இன்று உலகம் முழுவதும் காட்டுத் தீ போல மிக வேகமாக பரவி வரும் ஓமிக்ரான் 77 நாடுகளில் பரவியுள்ளது. மக்களிடையே பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இது குறித்து உலக சுகாதார அமைப்பானது எச்சரித்துள்ளது.
இதற்கிடையில் நிபுணர்கள் மூன்றாம் அலையானது பரவ ஆரம்பித்துவிட்டதாக நம்புகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் மிக கவனமுடன் இருப்பது நல்லது. முடிந்த மட்டில் ஹெல்த் இன்சூரன்ஸ் கள் போட்டு வைப்பது பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. எனினும் இந்த இன்சூரன்ஸ்களிலும் பல கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. ஆக அவற்றில் எதனை எடுப்பது? எது நெருக்கடியான காலக்கட்டத்தில் மிக பயனுள்ளதாக இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
பல இன்சூரன்ஸ்கள்
ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் பல்வேறு ஆப்சன்கள் உள்ளன. எனினும் தற்போது ஓமிக்ரான் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் இன்னும் கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது தனிப்பட்ட இன்சூரன்ஸ்/ கார்ப்பரேட் குழும இன்சூரன்ஸ் என பல ஆப்சன்கள் உள்ளன. முறைசாரா குழு காப்பீடு, இது முதலாளி அல்லாத பணியாளர் குழு காப்பீடு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரே சமூகம், ஒரே வங்கியில் கூட்டாக கணக்கு வைத்திருக்கும் உறுப்பினர்களால் கூட்டாக வாங்கப்படுகிறது.
வங்கிகள் - இன்சூரன்ஸ்
பொதுவாக இது போன்ற இன்சூரன்ஸ் திட்டங்கள் தனியார் வங்கிகள் அல்லது பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்படுகின்றன.
இதற்காக வங்கிகள் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்கின்றன. இதன் மூலம் அதனதன் வாடிக்கையாளர்களுக்கு பாலிசிகளையும் வழங்குகின்றன.
கவரேஜ் எப்படி?
பொதுவாக இன்சூரன்ஸ் வாங்கும்போது கவரேஜ் எப்படி உள்ளது என்பது தான், முதலில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக குழு காப்பீட்டில் கவரேஜ் அளவு என்பதை இன்சூரன்ஸ் நிறுவனம் தான் நிர்ணயம் செய்கின்றது. இந்த குழு இன்சூரன்ஸில் பதவி, வயது, பொருளாதார நிலை என எதுவும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது. அனைத்து ஊழியர்களுக்கும் சமமான காப்பீட்டுத் தொகை இருக்கும். எனினும் கவரேஜ் மாறுபடலாம். அவற்றை வாடிக்கையாளர்களே தேர்தெடுக்கவும் அனுமதிக்கப்படலாம். இது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடலாம்.
தனி நபர் திட்டம்
ஆனால் தனி நபர் இன்சூரன்ஸினை பொறுத்தவரையில் ஒரு நெகிழ்வுத் தன்மையை வழங்குகின்றது. இதில் தேவைக்கு ஏற்ப பொருத்தமான திட்டத்தினை நாம் தேர்தெடுத்துக் கொள்ள முடியும்.
தற்போது புதிய கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் உங்களது பாலிசியில் கூடுதல் கவரேஜ்ஜினை கொண்டிருப்பது அவசியமானது. குறிப்பாக அதிக கவரேஜ் தேவைப்படுபவர்கள் மாதத்திற்கு சுமார் 1,200 ரூபாய் செலுத்தினால், 1 கோடி ரூபாய் வரையில் கவரேஜ் செய்யும் பாலிசிகள் கூட உள்ளன. அதேபோல தேவைக்கு ஏற்ப ரைடர் பாலிசிகளையும் தேர்தெடுத்துக் கொள்ளலாம்.
புதுபிக்கும் தன்மை
முதலாளி அல்லாத குழு இன்சூரன்ஸினை விட, தனி நபர் பாலிசியானது வாழ் நாள் முழுவதும் புதுபிக்கதக்கது. ஆக பாலிசிதாரர் விரும்பும் வரையில் இந்த வகையான பாலிசிகளை புதுபித்துக் கொள்ளலாம். ஆனால் முறைசாரா குழு காப்பீட்டில் அப்படி இல்லை. இங்கு நிச்சயமற்ற நிலையே இருந்து வருகின்றது. முறைசாரா குழுவில் புதுபிக்க இயலாது. இவற்றை வாழ் நாள் முழுவதும் காப்பீடு பெற முடியாது. ஏனெனில் வங்கியோ அல்லது பாலிசிதாரரோ இதனை இடையில் நிறுத்திக் கொள்ளலாம்.
விலை நிர்ணயம்
தனி நபர் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் ஐஆர்டிஐஏ வழிகாட்டுதல் படி கட்டணங்கள் இருக்கும். அதேபோல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் ஐஆர்டிஐஏ விதித்து வருகின்றது.
இதுவே முறைசாரா குழு திட்டங்கள் கட்டணங்களை தேர்தெடுப்பதில் சிறந்த நெகிழ்வு தன்மையை கொண்டுள்ளன. ஆக உங்களுக்கு தேவை இருப்பின் கட்டணங்கள் அதிகரிக்கலாம். ஆக முடிவு உங்கள் கையில் தான்.
நெகிழ்வுத்தன்மை
குழு பாலிசியில் மற்றவர்களுக்காக, அதாவது குழுவில் உள்ள உறுப்பினர்களின் சார்பாக குழு உரிமையாளாரோ அல்லது ஒரு தனி நபரால் வாங்கப்படுகின்றன. இதில் தனி நபர்கள் தங்களது பாலிசிகளை மறுசீரமைக்க விரும்பினால் இது ஒரு நெகிழ்வு தன்மையை அளிக்கலாம். எனினும் நீங்கள் குழுவை விட்டு வெளியேறினாலோ ? வங்கி மூலம் எடுத்திருக்கும் பட்சத்தில், வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லை என்றாலோ? அந்த பாலிசியும் செயல்படாது. ஆக இந்த பெருந்தொற்று காலத்தில் இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு பாலிசிகளின் நன்மை தீமை என்ன?
இரண்டு பாலிசிகளும் வேறுபட்டவை என்றாலும், பயன் என்னவோ ஒன்று தான். இரண்டுமே மருத்துவ அவசர நிலைக்கு பயன்படும் வகையில் உள்ளது. எனினும் இன்றைய காலகட்டத்தில் உங்களின் தேவைக்கு எது சிறந்தது என தீர்மானிக்க வேண்டும்.
குறைவான பிரீமியம், மருத்துவ செக்கப் இல்லாமல் குழும பாலிசிகளை எடுக்கலாம். தனி நபர் பாலிசியிலும் இதே சலுகைகளும் உண்டு. ஆனால் கவரேஜ் என்பது வேறுபடும். ஆக இதனை கருத்தில் கொள்ள வேண்டும். ஆக கொரோனா பரவலின் போது இதனை கருத்தில் கொண்டு உங்கள் பாலிசியினை தேர்தெடுக்கலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications