இந்தியாவின் பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்கள் கையில் ஒரு கணிசமான பணம் சேர்ந்து விட்டாலே உடனடியாக அதற்கு தங்கம் வாங்கி வைத்து விடுவார்கள். இதற்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணம் என்ன தெரியுமா? ஒரு அவசர பணத்தேவை என வரும்போது உடனடியாக அந்த தங்கத்தை அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்ள முடியும். இதனால் தான் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தங்களால் முடிந்த அளவிற்கு சாமானிய மக்கள் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.
நகை கடன்: இனி நம் அவசரத் பண தேவைகளுக்கு தங்கம் மட்டுமல்ல வெள்ளியையும் அடகு வைத்து பணமாக பெற முடியும். அதற்கான ஒரு வழிகாட்டுதல்களை தான் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்படுத்தி தந்திருக்கிறது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் மக்கள் தங்க கடன் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் தான் பெரிய அளவிலான விளம்பரங்களை கூட வெளியேறுகின்றன. மற்ற தனிநபர் கடன்களுடன் ஒப்பிடும்போது நகை கடன்கள் நமக்கு குறைந்த வட்டியிலேயே கிடைக்கின்றன .

வெள்ளியை அடகு வைத்து கடன்: வங்கிகள் நிதி நிறுவனங்களை பொருத்தவரை நாம் நம்முடைய நகையை அவர்களிடம் அடமானமாக கொடுப்பதால் தனிநபர் கடன்களை காட்டிலும் இந்த வகை கடன்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஏனெனில் கடனை திரும்ப செலுத்தவில்லை என்றாலும் அந்த நகையை அவர்கள் விற்பனை செய்து பணத்தை மீட்டுக் கொள்ள முடியும் என்பது தான் முக்கிய காரணம் . இனி நம்முடைய அவசர பண தேவைகளுக்கு தங்கம் மட்டுமல்ல வெள்ளியையும் அடமானமாக வைத்து கடன் பெற முடியும்.
ஏப்ரல் முதல் வெள்ளிக்கும் கடன்: ரிசர்வ் வங்கி தங்கம் மற்றும் வெள்ளிக்கு எதிரான கடன்களுக்கான வழிகாட்டுதல் என்ற பெயரில் சுற்றறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து நாம் தங்கத்தை போலவே வெள்ளியையும் அடகு வைத்து கடன் வாங்கலாம். வெள்ளி அடகு வைத்து கடன் வழங்குவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.

வெள்ளி நகை, நாணயங்களுக்கு கடன்: வங்கிகள் , கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கத்தை போலவே இனி வெள்ளியையும் அடமானமாக பெற்று கடன் வாங்கலாம். வெள்ளி நகை மற்றும் வெள்ளி நாணயத்தை மட்டுமே அடகு வைக்க முடியும். வெள்ளி கட்டிகளுக்கு கடன் கிடைக்காது. அதே போல வெள்ளி ஈடிஎஃப்கள், வெள்ளி மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற டிஜிட்டல் சொத்துக்களை அடமானம் வைக்க முடியாது.
எவ்வளவு கடன் கிடைக்கும்: வெள்ளி நகைகள் என்றால் 10 கிலோ வரையிலும், வெள்ளி நாணயங்கள் என்றால் 500 கிராம் வரையிலும் அடகு வைத்து கடன் பெறலாம். கடன் மதிப்பு மற்றும் வெள்ளியின் மதிப்புக்கான விதிமுறைகளின் படி பார்த்தால் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு வெள்ளியின் மதிப்பில் 85 சதவீதம் வரையிலும், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு வெள்ளியின் மதிப்பில் 80 சதவீதம் வரையிலும் , 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள கடன்களுக்கு வெள்ளியின் மதிப்பில் 75 சதவீதம் வரையிலும் கடன் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
12 மாதங்களில் திரும்ப பெற வேண்டும்: 12 மாதங்களுக்குள் இந்த கடனை திரும்ப செலுத்திவிட்டு வெள்ளி நகை மற்றும் நாணயங்களை மீட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை அடகு வைத்தவர்கள் நகையை மீட்க தவறினால் முன் கூட்டியே நோட்டீஸ் அளிக்க வேண்டும், பின்னர் வங்கிகள் அவற்றை ஏலத்தில் விடுத்தால் அதை பற்றியும் கடன் பெற்ற நபருக்கு தெரிவிக்க வேண்டும்.
அவசர தேவைக்கு உதவும் வெள்ளி: தங்க நகை எப்படி அடகு வைக்கிறோமோ அதே போல வெள்ளியை அடகு வைக்கும் போதிலும் அந்த குறிப்பிட்ட வங்கியில் மதிப்பீட்டாளர்கள் இருப்பார்கள் வெள்ளியை பரிசோதனை செய்து அதற்கான தொகையை நிர்ணயம் செய்து வழங்குவார்கள் . எனவே வெறும் சொத்து மதிப்பாக மட்டுமே கருதப்பட்டு வந்த வெள்ளி இனி நம்முடைய அவசர தேவைக்கும் உதவப் போகிறது.
வெள்ளியை அடகு வைத்து கடன் வாங்கலாம் என்ற அறிவிப்பு சாதாரண மக்கள் மட்டும் இன்றி சிறு தொழில் நடத்தக்கூடிய நபர்களுக்கும் தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ப தங்கள் கைவசம் இருக்கும் வெள்ளியை அடகு வைத்து பணமாக மாற்றுவதற்கான வாய்ப்பை தந்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications