தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான ஈபிஎஃப்ஓ தான் இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் பிஎஃப் கணக்கை மேலாண்மை செய்து வருகிறது. நம்முடைய பிஎஃப் கணக்கு செயல்படும் முறை, பிஎஃப் கணக்கிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னரே பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும் முறை உள்ளிட்டவற்றில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களை அறிவித்து வருகிறது .
ஈபிஎஃப்ஓ அமைப்பின் வாரிய குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்து பிஎஃப் சந்தாதாரர்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது. இதன்படி பிஎஃப் உறுப்பினர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் 100% தொகையையும் ஓய்வுகாலத்திற்கு முன்னரே பெற முடியும். இது தவிர முக்கியமான சில விதிமுறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன .

பிஎஃப் கணக்கில் மாதந்தோறும் ஊழியர் சார்பாகவும் நிறுவனம் சார்பாகவும் பணம் வரவு வைக்கப்படுவதே அந்த ஊழியரின் ஓய்வுகாலத்தை கருத்தில் கொண்டு தான். இருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் நம் பிஎஃப் கணக்கில் இருந்து பகுதி அளவு பணத்தை நாம் எடுத்து கொள்ள முடியும். ஆனால் அதற்கென வரம்பு உள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் 25% தொகையை விடுத்து மீதமுள்ள 75% தொகையை ஓய்வுகாலத்துக்கு முன்பே எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஓய்வுபெற்ற பிறகு தான் இந்த பணத்தை எடுக்க முடியும் என இருந்தது.
இதற்கு முன்பு நீங்கள் வேலையை விட்டு நின்ற பிறகு உங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் முழு பணத்தையும் எடுத்துக் கொள்வதற்கான கால வரம்பு இரண்டு மாதங்களாக இருந்த தற்போது 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 மாதங்கள் தொடர்ச்சியாக நீங்கள் வேலையே இல்லாமல் இருந்தால் தான் உங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முடியும்.
அதேபோல ஈபிஎஸ் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் வேலையே இல்லாமல் 36 மாதங்கள் இருந்திருக்க வேண்டும் என விதிமுறைகள் மாற்றப்பட்டிருக்கின்றன . மேலும் பணத்தை திரும்ப பெறுவதற்கான 13 வகையான காரணங்கள் வெறும் மூன்றாக சுருக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நம் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் முறை என்பது எளிமையாகி உள்ளது.

அதாவது இதுவரை நாம் பிஎஃப் கணக்கில் இருந்து பகுதி அளவு பணத்தை எடுக்கிறோம் என்றால் அதற்கான காரணங்களை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து ஏற்கலாமா நிராகரிக்கலாமா என முடிவு செய்வார்கள். இனி அப்படி எந்த ஒரு காரணமும் குறிப்பிடாமலே நம் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை கோரலாம்.
எனவே ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் , காரணத்தை விளக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாஸ்புக் லைட் , முக அங்கீகார அடையாள அடிப்படையில் பிஎஃப் கணக்கு மாற்றம் என பல்வேறு டிஜிட்டல் முறையிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன . உங்களுடைய UAN எண் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருக்கிறது எனும் போது நீங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறினால் தானாகவே உங்களுடைய பிஎஃப் கணக்கு டிரான்ஸ்பர் செய்யப்படும் .
மேலும் பிஎஃப் கணக்கில் இருந்து ஒரு பகுதி அளவு பணத்தை எடுக்க வேண்டுமென்றால் குறைந்தது 12 மாதங்களாவது வேலை செய்திருக்க வேண்டும் என அதற்கான வரம்பு குறைக்கப்பட்டு இருக்கிறது. ஓய்வூதிய பெறக்கூடிய நபர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ் என்பது ஈபிஎஃப்ஓ மூலம் வீட்டிற்கே இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications