NPS வாத்சல்யா திட்டம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி என்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான ஓய்வூதியத்தை உருவாக்க முடியும். இது வழக்கமான தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் நீட்டிப்பாகும். இது 18 வயதுக்குட்பட்ட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் சேமிப்பு மற்றும் ஓய்வூதியத்தை வழங்குகிறது.
NPS-ஐப் போலவே, NPS வாத்சல்யாவும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படும் ஓய்வூதிய திட்டமாகும். குழந்தைகள் மற்றும் சிறார்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இந்தத் திட்டம், தங்கள் குழந்தைக்கு 18 வயதாகும்போது, திட்டத்தில் இருந்து வெளியேறலாம். முதிர்வுத் தொகையில் 80% வருடாந்திரத் திட்டத்தை வாங்குவதற்கு மறு முதலீடு செய்ய வேண்டும். 20% தொகை மொத்த தொகையாக திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

NPS வாத்சல்யா திட்டமானது, பிற்காலத்தில் பெற்றோருக்கு உதவியாக இருக்கும் ஒரு ஓய்வூதிய திட்டமாகும். ஏனெனில் முதிர்வுத் தொகையானது உயர்கல்வி, தொழில் தொடங்குதல் அல்லது உங்கள் குழந்தையின் பிற அத்தியாவசிய வாழ்க்கை செலவுகளுக்கு உதவிகரமானதாக இருக்கும்.
NPS வாத்சல்யாவின் கீழ் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடு: NPS வாத்சல்யா திட்டத்தின் கீழ் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் ஆண்டுக்கு ரூ. 1,000 முதல் முதலீடு செய்யலாம். மேலும் அதிகபட்ச முதலீட்டுக்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. எனவே பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சிறு தொகையிலிருந்து முதலீடு செய்ய முடியும்.
NPS வாத்சல்யாவிற்கு தகுதி பெற, நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், உங்கள் குழந்தை 18 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) தேவைகளுக்கு இணங்குவதும் அவசியம்.
NPS வாத்சல்யா திட்டத்திலிருந்து விலகுதல்: சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் முன் NPS வாத்சல்யாவிலிருந்து தொகையை திரும்பப் பெறலாம். பதிவுசெய்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தை முதிர்வு வயதை அடையும் வரை, மொத்த பங்களிப்புத் தொகையில் 25% வரை நீங்கள் திரும்பப் பெறலாம். PFRDA வழிகாட்டுதல்களின்படி, கல்வி, குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைகள் அல்லது இயலாமை ஆகியவற்றிற்காக 75 சதவீதம் வரை திரும்பப் பெறலாம்.
குழந்தைக்கு 18 வயது ஆனதும், கணக்கு வழக்கமான NPS கணக்கிற்கு மாறுகிறது. புதிய KYC மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். உறுப்பினர்கள் வேண்டுமானால் NPS திட்டத்திலிருந்து வெளியேறலாம், ஆனால் குறைந்தபட்சம் 80% கார்பஸ் வருடாந்திர திட்டத்தில் மறு முதலீடு செய்யப்பட வேண்டும், அதே நேரத்தில் 20% மொத்த தொகையாக திரும்பப் பெறலாம். மொத்த கார்ப்பஸ் ரூ. 2.5 லட்சத்திற்கு கீழ் இருந்தால், முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம்.
NPS வாத்சல்யா திட்டத்தில் மாதத்திற்கு 1000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: NPS வாத்சல்யா திட்டத்தில் ஒரு பெற்றோர் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஒட்டுமொத்த திட்டத்தின் முதலீட்டு காலம் 18 ஆண்டுகள். இதற்கு ஆண்டு வருமானமாக 12.86 சதவீதம் வழங்கப்படுகிறது என்றால் மொத்தமாக 18 ஆண்டுகளுக்கு 2,16,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள்.
அதற்கு மொத்த வட்டியாக 6,32,718 ரூபாய் கிடைக்கும். அப்படியானால் 18 வயதில் மொத்தக் கார்பஸ் 8,48,000 ரூபாயாக இருக்கும். NPS வாத்சல்யா விதிமுறைகளின் படி முதிர்வு தொகையில் 80 சதவீதம் வருடாந்திர திட்டத்தில் மறு முதலீடு செய்ய வேண்டும். அதாவது 6,78,400 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 20 சதவீதம் அதாவது 1,69,600 ரூபாயை மொத்தமாக திரும்ப பெற முடியும். பின்னர் மறு முதலீடு செய்யப்படும் தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications