலவுகளின் போது அரசு முன்கூட்டியே சிறிய தொகையை வரியாக வாங்குகிறது. இதற்குப் பெயர் TCS. இது உங்கள் வருமான வரி கணக்கில் சேர்க்கப்பட்டு, நீங்கள் அதிக வரி செலுத்த வேண்டியிருந்தால் இதை கணக்கிட்டு கழித்துக்கொள்ளலாம் அல்லது கூடுதலாக செலுத்தியிருந்தால் திரும்பக் பெற முடியும். பலர் இதை "டீலரின் கூடுதல் கட்டணம்" என்று நினைத்துக்கொள்வதால் இத்தொகையை இழந்துவிடுகிறார்கள்.

எப்படி திரும்பப் பெறுவது? மிக எளிய வழி
கார் வாங்கிய உடனே டீலரிடம் "ஃபார்ம் 27D" கேளுங்கள். இது கார் வாங்கும் போது நீங்கள் TCS செலுத்தியதற்கான சான்று. இந்த ஃபார்ம் இல்லாமல் பணம் திரும்பக் கிடைக்காது. அடுத்து வருமான வரி தாக்கல் செய்யும் போது உங்கள் ஃபார்ம் 26AS-ஐ பாருங்கள். அதில் TCS தொகை காட்டப்படும்.

இதை "Advance Tax" அல்லது "TCS" என்ற பிரிவில் சேர்த்து, உங்கள் மொத்த வரி கணக்கீட்டில் கழித்துக்கொள்ளுங்கள். வரி அதிகமாக செலுத்தியிருந்தால் அது ரீஃபண்டாக உங்கள் வங்கிக் கணக்குக்கே வந்துவிடும்.

ஏன் இதைப் பலர் தவறவிடுகிறார்கள்?
பெரும்பாலான டீலர்கள் இதைத் தானாகச் சொல்வதில்லை. கார் வாங்குபவர் கேட்கும் போதுதான் ஃபார்ம் 27D கொடுப்பார்கள். பலர் "வரி விஷயம்" என்றதும் பயந்து விட்டுவிடுகிறார்கள். ஆனால் இது உங்கள் பணம்.

15 லட்ச ரூபாய் கார் வாங்கினால் 15,000 ரூபாய், 30 லட்ச ரூபாய் கார் வாங்கினால் 30,000 ரூபாய் - இது சிறிய தொகை இல்லை. குறிப்பாக தவணை முறையில் கடன் வாங்கி கார் வாங்குபவர்களுக்கு இந்த ரீஃபண்ட் பெரிய உதவியாக இருக்கும்.

புதிதாக கார் வாங்கினால் என்ன செய்ய வேண்டும்?
கார் டெலிவரி வாங்கும் போதே டீலரிடம் ஃபார்ம் 27D கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். இன்வாய்ஸில் TCS தொகை தனியாகக் காட்டப்பட்டிருக்க வேண்டும். அடுத்த வருமான வரி தாக்கல் செய்யும் போது ஃபார்ம் 26AS-ஐ சரிபார்த்து, TCS தொகையை க்ளெய்ம் செய்யுங்கள். இதனால் உங்கள் வரி குறைவாக வரும் அல்லது ரீஃபண்ட் கிடைக்கும். இது உங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணம் - ஒரு ரூபாயைக் கூட விட்டுவிடாதீர்கள்.

தங்கம், கார், வீடு வாங்கும் போது செலுத்தும் TCS உங்களுக்கே திரும்பக் கிடைக்கும். இதைத் தெரிந்துகொண்டு சரியான ஆவணங்களை வாங்கி, வருமான வரி தாக்கல் செய்யும் போது க்ளெய்ம் செய்தால் போதும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+