கொரோனா தொற்றுநோய் காலத்தில் மக்களின் நிதி நெருக்கடியை போக்க ஜனவரி 2021 இல் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம், NPS சந்தாதாரர்களை self-declaration முறையின் கீழ் ஆன்லைன் வாயிலாகவே ஒரு பகுதி தொகையை திரும்பப் பெறுவதற்கு அனுமதித்தது.
இப்போது தொற்றுநோய் தொடர்பான பாதிப்புகள் இல்லாத நிலையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் NPS திட்ட முதலீட்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக பகுதி தொகையை திரும்பப் பெறும் வசதியை அரசு ஊழியர்கள் சந்தாதாரர்களுக்கு இனி கிடைக்காது என்று ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் PFRDA கூறியுள்ளது.
அரசு ஊழியர்கள் பிரிவில் மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகள்.
NPS திட்டம்
ஜனவரி 2021 இல் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையமான PFRDA வெளியிட்ட அறிக்கையில் NPS திட்டத்தின் கீழ் சிறு பகுதியளவு தொகையை திரும்பப் பெறுதல்களை அனுமதித்தது. இது கொரோனா காலத்தில் நிதி நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு இது பெரிய அளவில் பயன் அளித்து வந்தது.
வித்டிரா
NPS திட்டத்தின் சந்தாதாரர்களின் நலனுக்காக self-declaration முறையின் மூலம் கோவிட் தொற்றுநோயை சமாளிக்க ஒரு சிறப்பு விநியோகமாக இந்த partial withdrawal சேவையை உருவாக்கியது.
கோரிக்கை
மேலும் இந்த கோரிக்கைகளை ஏற்கவும், சரிபார்க்கவும், அங்கீகாரக்கவும், நோடல் அதிகாரிகளின் சுமையை குறைக்க ஆன்லைன் கோரிக்கைகள் CRA அமைப்பில் உடனடி வங்கிக் கணக்கு சரிபார்ப்புக்குப் பிறகு, தொடர்புடைய நோடல் அதிகாரிகள் / POPகளின் அங்கீகாரம் தேவையில்லாமல், பென்னி டிராப் மூலம் நேரடியாகச் செயல்படுத்தப்பட்டது.
2023 ஜனவரி 1
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் NPS திட்ட முதலீட்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக பகுதி தொகையை திரும்பப் பெறும் வசதியை அரசு ஊழியர்கள் சந்தாதாரர்களுக்கு இனி கிடைக்காது என்பதால் இந்த சலுகையை பயன்படுத்துவோர் கீழே உள்ளதை கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும்
கண்டிஷன்கள்
1) சந்தாதாரர் குறைந்தது மூன்று வருடங்களாவது NPS திட்டத்தில் முதலீடு செய்திருக்க வேண்டும்
2) NPS சந்தாதாரர் செய்த பங்களிப்புகளில் 25 சதவீதத்திற்கு மேல் திரும்பப் பெறுதல் தொகை இருக்கக்கூடாது
3) NPS சந்தாவின் முழு காலத்திலும் PFRDA அமைப்பு அதிகபட்சமாக 3 பகுதியை திரும்பப் பெற அனுமதிக்கிறது.
4) குறிப்பிட்ட காரணங்களுக்கு எதிராக மட்டுமே பணத்தை திரும்பப் பெற முடியும். எடுத்துக்காட்டாக;
a) குழந்தைகளின் உயர் கல்வி
b) குழந்தைகளின் திருமணம்
c) ஒரு குடியிருப்பு வீட்டை வாங்குவதற்கு/கட்டமைப்பதற்காக (குறிப்பிட்ட நிபந்தனைகளில்)
ஈ) தீவிர நோய்களுக்கான சிகிச்சைக்காக
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications