நாட்டில் உள்ள ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் தேசிய ஓய்வூதிய திட்டம். இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான PFRDA-வின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.
இந்த திட்டத்தில் வயதானவர்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்யும் விதமாக கொண்டு வரப்பட்ட திட்டமாகவும் உள்ளது.
என்பிஎஸ் திட்டத்தில் ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்காதவர்கள், KYC அப்டேட் செய்யாமல் உள்ளவர்களின் என்பிஎஸ் கணக்கானது நிபந்தனைகளின் கீழ் மூடப்படலாம் என கூறப்படுகின்றது.
ஆதார் பான் இணைப்பு அவகாசம்
ஆக என்பிஎஸ் வாடிக்கையாளர்கள் உடனடியாக ஆதார் பான் நம்பரை இணைக்க NSDL தளத்தில் சென்று இணைத்துக் கொள்ளலாம்.
ஆதார் பான் இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30, 2023 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக இதுவரையில் இணைக்காதவர்கள் விரைவில் இணைத்து கொள்வது நல்லது. அப்படி இணைக்கப்படாத பட்சத்தில் ஜூலை 1, 2023 முதல் உங்களது பான் கார்டு செயலிழக்கலாம். அதோடு 1000 ரூபாய் அபராதமும் செலுத்த நேரிடலாம்.
ஜுன் 30-க்குள் இணைப்பு
என்பிஎஸ் கணக்குடன் ஆதார் எண்களை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக KYC-யையும் சரிபார்த்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக அதனை செய்து கொள்வது நல்லது. எனினும் பான் நம்பரும் கட்டாயமாதலால், ஜூன் 30-க்குள் இணைக்காத பட்சத்தில் உங்களால் பரிவர்த்தனை செய்ய முடியாமல் போகலாம். ஆக கட்டாயம் இந்த இணைப்பை விரைவில் செய்து விடுவது நல்லது.
அபராதம் எவ்வளவு?
அதோடு ஆதார் பான் இணைப்பு ஜூன் 30-க்குள் செய்யாவிட்டால் அபராதமாக ஜூலை 1ல் இருந்து 1000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதனை NSDL தளத்திலேயே செலுத்திக் கொள்ளலாம்.
ஆன்லைனில் எப்படி?
எளிதில் ஆன்லைன் மூலம் இணைத்துக் கொள்ளலாம்
இதற்காக https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வருமான வரித்துறையின் புதிய தளத்திற்கு செல்லவும்.
அதில் கீழாக Quick Links என்ற ஆப்சனில் லிங்க் ஆதார் என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்தால் அது மற்றொரு பக்கத்தில் தொடங்கும்
அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
குறிப்பாக உங்களது ஆதார் பான் விவரங்களை கேட்கும். தவறில்லாமல் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்த பின்னர் கீழாக உள்ள பாக்ஸினை கிளிக் செய்யவும். இதன் மூலம் 6 இலக்க ஓடிபி ஒன்று வரும். அதனை பதிவு செய்த பிறகு அப்டேட் செய்யவும்.
ஒடிபி கொடுத்து வேலிடேட் செய்த பிறகு சரியாக செய்து விட்டால் உங்களுக்கு ஒரு பாப் அப் செய்தி வரும். உங்களது கோரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக வரும்.
ஆதார் NPS கணக்கு இணைப்பு?
முந்தைய முதலீட்டாளர்கள் ஆதாரை என்பிஎஸ் கணக்குடன் இணைக்க https://cra-nsdl.com/CRA/ என்ற தளத்தில் சென்று லாகின் செய்ய வேண்டும்.
இதில் Sub menu - என்ற ஆப்சனை கிளிக் செய்து, அப்டேட் ஆதார்/ ஆதார் விவரங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதனை கிளிக் செய்யும்பட்சத்தில் புதியதாக ஒரு பக்கத்திற்கு செல்லும். அதில் Update Details என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் ஆதார் நம்பரை அப்டேட் செய்யவில்லை எனில் ADD அல்லது Update Aadhaar Number என்பதை கொடுக்க வேண்டும்.
இதில் ஆதார் நம்பரை கொடுத்து சப்மிட் செய்யும்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும்.
உங்களது ஓடிபியை பதிவு செய்த பிறகு வெற்றிகரமாக உங்களது ஆதார் PAN எண்ணுடன் இணைக்கப்பட்டு விடும்.
இதில் உங்கள் பெயர் ஆதாரிலும் பான் எண்ணிலும் ஒரே போல இருக்க வேண்டும். ஆக இதனையெல்லாம் தாண்டி நீங்கள் வெற்றிகரமாக பதிவு செய்திருந்தால், உங்களது ஆதார் மற்றும் பான் எண் வெற்றிகரமான இணைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியும் வரும்.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications