பெரும்பாலும் மக்கள் பணம் சம்பாதிப்பதுடன் பணத்தை சேமித்து வைக்க திட்டமிடுகின்றனர். ஆனால் அவற்றை எந்த இடத்தில் சேமித்து வைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. பணத்தை சேமித்து வைக்க ஏராளமான சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதிக ரிஸ்க்குகள் நிறைந்த பங்குகளில் முதலீடு செய்வதை தவிர்க்கும் முதலீட்டாளர்கள் நிலையான வருமானம் தரக்கூடிய பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொதுவாக, சிறு சேமிப்பு திட்டங்கள் நிலையான வருவாயை வழங்குவதுடன் வரி பலன்களையும் வழங்குகின்றன. இந்த திட்டங்கள் அவசரகால சூழ்நிலைகளுக்கு உதவுவதற்காக பெரிய அளவிலான தொகையை சேமிப்பதற்கு மட்டுமல்லாமல், 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வரி பலன்களையும் பெற்று தருவதற்கும் உதவுகின்றன.

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்: போஸ்ட் ஆபிஸில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்கினால், ஓராண்டுக்கு இந்த கணக்கில் 4% வட்டி வழங்கப்படுகிறது. இதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை 500 ரூபாய் இருந்தாலே போதும்.
பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்: பிபிஎஃப் திட்டத்தின் மூலமாக முதலீட்டாளர்களுக்கு ஓராண்டுக்கு 7.1% வட்டி கிடைக்கிறது. இதற்கான குறைந்தபட்ச முதலீடு ஒரு நிதியாண்டில் 500 ரூபாய் மற்றும் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
சுகன்யா சம்ரிதி கணக்கு: இந்த திட்டம் ஓராண்டுக்கு 8.2% வட்டியை வழங்குகிறது. இதற்கான குறைந்தபட்ச முதலீடு ஒரு நிதியாண்டில் 250 ரூபாயாகவும், அதிகபட்ச முதலீடு 1.5 லட்சம் ரூபாயாகவும் உள்ளது.
நேஷனல் சேவிங்ஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம்: ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் ஓராண்டுக்கு 6.7 சதவீதம் வழங்குகிறது. இதில் ஒருவர் குறைந்தபட்சமாக ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் என்ற தொகையை முதலீடு செய்யலாம். இதற்கு அதிகபட்ச வரம்பு ஏதும் கிடையாது.
நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட்: இந்த திட்டத்தில் ரூ.1,000 இருந்தால் எளிதாக கணக்கை திறக்க முடியும். இதற்கு அதிகபட்ச வரம்புகள் கிடையாது. 1 ஆண்டுக்கு இதற்கான வட்டி விகிதம் 6.9%ஆகவும், 2 ஆண்டுகளுக்கு 7 சதவீதமாகவும், 3 ஆண்டுகளுக்கு 7.1%ஆகவும், 5 வருடங்களுக்கு 7.5%ஆகவும் வழங்கப்பட்டு வருகிறது.
நேஷனல் சேவிங்ஸ் மாதந்திர வருமானம்: இந்த திட்டத்தில், ஓராண்டுக்கு 7.4% வட்டியை வழங்குகிறது. இதில் ஒருவர் 1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். மேலும் சிங்கிள் அக்கவுண்டாக இருந்தால் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாயையும், ஜாயின்ட் அக்கவுண்டாக இருந்தால் அதிபட்சமாக 15 லட்ச ரூபாயையும் முதலீடு செய்யலாம்.
கிசான் விகாஸ் பத்திரம்: இந்த திட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இதற்கான குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாயாகும். அதிகபட்ச வரம்பு கிடையாது.
சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ்: இந்த திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சமாக 1,000 ரூபாயையும், அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாயையும் முதலீடு செய்யலாம். நீங்கள் டெபாசிட் செய்யும் தேதியில் இருந்து மார்ச் 31 / செப்டம்பர் 30 / டிசம்பர் 31 வரையிலான தேதி வரை 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் வழங்கப்படுகிறது.
நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட்: இதற்கான வட்டி விகிதம் ஒரு ஆண்டுக்கு 7.7 சதவீதம். குறைந்தபட்ச முதலீடு 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. இந்த திட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு 7.5% வட்டி கொடுக்கப்படுகிறது. இதற்கான குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாயாகவும், அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications