அஞ்சலக திட்டங்கள் பொதுவாக ஒரு நம்பகமான, பாதுகாப்பான, சிறுசேமிப்பு திட்டங்களாக உள்ளன. மற்ற முதலீட்டு திட்டங்களில் போட்ட முதலீடாவது சரியாக கிடைக்குமா? என்ற நெருக்கடியான இந்த காலகட்டத்திலும் நல்ல லாபகரமான திட்டங்களாக உள்ளன.
அதிகளவு ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாத மக்களுக்கு அஞ்சலக திட்டங்கள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
இதன் மூலம் சிறிய தொகையினை கூட முதலீடு செய்ய முடியும் என்பதால், சாமானியர்கள் விரும்பும் திட்டங்களாக உள்ளன.
வட்டி வருவாய் அதிகம்
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் திட்டம் அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதியாகும்.
இன்றைய காலகட்டத்தில் முன்னணி வங்கிகள் கூட ரெப்போ விகிதம் குறைவினால், வட்டி விகிதத்தினை குறைவாகத் தான் வழங்கி வருகின்றன. அதனுடன் ஒப்பிடும்போது அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் வட்டி விகிதம் என்பது சற்று அதிகம் தான்.
எளிமையான திட்டம்
இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து கூட முதலீடு செய்து கொள்ளலாம் என்பதால் சாமானிய மக்களுக்கு ஏற்ற திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. இந்த திட்டத்தில் நீங்கள் இணைய வேண்டும் எனில், இந்த திட்டத்தில் அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி கணக்கினை தொடங்க வேண்டும்.
தற்போதைய வட்டி நிலவரம்?
இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் வரையிலான திட்டங்கள் உள்ளன. எனினும் இதனை நீட்டித்து கொள்ளலாம். தற்போதைய நிலையில் 5.8% வரை உள்ளது. தற்போது வட்டி விகிதம் வரலாறு காணாத அளவில் குறைந்துள்ள நிலையிலும் கூட, அஞ்சலத்தில் வட்டி விகிதம் அதிகம்.
ரூ.16 லட்சம் எப்படி?
மாதம் 10,000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். வட்டி விகிதம் 5.8% என வைத்துக் கொண்டால், உங்களது முதிர்வு தொகை 10 வருடங்களுக்கு பிறகு, 16.28 லட்சம் ரூபாய் கிடைக்கும். எனினும் இந்த தொகை முழுமையாக கிடைக்க வேண்டுமெனில், தொடர்ச்சியாக இடையில் நிறுத்தாமல் முதலீடு செய்ய வேண்டும்.
அபராதம் & தள்ளுபடி
இதில் தாமதமாக பணம் செலுத்தினால் 1% அபராதமாக விதிக்கப்படுகின்றது. அதேசமயம் முன் கூட்டியே செலுத்துபவர்களுக்கு தள்ளுபடியும் உண்டு. இதில் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான வைப்பு தொகையை முன் கூட்டியே செலுத்தினால், தள்ளுபடி சலுகையினை பெறலாம். குறிப்பாக 6 மாதங்கள் முதல் 11 மாதங்கள் வரையிலான தவணைகளை முன் கூட்டியே செலுத்தினால் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடி பெறலாம். 12 மாதங்களுக்கான தொகையினை முன் கூட்டியே செலுத்தினால், ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 4 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். 12 டொபாசிட்டுகளுக்கு பிறகு டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். எனினும் இப்படி முன் கூட்டியே செலுத்தப்படும் தொகையானது குறிப்பிட்ட காலங்களில் செலுத்த முடியும்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications