ஓய்வூதியத்திற்காக முன்கூட்டியே திட்டமிட்டு வைப்பது மிக மிக முக்கியம். ஏனெனில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப நம்முடைய செலவுகளும் அதிகரித்துவிட்டன. எனவே ஓய்வுக்குப் பிறகு மாத வருமானம் பெறுவதற்கு, வேலையில் இருக்கும் போதே முதலீடு செய்ய தொடங்க வேண்டும். அந்த வகையில் ஓய்வு காலத்தில் ஒருவருக்கு தேவையான வருமானத்தை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS). இந்தப் பதிவில் மாதம் 50,000 ஊதியம் பெறுவதற்கு எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்.
NPS திட்டத்தின் நன்மைகள்: NPS திட்டம் கூட்டு வருவாயை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் எவ்வளவு காலம் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் வருமான வளர்ச்சி அதிகரிக்கும். உங்கள் முதலீடுகளை முன்கூட்டியே தொடங்குவது, இன்னும் சிறந்தது. உங்கள் 20 வயதிற்குள் முதலீட்டைத் தொடங்குவதால், உங்கள் பணம் இன்னும் நீண்ட காலத்திற்கு வளர்ச்சி அடையும். சாதாரண மாதாந்திர முதலீட்டு தொகை கூட கணிசமான ஓய்வூதிய கார்பஸாக NPS திட்டம் மாற்றுகிறது.

ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவது எப்படி?: நீங்கள் உங்களுடைய 25-வது வயதில் NPS திட்டத்தில் மாதம் ரூ.6,550 முதலீடு செய்யத் தொடங்கி, அடுத்த 35 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்தால், 60 வயதிற்குள் மாதம் ரூ.50,000 ஓய்வூதியமாகப் பெறுவீர்கள்.
NPS கணக்கீடு:
வயது: 25 ஆண்டுகள்
ஓய்வு பெறும் வயது: 60
பங்களிப்பு: மாதத்திற்கு ரூ 6,650
எதிர்பார்க்கப்படும் வருவாய்: 10%
முதிர்வு காலத்தில் மொத்தம் 2,50,75,245 ரூபாயுடன் முடிவடையும்.
அந்த கார்பஸிலிருந்து நீங்கள் 60 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் ஓய்வு பெறும் வயதில் நீங்கள் திரும்பப் பெறக்கூடிய அதிகபட்ச வரம்பு 60 சதவீதம் ஆகும். அப்படியானால், மீதம் இருக்கும் 40 சதவீத தொகையை மறு முதலீடு செய்ய வேண்டும்.
முதலீடு செய்யப்பட்ட இந்த தொகை நிலையான வருமானத்தை உருவாக்கும் கார்ப்பரேட் பத்திரங்களில் அரசாங்கம் முதலீடு செய்கிறது. இந்தத் தொகையில் 6 சதவீத வருமானம் கிடைத்தால், முதலீடு செய்யப்படும் தொகை ரூ.1,00,30,098 ஆக இருக்கும். எதிர்பார்க்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ 50,150 ஆக இருக்கும்.
ஒவ்வொருவருக்கும் பென்ஷன் பெற வேண்டும் என்று நினைக்கும் தொகை மாறுபடலாம். எனவே நீங்கள் NPS கால்குலேட்டர்களை ஆன்லைனில் பயன்படுத்தி எவ்வளவு முதலீடு செய்தால்.. எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு முதலீடு செய்ய தொடங்கலாம். ஓய்வூதியத்திற்காக திட்டமிடுபவர்கள் யாரையும் சாராமல் வாழ்வதற்கு சிறந்த திட்டமாக NPS விளங்குகிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications