பொதுவாக ஒவ்வொரு புத்தாண்டும் தொடங்கும்போது பலரும் சில தீர்மானங்களை (resolution) எடுத்துக் கொள்வோம். ஒரு சிலர் தாங்கள் செய்த தவறுகளை களைந்து, புத்தாண்டில் இருந்து அவசியம் மாற்றிக் கொள்வோம் என நினைப்போம்.
உதாரணத்திற்கு இதுவரை நான் வீண் செலவு அதிகம் செய்வேன். இனி அதனை செய்ய மாட்டேன் என்பர். ஆக இப்படி 2022ல் நாம் செய்த தவறுகளை தவிர்த்து, 2023ல் நாம் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிதி ரீதியான 10 தீர்மானங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பொருளாதாரத்தை கவனியுங்கள்
நடப்பு ஆண்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பல நாடுகளில் ரெசசனுக்குள் நுழையலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. அப்படி ரெசசனை எட்டினால் இன்னும் பொருளாதாரம் என்னவாகும்? இதனால் எதிர்காலத்தில் வேலையிழப்புகள் என்பது இனியும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. ஆக நாம் நிதி ரீதியான பயணத்தில் இதனையும் கவனிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.
என்னென்ன சவால்கள்?
கடந்த ஆண்டு தொடங்கி தற்போது வரையில் தொடர்ந்து கொண்டுள்ள ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, இது உலக நாடுகள் மத்தியில் இன்றும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. அடுத்ததாக சீனா - தாய்வான் இடையேயான பதற்றம். மூன்றாவதாக நாம் கவனிக்க வேண்டிய மிகப்பெரிய பிரச்சனை கொரோனா. சீனாவில் அதிகரித்து வரும், கொரோனா, மீண்டும் உலக நாடுகளுக்கு பரவாலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இதற்கு மத்தியில் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது
முதலீடு செய்ய வேண்டும்
முதலில் முதலீட்டினை தொடங்குங்கள். பலருக்கும் முதலீடு செய்ய வேண்டும் என்ற திட்டம் இருக்கும். ஆனால் பல ஆண்டுகளாகவே வெறும் திட்டமாகவே இருக்கும். வெறும் பேச்சில் மட்டுமே சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் இதுவரையில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டோம். அதனை முதலில் செயல்படுத்த வேண்டும்.
எப்படி முதலீடு செய்யலாம்?
பலரும் ஏற்கனவே முதலீடு செய்திருக்கலாம். ஆனால் இதுவரையில் அதனை எப்படி செய்வது என்ற தெளிவான புரிதல் தெரிந்திருக்காது. ஆக அதனை எப்படி செய்வது என்பது தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக உங்களது முதலீட்டினை ஒரே இடத்தில் செய்வதை விடுத்து, பிரித்து முதலீடு செய்யலாம்.
முதலீடு செய்தால் போதுமா?
நான் தான் முதலீடு செய்து விட்டேனே. இனி என்ன பிரச்சனை? ஜாலி ஜாலி என்று நினைக்காமல், நீங்கள் முதலீடு செய்ததோடு, அதனை அவ்வப்போது செக் செய்து பார்க்க வேண்டும். நீங்கள் செய்தது சரியான பட்சத்தில் இல்லாவிட்டால், அதனை திருத்தி மாற்றியமைக்க வேண்டும்.
எமர்ஜென்சி பண்ட்
அவசர தேவைக்கு பணத்தை கட்டாயம் ஒதுக்கீடு செய்யுங்கள். இது அவசர தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும். கொரோனா காலகட்டத்தில் வேலையிழந்தவர்களுக்கு இது பற்றி தெரிந்திருக்கலாம். அதோடு சேமிப்பு அதிகம் இருக்கும்போது அடுத்த ஒரு விஷயத்தினை நிதி ரீதியாக செய்யும்போது அது பயனுள்ளதாக இருக்கும். ஆக எமர்ஜென்சி பண்ட்டை கட்டாயம் ஒதுக்கீடு செய்திடுங்கள்
முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்க்கலாம்
வீண் செலவினை குறைத்து கடன் வாங்குவதையும் குறைக்கலாம்.இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்கமல் இருந்தாலே அதுவே பெரியதொரு நல்ல விஷயம் எனலாம்.
ஓய்வூகால முதலீடு என்பதை பற்றி பலரும் சிந்திப்பதே இல்லை. ஆனால் அவசியம் இதனை செய்ய வேண்டும். அதேபோல நீங்கள் செய்யும் ஓய்வூகால முதலீடு என்பது பணவீக்கத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். இது உங்கள் ஓய்வுகாலத்தினை சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வைத்துக் கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
எங்கு கடன் வாங்கலாம். -
கடன் வாங்குவதை தவிருங்கள் என்று மேலே கூறினோம். அப்படியிருக்கும்போது எங்கு கடன் வாங்கலாம் என்பது பெரும் கேள்வியாக இருக்கலாம். கடன் வாங்காமல் நிச்சயம் இருப்பது கடினமான ஒன்று தான். ஆக கடன் வாங்கியே ஆக வேண்டும் என்ற சூழலில் இருப்பவர்கள், குறைந்த வட்டியில் வாங்கிக் கொள்ளலாம். ஆக கடன் வாங்குமுன் எங்கு வாங்கலாம், எங்கு குறைவான வட்டி என்பதை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
உயில் எழுதுங்கள்
உங்களுடைய முக்கிய விவரங்கள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக எங்கு முதலீடு செய்துள்ளீர்கள், உங்களுடைய முக்கிய பாஸ்வேர்டு, ஐடி, இன்சூரன்ஸ், சொத்து, வீட்டுக்கு தெரியாமல் முதலீடு.. எங்கு கடன் வாங்கியிருக்கோம். எங்கு கடன் கொடுத்திருக்கோம் .. என்பது உள்ளிட்ட பல விவரங்களையும் முழுமையாக கொடுங்கள்.
சிபில் மதிப்பெண்
அடிக்கடி உங்கள் கடன் மதிப்பெண்னை செக் செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ள முடியும். உங்களின் சிபில் மதிப்பெண் குறைவாக இருந்தால் அதனை எப்படி அதிகரிப்பது என்பதை திட்டமிடுங்கள். இது உங்களுக்கு குறைவான வட்டியில் கடன் பெற வழிவகுக்கும்.


Click it and Unblock the Notifications