NPS திட்டத்தில் மாதம் ரூ.2.94 லட்சம் பென்சன் பெற எவ்வளவு முதலீடு செய்யணும்.. இது சாத்தியமா?

NPS calculator: தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது மூத்த குடிமக்களுக்கான ஒரு தனித்துவமான சேமிப்பு திட்டம். இது வயதான காலகட்டத்தில் நிதி ரீதியாக யாரையும் சார்ந்து வாழாமல் இருக்க பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

இந்த திட்டமானது ஈக்விட்டி மற்றும் கடன் சந்தையில் முதலீடு செய்ய முடியும். ஆக இந்த திட்டத்தில் வருமானம் என்பது அதிகம் என்றே கூறலாம்.

இது குறித்து முதலீட்டு ஆலோசகர்கள் இந்த திட்டத்தில் வருமானமும் அதிகம். வரி சலுகையும் கிடைக்கும். அதுவும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய இந்த நேரத்தில் அவசியமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

மாத ஓய்வூதியம்

மாத ஓய்வூதியம்

இன்றைய காலகட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதொரு பாதுகாப்பான ஓய்வூதிய திட்டங்களுக்கு மத்தியில், என்பிஎஸ் பிரபலமான ஒன்றாகவும் உள்ளது. இந்த திட்டத்தில் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரி சலுகை கிடைக்கிறது.

இதில் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதனை உங்களது 25வது வயதில் இருந்து முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இவர்கள் தங்களது ஓய்வு காலத்தில் 2.94 லட்சம் ரூபாய் மாத பென்சனாக பெற முடியும்.

எவ்வளவு ஈக்விட்டி - கடன்

எவ்வளவு ஈக்விட்டி - கடன்

என்பிஎஸ் அக்கவுண்ட் ஹோல்டர்ஸ் தங்களது முதலீட்டில் 75% வரையில் ஈக்விட்டியில் முதலீடு செய்து கொள்ளலாம். ஆனால் நிபுணர்கள் 60% ஈக்விட்டியில் முதலீடு செய்தால் போதுமானது. மீதமிருக்கும் 40%-த்தினை கடன் பத்திரங்களில் முதலீடு செய்து கொள்ளலாம் என கூறுகின்றனர்.

 வருமானம் எப்படி?

வருமானம் எப்படி?

நீண்டகால நோக்கில் ஈக்விட்டியில் 12% வருமானமும், கடன் பத்திரங்களில் 8% வருமானமும் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். ஆக 60:40 என்ற விகிதத்தில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும்போது இதில் வருமானம் என்பது 10% சராசரியாக எதிர்பார்க்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

என்பிஎஸ் கணக்கீடு?

என்பிஎஸ் கணக்கீடு?

ஒருவர் இந்த திட்டத்தில் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இதில் ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய்க்கு வரி சலுகையும் கிடைக்கிறது. இதே முதலீட்டாளர் 60:40 என்ற விகிதத்தில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். முதலீட்டாளர் தனது 25 வயதில் இந்த கணக்கினை தொடங்குகிறார் என வைத்துக் கொள்வோம். ஆக 35 ஆண்டுகளுக்கு அவர் முதலீடு செய்வார். அவரின் முதிர்வு தொகையானது 2.87 கோடி ரூபாயாகும். அவருக்கு மாதம் வருடாந்திர திட்டத்தில் 95,707 ரூபாய் மாத பென்சாக கிடைக்கும்.

SWP திட்டம் மூலம் எவ்வளவு?

SWP திட்டம் மூலம் எவ்வளவு?

உங்களுக்கு கிடைக்கும் முதிர்வு தொகையினை SWP திட்டம் மூலம் திரும்ப முதலீடு செய்வதன் மூலம் மீண்டும் லாபம் அதிகரிக்கலாம். முதலீட்டாளர்கள் என்பிஎஸ் திட்டத்தில் கிடைத்த முதிர்வு தொகையான 2.87 கோடி ரூபாயினை SWP திட்டத்தில் முதலீடு செய்தால், முதலீட்டாளர் 1,98,926 ரூபாய் மாத வருமானமாக பெற முடியும்.

இலக்கு சாத்தியமா?

இலக்கு சாத்தியமா?

ஆக வருடாந்திர திட்டத்தில் கிடைக்கும் 95,707 ரூபாய் மற்றும் SWP திட்டத்தில் கிடைக்கும் 1,98,926 ரூபாயினை சேர்த்தால், ஒரு முதலீட்டாளர் மாதத்திற்கு 1.99+ 0.95 லட்சம் என சேர்த்தால் 2.94 லட்சம் ரூபாய் வருமானமாக கிடைக்கும். NPS திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் இடைவிடாமல் முதலீடு செய்வதன் மூலம் இது சாத்தியமான ஒன்றே. எனினும் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களில் இடைவிடாமல் சரியாக முதலீடு செய்வது, இரண்டாவது SWP திட்டத்தில் சரியான பண்டுகளை தேர்வு செய்ய வேண்டும். இதுவே உங்கள் இலக்குகளை அடைய ஏதுவான ஒன்றாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+