தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) சந்தாதாரர்கள் விரைவில் நிதி திரும்பப் பெறுவதற்கான புதிய வசதியை பெற உள்ளனர். ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டாளர் அமைப்பாண PFRDA முறையான திரும்பப் பெறும் திட்டத்தை அதாவது systematic withdrawal plan வெளியிட திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, அடுத்த காலாண்டின் இறுதிக்குள் நாங்கள் இத்திட்டத்தை கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன் என PFRDA தலைவர் தீபக் மொஹந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

NPS சந்தாதாரர்கள் ஓய்வுக்குப் பிந்தைய காலம் முழுவதற்கும் annuity உடன் பிணைக்கப்படுவதற்குப் பதிலாக, எவ்வளவு, எப்போது தங்கள் இருப்பைத் வித்டிராவல் செய்ய விருப்பத்திற்கு ஏற்ப அனுமதிக்கும். இதன் மூலம் NPS தொகையை முக்கியமான தேவைக்காக பயன்படுத்திக்கொள்ள முடியம்.
தற்போது இருக்கும் சிஸ்டமேடிக் லம்ப்சம் வித்ட்ராவல் (SLW) சலுகை மூலம் 60 வயதை எட்டிய NPS சந்தாதாரர்கள், தாங்கள் முதலீடு செய்துள்ள முதலீட்டில் உருவாக்கப்பட்ட கார்பஸைத் தொகையை விருப்பத்திற்கு ஏற்ப திரும்பப் பெற அனுமதிக்கும்.
உதாரணமாக ஒய்வு பெற்றதில் இருந்து 75 வயது வரை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் ஒருவரின் விருபத்திற்கு ஏற்ப தொகையை திரும்பப் பெறலாம். இந்த நெகிழ்வுத்தன்மை NPS சந்தாதாரர்களுக்கு தேவையான பணப்புழக்கத்தை வழங்குகிறது. இதை விருப்பத்தின் படி எப்போது வேண்டுமோ அப்போது எடுத்துக்கொள்ளும் வசதி கொண்டுவரப்பட உள்ளதாக தெரிகிறது.
நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS) கணக்கு மூலம் ஒய்வு பெற்ற பின்பு நிதி சுமையில்லாமல் ஓய்வூதியத்தின் மூலம் வாழ்வதற்கு ஏற்க திட்டம் மட்டும் அல்ல, மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு வரியைச் சேமிக்கவும் முக்கியக் கருவியாக உள்ளது.
குறிப்பாக நீங்க 30 சதவீத வருமான வரிப் பிரிவில் இருந்தால் பெரும் தொகையை வருமான வரியில் இருந்து சேமிக்க முடியும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80CCD (1B) இன் கீழ், NPS சந்தாதாரர்களுக்கு ஒரு பிரத்தியேக வரிச் சலுகை கிடைக்கும்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டை உதாரணமாக 60:40 ஆகப் பங்குச்சந்தை கடன் சந்தையில் பிரித்து முதலீடு செய்யும் பட்சத்தில் கட்டாயம் 10 சதவீதம் வருடாந்திர லாபம் கிடைக்கும். இப்படியிருக்கையில் மாதம் 10000 ரூபாய் முதலீடு செய்யும் பட்சத்தில் ஒய்வு அடைந்த பின்பு lumpsum தொகையாக 1,36,75,952 ரூபாயும், தேர்வு செய்யப்பட்ட 40 சதவீதம் annunity தொகையை வைத்து மாதம் 45,587 ரூபாய் பென்ஷன் தொகை பெற முடியும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications