இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வோருக்கு பொருந்தக்கூடிய 2 விதமான வருமான வரி விதிமுறையானது உள்ளது. குறிப்பாக பட்ஜெட் 2023 தாக்கலுக்கு பிறகு எந்த வரி விதிமுறை சிறந்தது? சம்பளதாரர்களுக்கு ஏற்றது எது?
குறிப்பாக புதிய வரிமுறையில் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில், இனி நாம் பழைய வரிமுறையைப் பின்பற்ற வேண்டுமா? புதிய வரிமுறையைப் பின்பற்ற வேண்டுமா? எது நமக்குச் சரியானது? எது லாபகரமானது?' என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.
புதிய வரி விதி முறை
கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு புதிய வரி விதிப்பு திட்டத்தினை அமலுக்கு கொண்டு வந்தது. இதில் 1961ல் 115BAC பிரிவானது சேர்க்கப்பட்டது. இந்த வருமான வரி விதிப்பு முறையானது 2023 - 24 நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில் இயல்பு நிலை வரி விதிப்பு முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பழைய வரி விதிப்பு முறை தான் வேண்டும் என நினைப்பவர்கள் அதனை தொடர்ந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
பட்ஜெட்டிற்கு பிறகு புதிய வருமான வரி விதிப்பு அடுக்கு?
புதிய வருமான வரி பிரிவின் படி 3 லட்சம் ரூபாய் வரையில் பட்ஜெட்டிற்கு பிறகு வரி இல்லை
ரூ.3 லட்சம் ரூபாய் 6 லட்சம் ரூபாய் வரையில் - 5%
ரூ.6 லட்சம் ரூபாய் 9 லட்சம் ரூபாய் வரையில் - 10%
ரூ.9 லட்சம் ரூபாய் 12 லட்சம் ரூபாய் வரையில் - 15%
ரூ.12 லட்சம் ரூபாய் 15 லட்சம் ரூபாய் வரையில் - 20%
ரூ.15 லட்சத்துக்கு மேல் - 30%
பட்ஜெட்டிற்கு முன்பு புதிய வருமான வரி விதிப்பு அடுக்கு?
புதிய வருமான வரி பிரிவின் படி பட்ஜெட்டுக்கு முன்னதாக 2.5 லட்சம் ரூபாய் வரையில் வரி இல்லை
ரூ.2.5 லட்சம் ரூபாய் 5 லட்சம் ரூபாய் வரையில் - 5%
ரூ.5 லட்சம் ரூபாய் 7.5 லட்சம் ரூபாய் வரையில் - 10%
ரூ.7.5 லட்சம் ரூபாய் 10 லட்சம் ரூபாய் வரையில் - 15%
ரூ.10 லட்சம் ரூபாய் 12.50 லட்சம் ரூபாய் வரையில் - 20%
ரூ.12.50 லட்சம் ரூபாய் 15 லட்சம் ரூபாய் வரையில் - 25%
ரூ. 15 லட்சத்துக்கு மேல் - 30%
புதிய வரிவிதிப்பின் கீழ் கூடுதல் வரிக்கட்டண விவரம்
மொத்த வருமானம் 50 லட்சத்துக்கு மேல் இருந்தால் வருமான வரியில் 10% கூடுதல் வரிக் கட்டணம் விதிக்கப்படும்.
மொத்த வருமானம் 1 கோடி ரூபாய் மேல் இருந்தால் வருமான வரியில் 15% கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும்
இதே மொத்த வருமானம் 2 கோடி ருபாய்க்கு மேல் இருந்தால் வருமான வரியில் 25% கூடுதல் வருமானம் தேவை
இதே 5 கோடிக்கு மேல் மொத்த வருமானம் இருந்தால் 37% கூடுதல் வரி செலுத்த வேண்டும். எனினும் இந்த விகிதம் பட்ஜெட்டில் 37%ல் இருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்ச தனி நபர் வருமான வரி விகிதம் 39% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதெல்லாம் புதிய திட்டத்தில் கிடைக்காது?
பழைய வரி விதிமுறையில் 4 அடுக்குகள் உள்ளது. இதே புதிய வரி விதிப்பில் பட்ஜெட்டுக்கு முன்பு 7 அடுக்குகள் இருந்த நிலையில், பட்ஜெட்டுக்கு பிறகு 6 அடுக்குகளாக குறைந்துள்ளது.
புதிய வருமான வரி விதிமுறையினை பொறுத்தவரையில் பல சலுகைளும் கிடைக்காது. குறிப்பாக பிரிவில் VI - A-யின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கு வரி விலக்கு இருக்காது. பயண உதவி தொகை, வீட்டுக் கடன் மீதான வட்டி, வீட்டு வாடகை மீதான சலுகை உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்காது.
மூத்த குடிமக்களுக்கு சலுகை?
புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் வரி அடுக்குகள் ஒரு நபரின் வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை, ஆக அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு எந்த சலுகையும் இல்லை.
ஆகவே, நீங்கள் 60 வயதைக் கடந்தவராக இருந்தாலும் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்கு மேல் உங்கள் வருவாய் உள்ளது என்றால், நீங்கள் கட்டாயம் 30% வருமான வரி செலுத்தியாக வேண்டும்.
இதே 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த வயதினருக்கும் இதே வரி விதிப்பு முறைதான் பொருந்தும். இவர்களுக்கும் இளைஞர்களுக்குமான வயதினருக்கும் வரி விதிப்பு முறையில் வேறுபட்ட சலுகை முறைகள் இல்லை.
இது தவிர இன்னும் ஏராளமான சலுகைகள் வேறுபடுகின்றன. ஆக உங்களின் வருமானம் எவ்வளவு? நீங்கள் சலுகைகள் அதிகம் பெற நினைப்பவராக இருந்தால், அதற்கேற்ப சலுகைகளை தேர்வு செய்யலாம்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications