ஒருவரின் பர்சனல் வாழ்க்கையில், திருமணம் செய்து கொள்ள முடிவெடுப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். அதிலும் நிதி நிர்வாகம் என்று வரும்போது அது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.
இப்படிப் புதிதாகத் திருமணமானவர்கள் கவனிக்க வேண்டிய, உடனே ஆக்ஷன் எடுக்க வேண்டிய சில முக்கிய நிதி சார்ந்த சமாச்சாரங்கள் உள்ளது. இந்தக் காலத்தில், கணவனும் மனைவியும் சேர்ந்து வேலைக்குப் போனால்தான் குடும்பச் செலவுகளை ஓரளவு கட்டுப்படுத்தி வாழ்கையைச் சுமுகமாக நடத்திச் செல்ல முடியும்.

இதேபோல் கணவனும் மனைவியும் சேர்ந்து அதிகப்படியான வருமான வரியைச் சேமிக்கவும் முடியும்.
திருமணப் பரிசு: வருமான வரி சட்டத்தின்படி, திருமணத்தின் போது பெறப்படும் பரிசுகளுக்கு வரி விதிக்கப்படாது. இந்த வரி விலக்கு நகைகள், சொத்துக்கள் (வீடு, நிலம், வாகனம்), பணம், பங்குகள் மற்றும் பலவற்றை அடங்கும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 56 இத்தகைய பரிசுகளுக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
வரி விதிப்பு: திருமணத்தில் பெற்ற பரிசுகளுக்கு வரி இல்லையென்றாலும், இந்தப் பரிசுகளில் இருந்து வரும் எந்தவொரு வருமானமும் வரிக்கு உட்பட்டது என்பதை மறந்துவிடாதீர்கள். உதாரணமாக, திருமணப் பரிசாக ஒருவர் ஒரு வீட்டைப் பெற்று அதை வாடகைக்கு விடும் பட்சத்தில், வாடகை வருமானத்திற்கு வரிக்கு உண்டு. இதேபோல் பங்குகளுக்கும் இது பொருந்தும்.
தங்கம் கிஃப்ட்: இதைவிட முக்கியமாகத் தற்போது பெரும்பாலான மக்கள் திருமணத்திற்குத் தங்கக் காசு, வெள்ளிக் காசு அளிக்கப்படும் வேளையில், இதற்கும் வரி விலக்கு உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். திருமணத்தின் போது பரிசாக எவ்வளவு தங்களை வேண்டுமானாலும் பெறலாம். ஆனால் வருமான வரித்துறையினரின் சோதனை வந்தால் யாரிடம் எவ்வளவு தங்கம் பெறப்பட்டது என்ற கேள்விக்குப் பதில் கூற தயாராக இருக்க வேண்டும்.
வருமான வரித் துறை: ஒரு இந்தியக் குடிமகன்/குடிமகள் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்ற கணக்கு உள்ளது. உதாரணமாகத் திருமணமான பெண்கள் 500 கிராம், திருமணமாகாத பெண்கள் 250 கிராம், ஆண்கள் 100 கிராம் என்ற அளவீடு உள்ளது. இந்த அளவு அதிகமாக இருப்பின் வருமான வரித்துறையினருக்கு விளக்கம் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
திருமணத்தின் நன்மை: புதிதாகத் திருமணமான குஷியில் பலரும் தங்களுடைய எதிர்காலத்தையும், பாதுகாப்பையும் மறந்துவிடுவார்கள். திருமணமான பின்பு தான் அதிகப்படியான வரியைச் சேமிக்க முடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
லைப் இன்சூரன்ஸ்: புதிதாகத் திருமணமானவர்கள் லைப் இன்சூரன்ஸ் திட்டத்திற்குச் செலுத்திய ப்ரீமியம் தொகை மூலம் தனித்தனியாக வரியை சேமிக்க முடியும். 80சி கீழ் வருடத்திற்கு 2.5 லட்சம் வரையில் லைப் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேமிக்க முடியும். மனைவி வேலைக்குச் செல்லவில்லை எனில் கணவன் வருமான வரி கணக்கிலேயே மனைவியின் லைப் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு வரிச் சலுகை பெற முடியும்.
மருத்துவக் காப்பீடு: இன்றைய வாழ்க்கை முறையில் மருத்து காப்பீடு மிகவும் முக்கியமானது, குறிப்பாகத் திருமணமாகி புதிதாக வாழ்க்கையைத் துவங்கும் போது பாதுகாப்பான முறையில் துவங்க மருத்துவக் காப்பீடு பெரிய அளவில் உதவும். உதாரணமாக ஒருவர் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை 80டி கீழ் வரி சலுகையைப் பெறலாம். இதுவே மனைவியுடன் சேர்ந்து குடும்பக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 50000 ரூபாய் வரையில் வரிச் சலுகை பெற முடியும்.
ஹோம் லோன்: இன்றைய விலைவாசியில் சொந்த வீடு வாங்குவது என்பது கடினமான வேலை தான், ஆனால் உங்களுக்குத் திருமணத்திற்கு வந்த கிஃப்ட், உங்கள் சேமிப்பு, இருவரும் வேலைக்குச் செல்லும்பட்சத்தில் ஹோம் லோன் மூலம் திருமணமான உடனேயே சொந்த வீட்டுக்குச் செல்ல முடியும்.
80C பிரிவு சேமிப்பு: ஹோம் லோன் பெரும் செலவாகப் பார்ப்பதைக் காட்டிலும் பெரும் சேமிப்பாகத் தான் பார்க்க வேண்டும். இருவருடைய பெயரிலும் ஹோம் லோன் வாங்கினால் தலா 1,50,000 ரூபாயை 80சி கீழ் வருமான வரிச் சலுகையைப் பெறலாம். இதன் மூலம் கிட்டதட்ட 3 லட்சம் ரூபாய்க்கான வரியைச் சேமிக்க முடியும்.
பிரிவு 24(B) வரிச் சலுகை: இதோடு நிற்கவில்லை ஹோம் லோன்-க்குச் செலுத்தப்பட்ட வட்டியைப் பிரிவு 24(B) கீழ் ஒருவர் 2 லட்சம் ரூபாய் வரையில் சேமிக்க முடியும். இதையும் இருவரும் 50:50 அடிப்படையில் பிரித்து வரிச் சலுகை பெற முடியும்.
பட்ஜெட் முக்கியம் பாஸே: திருமணமான பின்பு கண்களை மூடிக்கொண்டு பிடித்ததைச் செய்வோம் என்ற பெயரில் அதிகப்படியாகச் செலவு செய்வது இயல்பு. திருமணத்திற்குப் பின்பு எப்படி வருமானம் இரட்டிப்பாகிறதோ, செலவுகளும் இரட்டிப்பாகும். இதனால் ஆரம்பம் முதலே பட்ஜெட் போட்டு வாழ்க்கை துவங்குவது உத்தமம்.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications