இந்தியாவில் சம்பளம் வாங்கும் பெரும்பாலான ஊழியர்கள், EPFO என்ற நிறுவனத்தின் கீழ் PF கணக்கை வைத்திருக்கிறார்கள். இந்த PF கணக்கில், ஊழியரின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியும், நிறுவனத்தால் ஒரு பங்களிப்பும் சேர்க்கப்படுகிறது. இது ஓய்வுக்குப்பிறகு நம் வாழ்க்கைக்கு நிதி ஆதரவாக இருக்கும்.
ஆனால், சில முக்கியமான சூழ்நிலைகளில், ஓய்வு பெறும் முன்பே இந்த PF கணக்கிலிருந்து பணத்தைத் திரும்பப் பெற அனுமதி அளிக்கப்படுகிறது. 2025ல் EPFO புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், உங்கள் திருமணம், உங்கள் குழந்தைகள் அல்லது உடன்பிறந்தவர்களின் திருமணத்திற்காக PF பணத்தை எடுக்கலாம். PF கணக்கு குறைந்தது 7 வருடம் பழமையானதாக இருக்க வேண்டும். கணக்கில் குறைந்தபட்சம் ரூ.1,000 இருப்பு இருக்க வேண்டும். மொத்த PF தொகையின் 50% வரை (வட்டி உட்பட) எடுக்கலாம். இந்த வசதி வாழ்நாளில் மூன்று முறை மட்டுமே கிடைக்கும்.

உங்கள் குழந்தையின் உயர்கல்விக்காக PF பணம் எடுக்கலாம். PF கணக்கு 7 ஆண்டுகள் பழையதாக இருக்க வேண்டும். மொத்த பங்களிப்பின் 50% வரை பணம் எடுக்கலாம். வாழ்நாளில் 3 முறை மட்டும் இந்த வசதி வழங்கப்படும்.
PF உறுப்பினர் குறைந்தது 5 வருடங்கள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். வீடு வாங்க, கட்ட, பழுது பார்க்க அல்லது புதுப்பிக்க இந்த வசதி கிடைக்கும். வீடு வாங்க/கட்டுதல்: ஒரே முறை மட்டும் பணம் எடுக்கலாம். திட்டமிட்டு முடிவு செய்ய வேண்டும். வீடு பழுது/புதுப்பிப்பு: வீடு கட்டப்பட்ட 5 வருடங்களுக்கு பிறகு பெறலாம். 10 வருட இடைவெளிக்கு பிறகு மறுபடியும் எடுக்க அனுமதி உண்டு.
Para 68J படி, மருத்துவ அவசரத்துக்காக எந்த நேரமும் PF பணத்தை எடுக்கலாம். எந்தவித சேவை கால வரம்பும் தேவையில்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் பெறலாம். மருத்துவ செலவுகள், பெரிய நோய்களுக்கு இது மிக முக்கியமான நிதி ஆதரவாகும்.
ஓய்விற்கு ஒரு வருடத்திற்கு முன், மொத்த PF தொகையின் 90% வரை பணம் எடுக்கலாம். இது ஒரே முறை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஓய்வு வாழ்க்கையை திட்டமிட உதவுகிறது. உடல் குறைபாடுகள் உள்ளவர்கள், தங்களுக்கு தேவையான சாதனங்களை வாங்க PF பணத்தை எடுக்கலாம். Para 68N படி, மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இந்த வசதி கிடைக்கும்.
Para 68H படி, நிறுவனம் 15 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்தால், அல்லது 2 மாதங்கள் சம்பளம் வரவில்லையெனில், பணியாளர் தனது பங்களிப்பு கூடுதலாக வட்டியை முழுவதும் எடுக்கலாம். வேலை இல்லாத காலத்தில் இது பெரிய நிவாரணமாக இருக்கும். Para 68BB படி, வீட்டுக் கடனின் முதன்மை தொகையும் வட்டியும் திருப்பிச் செலுத்த PF பணத்தை பயன்படுத்தலாம். உறுப்பினராக 10 ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும்.
எடுக்கக்கூடிய தொகை: 36 மாதங்கள் வரை அடிப்படை சம்பளம் + DA. PF கார்பஸ் (பணியாளர் + நிறுவனம் + வட்டி). பென்டிங்கில் உள்ள கடன் தொகை - இதில் எது குறைவோ அதையே பெறலாம்.
2025ல் வெளியான புதிய EPFO திரும்பப் பெறுதல் விதிகள், PF பணத்தை நம் வாழ்க்கையின் முக்கிய கட்டங்களில் பயன்படுத்த வசதியாக இருக்கின்றன. மருத்துவ அவசரங்கள், வீடு வாங்குதல், கல்விச் செலவுகள், திருமணம் போன்ற தேவைகளில் நம் சேமிப்பே நமக்கு நிவாரணமாக இருக்கும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications