பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எந்தவித சிரமமும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எண்ணுகின்றனர். இதற்காக பல்வேறு முயற்சிகளையும் அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதிலிருந்து செய்யத் தொடங்குகின்றனர். குழந்தைகளின் கல்விச் செலவுகள் முதல் அவர்களுடைய திருமணச் செலவுகள் வரை அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு சேமிக்கவும் ஆரம்பிக்கின்றனர். குழந்தைகளின் எதிர்காலத்தை மேலும் சிறப்பாக மாற்றியமைக்கும் ஒரு ஓய்வூதிய திட்டத்தை சமீபத்தில் அரசு அறிமுகப்படுத்தியது. அதுதான் NPS வாத்சல்யா என்ற திட்டம்.
NPS வாத்சல்யா திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி வெறும் ரூ.1,000 முதலீடு செய்ய தொடங்கினாலே அந்த குழந்தைக்கு 60 வயதாகும்போது ரூ. 2.3 கோடிக்கும் அதிகமாக வருமானம் பெறலாம். இதனால் ஒவ்வொரு மாதமும் அந்த குழந்தைக்கு ரூ.1 லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் கிடைக்கும்.

குறைந்தபட்ச முதலீடு: NPS வாத்சல்யா திட்டத்தில் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதல் கணக்கு தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. குழந்தைக்கு 18 வயது ஆகும் வரை குழந்தையின் பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் கணக்கை நிர்வகிக்கலாம். 18 வயது நிரம்பிய பிறகு அந்த கணக்கை குழந்தையே கையாள முடியும்.
NPS வாத்சல்யா திட்டத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?: உங்களுக்கு குழந்தை பிறந்த உடனே நீங்கள் NPS வாத்சல்யா கணக்கைத் திறக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். குழந்தைக்கு 18 வயதாகும் வரை மாதா மாதம் அதில் ரூ.1,000 முதலீடு செய்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த முதலீட்டை அந்த குழந்தையின் 60 வயதாகும் வரை முதலீடு செய்கிறீர்கள். அப்படியானால் 60 வயது கழித்து ரூ. 7,20,000-த்தை முதலீடு செய்திருப்பீர்கள்.
இதற்கு 10 சதவீதம் வருமானம் கிடைத்தால்.. வட்டியாக ரூ.3,77,61,849 கிடைக்கும். இதனால் முதலீடு மற்றும் வட்டி ஆகிய இரண்டும் சேர்த்து ரூ.3,84,81,849 கிடைக்கும். NPS வாத்சல்யா திட்டத்தின் மொத்த கார்ப்பஸில் 40 சதவீதத்தை மறு முதலீடு செய்ய வேண்டும். அப்படியானால் உங்களுக்கு கிடைத்த வருமானத்தை மீண்டும் முதலீடு செய்து வைத்திருந்தால் ஓய்வூதிய நிதியாக ரூ.2,30,89,109 கிடைக்கும். இதற்கு 8 சதவீதம் வருமானம் வழங்கப்பட்டால் ஒவ்வொரு மாதமும் ரூ.1,02,618 ஓய்வூதியமாகப் பெறலாம்.
NPS வாத்சல்யா கணக்கை இந்திய அஞ்சல் துறையில் திறக்க முடியும். இந்த கணக்கை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிர்வகித்து வருகிறது. ஆன்லைனில் திறக்க விரும்புவோர் e-NPS இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கிய பிறகு 18 வயது ஆகும் வரை 3 முறை பகுதியளவு பணத்தை திரும்ப எடுக்கலாம்.
ஆனால் கணக்குத் திறந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பணம் பெற முடியும். கல்வி, குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சைகள் மற்றும் உடல் ஊனம் போன்ற காரணத்திற்கு 75 சதவீதம் வரை திரும்பப் பெறலாம்.


Click it and Unblock the Notifications