வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

டெக் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளத்தோடு வேலை இருந்தாலும் அந்த வேலை உறுதியாக நீடிக்கும் என்பதை நம்மால் சொல்லிவிட முடியாது. அதற்கு உதாரணமாக அண்மைக்காலமாக அமேசான், டிசிஎஸ் போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களும் திடீர் திடீரென தங்களுடைய ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையிலான நபர்களை வேலையில் இருந்து நீக்கின.

ஐடி வேலை நல்ல சம்பளம் தருகிறது என்றாலும் எப்போதுமே பணி நீக்கம் என்ற கத்தி நம் தலை மீது தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் ஒன்றான Oracle தங்களுடைய ஊழியர்களில் சுமார் 30,000 பேரை வேலையில் இருந்து நீக்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 12,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். அதிகாலை 6 மணிக்கு ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இதுதான் நிறுவனத்தில் உங்களுடைய கடைசி நாள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

இந்த திடீர் பணிநீக்கம் மன ரீதியாகவும் நிதி ரீதியாகவும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பாதித்துள்ளது. அப்படி Oracle நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு டெக்கி ஒரே நாளில் தன்னுடைய வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறியது என்பது குறித்து வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவு அனைவரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. நயக் சத்யா என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் என்னுடைய நண்பர் ஒருவர் Oracle நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார், திடீரென அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் என கூறியுள்ளார்.

ஆனால் இதனால் அவர் பதற்றம் அடையவில்லை, மன அழுத்தம் அடையவில்லை, சமூக வலைத்தளங்களில் கண்ணீர் மல்க எந்த பதிவையும் வெளியிடவில்லை ஏனெனில் அவர் முன்கூட்டியே நிதி ரீதியாக சரியாக திட்டமிட்டு இருந்ததே இதற்கு காரணம் எனக் கூறியிருக்கிறார். பணி நீக்கம் செய்யப்பட்ட உடனேயே தன்னுடைய சொந்த ஊரான புவனேஸ்வருக்கு அவர் புறப்பட்டு சென்றார். அவர் ஏற்கனவே பெற்றோர், மனைவி மற்றும் குழந்தை பெயரில் தலா 15 லட்சம் ரூபாய் ஃபிக்சட் டெபாசிட்டில் சேமித்து வைத்திருந்தார். இது தவிர தன்னுடைய பெயரிலேயே தனியாக ஒரு 30 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்து வைத்திருக்கிறார். இதன் மூலம் வட்டியே அவருக்கு 45,000 ரூபாய் மாதந்தோறும் கிடைக்கிறது.

Also Read

பெங்களூரில் தான் வேலை கிடைத்துவிட்டதே என அவசரப்பட்டு கோடிக்கணக்கில் வங்கி கடன் வாங்கி பெங்களூருவில் அவர் வீடு வாங்கவில்லை. இதனால் அவருக்கு வீட்டு கடன் செலுத்த வேண்டும் என்ற பிரச்சனை கிடையாது. தற்போது தனக்கு கார் ஓட்ட தெரியும் என்பதால் ஊபர் நிறுவனத்தில் டிரைவராக மாறி இருக்கிறார். ஊபர் டிரைவராக அவருக்கு தற்போது ஒரு கணிசமான வருமானம் வருகிறது இது தவிர தன்னுடைய பிக்சட் டெபாசிட் முதலீடுகள் மூலம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட வட்டி தொகை வருகிறது என்பதால் அவர் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் பணி நீக்கத்திற்கு பிறகும் தன்னுடைய வாழ்க்கையை தொடர்கிறார் என தெரிவித்திருக்கிறார்.

Recommended For You

அவர் பாரம்பரியமான ஃபிக்ஸட் டெபாசிட்டில் ஆரம்பகால முதலே திட்டமிட்டு முதலீடு செய்தார், அந்த முதலீட்டை ஒழுக்கமாக தொடர்ந்தார். அதுதான் அவருக்கு தற்போது பணி நீக்கத்திற்கு பின்பும் பழைய அளவிலான வாழ்க்கையை வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தி தந்திருக்கிறது என்கிறார். அவர் இன்ஃப்ளூயன்சர்களை பார்த்து எஸ் ஐபி, பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய வில்லை பாரம்பரிய ஃபிக்சட் டெபாசிட்டையே பின் தொடர்ந்தார் என்கிறார்.

எனவே தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்துவிட்டது கை நிறைய சம்பளம் வருகிறது என்றவுடன் கொண்டாட்டத்தோடு பணத்தை செலவிடாமல் எப்போதுமே எதிர்காலத்திற்கென ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை நிலையான வருமானம் வரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் சரியான திட்டமிடல் தான் எப்படிப்பட்ட சவாலான சூழலையும் நம்மை நாம் எதிர்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதே இவர் உணர்த்தும் பாடம் என குறிப்பிடுகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+