இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டில் நிதிச் சேவைகளைப் பெறும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதி சேவைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக கிரெடிட் கார்டுகள் இன்று பலருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது. சம்பளம் பெறும் நபர்களுக்கு மட்டும்தான் கிரெடிட் கார்டுகள் சாத்தியம் என்ற நிலைமை மாறி பே ஸ்லிப் இல்லாதவர்களுக்கும் வங்கிகள் கிரெடிட் கார்டுகளை வழங்க தொடங்கிவிட்டன.
இல்லத்தரசிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களும் கிரெடிட் கார்டு பெறலாம். பே ஸ்லிப் இல்லாமல் கிரெடிட் கார்டு பெறுவதற்கு என்னென்ன வழிகள் உள்ளது? என்பது குறித்து விவரிக்கிறது இந்தப் பதிவு.

பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக பெரும் கிரெடிட் கார்டுகள்: எப்படி பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக கடன் பெறுகிறோமோ? அதேபோல உங்கள் பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக கிரெடிட் கார்டு பெற முடியும். அப்படி வாங்கினால் நீங்கள் டெபாசிட் செய்த தொகை வங்கியில் பிணையமாக கருதப்படும். ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் போன்ற முன்னணி வங்கிகளில் இது போன்ற கிரெடிட் கார்டுகள் கிடைக்கும். நீங்கள் டெபாசிட் செய்த FD தொகையில் 75 சதவீதம் முதல் 90 சதவீத வரம்பில் கிரெடிட் கார்டு பெறலாம்.
கூடுதல் கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: கிரெடிட் கார்டு பெறுவதற்கான மற்றொரு முறை உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கிரெடிட் கார்டை வைத்து கூடுதல் கிரெடிட் கார்டை பெறுவது. அதாவது ஏற்கனவே உங்கள் குடும்ப உறுப்பினர் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வந்தால் அவருடைய கணக்குடன் இணைக்கப்பட்டு இன்னொரு கிரெடிட் கார்டு பெறலாம். HDFC பேங்க், ஆக்சிஸ் பேங்க், கோடக் மகேந்திரா பேங்க் போன்ற பேங்க்-களில் இந்த வசதி வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கான கிரெடிட் கார்டுகள்: கல்லூரி மாணவர்களின் செலவை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் இந்த கிரெடிட் கார்டுகள். இவற்றை வாங்குவதற்கு எந்த ஒரு பே ஸ்லிப்பும் தேவையில்லை. ஆனால் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடுமையான விதிமுறைகள் இதற்கு உண்டு என்பதை நினைவில் கொள்ளவும். பொதுவாகவே கிரெடிட் கார்டுகளுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. இவை 26 சதவீதம் முதல் 42 சதவீதம் வரை இருக்கலாம்.
மற்ற வருமானச் சான்றுகளை சமர்ப்பிக்கலாம்: நீங்கள் சுய தொழில் செய்பவராக இருந்தாலோ அல்லது ஃப்ரீலான்சராக பணிபுரிந்து வந்தாலோ, உங்கள் கடன் தகுதியை தீர்மானிக்க பே ஸ்லிப் அல்லாமல் வேறு வங்கி அறிக்கைகளை சமர்ப்பிக்கலாம். படிவம் 16 போன்ற வருமான வரி ஆவணங்களையும் வங்கிகள் ஏற்றுக் கொள்கின்றன. வாடகை வருமானம் அல்லது ஃப்ரீலான்சர் வேலை போன்ற ஆதாரங்களில் இருந்து உங்களுக்கு பணம் வந்து கொண்டிருந்தால் அதையே ஆவணமாக வைத்து கிரெடிட் கார்டு பெற முடியும்.
இணை விண்ணப்பதாரருடன் கிரெடிட் கார்டு பெறுவது: உங்களிடம் பே சிலிப் இல்லை என்றாலும் உங்களுக்காக இணை கையொப்பமிட வேறு யாரேனும் இருந்தால் அதை வைத்தும் நீங்கள் கிரெடிட் கார்ட் பெற முடியும். ஆனால் உங்களுக்காக கையெழுத்து போடும் நபர் நிலையான வருமானம் கொண்டவராக இருக்க வேண்டும். உதாரணமாக வீட்டு கடன் வாங்க எப்படி கேரன்டி கையெழுத்து கேட்கப்படுகிறதோ? அதேபோல கிரெடிட் கார்டுக்கும் கேட்க்கப்படும். இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் கிரெடிட் கார்டு பெறலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications