கொரோனாவின் வருகைக்கு பிறகு முதலீட்டாளர்கள் மத்தியில் முதலீட்டின் மீதான ஆர்வம் என்பது கணிசமான அதிகரித்துள்ளது. குறிப்பாக ஓய்வுகால முதலீடுகள் குறித்தான் ஆர்வம் என்பது கணிசமாக உயர்ந்துள்ளது. ஆக அந்த வகையில் ஓய்வுகாலத்திற்கு ஏற்ற முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுவது நேஷனல் பென்சன் திட்டம் பற்றித் தான்.
'இந்த திட்டத்தில் எந்த மாதிரியான வரி சலுகைகள் எல்லாம் கிடைக்கிறது? தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பாதுகாப்பு
பொதுவாக ஓய்வுகால திட்டங்களுடன் வரி சலுகையும் கிடைக்கும்போது அவை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் என்பிஎஸ் திட்டம் என்பது ஓய்வுக்கு பிந்தைய தேவைகளை பூர்த்தி செய்யும் சிறந்த திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இது வயதான காலக்கட்டத்தில் பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றன.
இரண்டு கணக்குகள்
என்பிஎஸ் திட்டத்தில் இரண்டு வகையான ஓய்வூதிய கணக்குகள் உள்ளன. ஒன்று டயர் 1 மற்றும் டயர் 2. இந்த டயர் 1ல் பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன. டயர் 2 திட்டம் என்பது பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த டயர் 2 கணக்கினை தொடங்க டயர் 1 ஜணக்கு அவசியம்.
80சி-யின் வரிச் சலுகை
என்பிஎஸ் சிறந்த சேமிப்பு திட்டம் என்பதோடு 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரி சலுகை பெற முடியும். அதோடு இன்னும் சில விலக்குகளும் உண்டு. ஆக அதனையும் தெரிந்து கொள்வதன் மூலம் பெரியளவில் பலனடையலாம்.
80சிசிடி (1பி)
50,000 ரூபாய் வரை முதலீடுகள் 80சிசிடி (1பி) பிரிவின் கீழ்வரி விலக்கு பெற முடியும். இதில் 80சி பிரிவின் கீழ் பெறும் வரி விலக்கு 1.5 லட்சம் ரூபாயுடன் சேர்க்கும்போது, 2 லட்சம் ரூபாய் வரையில் வரி சலுகை பெற முடியும். இதில் 30% வரி வரம்பில் நீங்கள் 62,400 ரூபாய் வரிகளை சேமிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பிரிவு 80சிசிடி (2)
பிரிவு 80சிசிடி (2) நிறுவனத்தின் பங்களிப்புக்கு விலக்கு பெற வழிவகை செய்கிறது. 80சிசிடி-யின் கீழ் பெறும் விலக்கு என்பது ஒருவரின் ஊதியத்தில் அடிப்படைச் சம்பளம், அகவிலைப்படியில் 10% மட்டுமே. இந்தப் பிரிவின் கீழ் சுயதொழில் செய்து வரி செலுத்தும் நபர் வரிவிலக்கு பெற முடியாது. இதில் அரசு ஊழியர்கள் 14% வரியிலிருந்து கழிக்க தகுதியுடையவர்கள், 10% தனியார் ஊழியர்களும் சலுகை பெறலாம்.
இரண்டு மீதும் வரிச்சலுகை
இதில் முதலீடு மற்றும் முதிர்வு தொகைக்கு இரண்டிற்கும் மீதும் வரி சலுகை பெற முடியும். இதற்கு EEE சலுகை பெற முடியும். இந்த வரி சலுகையானது குறிப்பிட்ட திட்டங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications