புது வருடம் 2025 ஆம் ஆண்டு பிறக்க இன்னும் சில மணி நேரம் மட்டுமே உள்ளது. 2024 முடிய போகிறது. இந்த நிலையில், கடந்த ஒருவருடம் நாம் செய்தது என்ன என்பதெல்லாம் எண்ணி அது சரியா? தவறா? என்பதை ஆராய்ந்து அதை வரும் புதிய வருடத்தில் மாற்றுவதற்கு யோசனை செய்வோம். அதுபோல தான் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முடிவை எடுத்துள்ளது. அந்த வகையில், நாளை முதல் ஜனவரி 1 உடன் 3 வகையான வங்கி கணக்குகளை முடக்கப்போவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, மூன்று வகையிலான வங்கி கணக்குகளில், செயலற்ற வங்கி கணக்கு, பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்கு, ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என மூன்று வகையான அக்கவுண்டும் முடக்கப்பட உள்ளது. ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு என்பது முக்கிய விஷயமாக மாறிவிட்டது. நாட்டின் 99% பேர் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அரசின் நிதி உதவி கூட பயனாளிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதால் வங்கி கணக்கை கிட்டத்தட்ட அனைவரும் பயன்படுத்த தொடங்கி வருகின்றனர்.

அந்த வகையில், வங்கி விதிகளும் அடிக்கடி மாறி வருகின்றன. வங்கி விதிகளை பொறுத்தவரை ரிசர்வ் வங்கி அவ்வப்போது பாதுகாப்பு மற்றும் நிதி காரணங்களுக்காக விதிகளை மாற்றி வருகிறது. அப்படித்தான் நாளை (ஜனவரி 1 2025) முதல் சில முக்கிய மாற்றங்களை ரிசர்வ் வங்கி செய்ய உள்ளது. இந்த மாற்றத்தால் மூன்று வகையிலான வங்கி கணக்குகள் முடக்கப்பட உள்ளன. எந்த மாதிரியான கணக்குகள் முடக்கப்பட உள்ளது என்பதை பார்க்கலாம்.
செயலற்ற வங்கி கணக்கு: டார்மண்ட் அக்கவுண்ட் (Dormant Account)என்று அழைக்கப்படும் நீண்ட காலமாக எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கி கணக்குகள் அதாவது கடந்த 2 ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கி கணக்குகள் இனி முடக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முறைகேடுகளை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது. எனவே, எந்த பரிவர்த்தனையும் செய்யாமல் உங்களிடம் ஏதேனும் வங்கி கணக்கு இருந்தால் அந்த வங்கி கணக்குகள் குளோஸ் ஆகிவிடும்.
இன்ஆக்டிவ் வங்கி கணக்கு: இன்ஆக்டிவ் வங்கி கணக்கு என்பது செயல்பாடற்ற வங்கி கணக்கு என்பது 12 மாதங்களாக எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கி கணக்கை குறிக்கும். இத்தகைய வங்கி கணக்குகளும் மூடப்பட உள்ளன. எனவே நீங்கள் வைத்து இருக்கும் வங்கி கணக்கு இன் ஆக்டிவ் ஆக இருந்தால் உடனே அதை ரீஆக்டிவிவேட் செய்து விடுங்கள் இல்லையெனில் அது திரும்ப கிடைக்காது.
ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்: வங்கியில் எந்த பராமரிப்பு தொகையும் இல்லாத வகையில் வைத்திருப்பதுதான் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட். இந்த கணக்கில் நீண்ட காலத்திற்கு எந்த தொகையும் டெபாசிட் செய்யாமல் இருப்பதோடு, வங்கி கணக்கில் இருப்பு தொகை ஜீரோவாக இருக்கும் கணக்கே ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் எனப்படுகிறது. இந்த வகை வங்கி கணக்குகளில் எந்த வித பரிவர்த்தனையும் குறிப்பிட்ட காலத்திற்கு இல்லையென்றால் முடக்கப்படலாம்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?: உங்களிடம் இதுபோன்ற வங்கி கணக்குகள் ஏதேனும் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். உங்களிடம் வங்கி கணக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருந்தால் உடனடியாக அதை ரீ ஆக்டிவேட் செய்யவும். இதற்கு முதலில் கே ஒய் சி நடைமுறையை மேற்கொள்ளலாம். உங்கள் வங்கி கிளைக்கு நேரடியாக சென்றோ அல்லது ஆன்லைனிலோ இதை செய்யலாம். உங்கள் வங்கி கணக்கு செயலற்று இல்லை என்பதை உறுதி செய்ய அவ்வப்போது கேஒய்சி அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
வங்கியில் பெரும்பாலும் ஒரு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும். உங்கள் வங்கியின் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைச் சரிபார்த்து, உங்கள் கணக்கு செயலற்றதாகக் கருதப்படுவதைத் தடுக்க தேவையான இருப்பை பராமரிக்கவும். மேலும், ஆஃப்லைன் வங்கிச் சேவைகள் இன்னும் கிடைக்கப்பெற்றாலும், டிஜிட்டல் பேங்கிங் சேனல்களுக்கு முன்னுரிமை அளிப்பது வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நவீன வங்கியியல் முறையை நோக்கிய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை தொடரலாம்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications