குழந்தைகளின் படிப்பு செலவுக்காக NPS Vatsalya திட்டத்தில் முதலீடு செய்யலாமா? சாதக, பாதகங்கள் என்ன?

குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் முதலீடு செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் தான் NPS Vatsalya திட்டம். கடந்த 2024ஆம் ஆண்டில் தான் மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்தது.

என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் விரிவாக்கம் தான் இது. என்பிஎஸ் வாத்சல்யா என்பது குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெயரில் என்பிஎஸ் வாத்சல்யா கணக்கை தொடங்கலாம். குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பணத்தை முதலீடு செய்யலாம். இந்த குழந்தைகள் 18 வயது ஆன பிறகு இந்த என்பிஎஸ் வாத்சல்யா கணக்கு வழக்கமான தேசிய ஓய்வூதிய திட்ட கணக்காக மாறிவிடும்.

குழந்தைகளின் படிப்பு செலவுக்காக NPS Vatsalya திட்டத்தில் முதலீடு செய்யலாமா? சாதக, பாதகங்கள் என்ன?

இந்தியாவை சேர்ந்த 18 வயது வரை உள்ள குழந்தைகளின் பெயரில் இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்கி முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் பெற்றோர் தாங்கள் செய்யும் முதலீடுகளை வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சி-இன் இன் கீழ் குறிப்பிட்டு வரி விலக்குகளை பெறலாம். ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 250 ரூபாயிலிருந்து அதிகபட்சம் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் பங்களிப்பாக செய்யலாம்.

Enps இணையதளத்தில் குழந்தைகளின் அடையாள ஆவணம், பெற்றோரின் அடையாள ஆவணம் ஆகியவற்றை சமர்ப்பித்து முதலீட்டினை தொடங்கலாம். இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 250 ரூபாயில் தொடங்கி அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். முதலில் 1000 ரூபாயாக இருந்த இந்த தொகை தற்போது தான் 250 ரூபாயாக மாற்றப்பட்டது. பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் குழந்தைகளின் எதிர்கால தேவையும் அவர்களின் ஓய்வூதிய காலத்தை கருத்தில் கொண்டும் இதில் முதலீடு செய்யலாம்.

மூன்று வருட கால லாக் இன் காலத்திற்குப் பிறகு நீங்கள் செய்த பங்களிப்புகளில் 25 சதவீதம் வரையிலான தொகையை திரும்பப் பெற முடியும். குழந்தை 18 வயதை எட்டும் வரை 3 முறை இப்படி பணத்தை பெறும் வாய்ப்பு வழங்கப்படும். கல்வி செலவு , மருத்துவ செலவு உள்ளிட்டவற்றுக்கு இந்த பணத்தை பெற முடியும்.

இந்த திட்டத்தின் நோக்கமே குழந்தைகளுக்கான ஓய்வூதிய வருமானத்தை வழங்குவது தான். நீண்ட கால அடிப்படையில் நாம் செய்யக்கூடிய முதலீட்டை அரசு மூலம் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து நமக்கு ரிட்டர்ன்ஸ் வழங்குகிறது. இந்த குழந்தைகள் 18 வயது எட்டிய பிறகு இது வழக்கமான ஓய்வூதிய திட்டமாக மாறி கொள்ளலாம்.

ஆனால் குழந்தைகளின் படிப்பு செலவை கருத்தில் கொண்டு என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்வது சரியாக இருக்காது என்கின்றனர் நிபுணர்கள். தற்போது குழந்தை 18 வயது ஆகும்போது 80 சதவீத பணத்தை லம்ப் சம் முறையில் பெற்றுக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் இதில் 60% வரையிலான தொகைக்கு தான் வரி விலக்கு உண்டு. மீதமுள்ள தொகைக்கு வரி கட்ட வேண்டும். மீதமுள்ள 20% தொகையை ஓய்வு காலத்திற்கான நிதியாக ஒதுக்கி விட வேண்டும்.

குழந்தைகள் 18 வயது அடையும் போது அவர்களின் மேற்படிப்புக்காக இதில் இருக்கும் பணத்தை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் நூறு சதவீத தொகையை எடுக்க முடியாது என்பதில் தான் சிக்கல் இருக்கிறது. 20% தொகை ஓய்வு காலத்திற்காக வைத்தாக வேண்டும் 80% சதவீத பணத்தை மட்டுமே நாம் எடுக்க முடியும். அண்மையில் தான் இந்த மாற்றமும் கொண்டு வரப்பட்டது. ஒரு வேளை மொத்த தொகையே 8 லட்சம் ரூபாய்க்கு கீழ்தான் இருக்கிறது எனும் போது அந்த மொத்த பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தைகள் 18 வயதை எட்டிய பின்னர் 21 வயதுக்குள் இரண்டு முறை பகுதி அளவு பணத்தை பெற்றுக் கொள்ளலாம். குழந்தைக்கு எதிர்கால தேவைக்கும் வேண்டும், கல்விக்கும் குறிப்பிட்ட தொகை வேண்டும் என்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம், ஆனால் பணத்தை பெறுவது தொடர்பான வரி நடைமுறைகளில் தெளிவில்லாமல் இருப்பது முழு தொகையையும் பெற முடியாதது ஆகியவை இந்த திட்டத்தின் சிக்கல் என்கின்றனர் நிபுணர்கள். குழந்தையின் ஓய்வுகாலம் தான் இலக்கு என்பவர்கள் 100% இதில் முதலீடு செய்யலாம் என்கின்றனர், படிப்புக்காக இந்த பணத்தை எதிர்பார்க்க போவதில்லை என்பவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+