தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate) நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டமாகும்.
தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவான ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.
குறைந்தபட்ச முதலீடாக 1,000 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை.
வரிச்சலுகை
தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையை வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம். தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 6.8% ஆகும். இந்த திட்டத்தில் 1000 ரூபாய் முதலீடு செய்துள்ளீர்கள் எனில், 5 வருடம் கழித்து, உங்களது முதலீடு 1389.49 ரூபாயாக அதிகரிக்கும். இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.
எவ்வளவு வரிச்சலுகை கிடைக்கும்?
முதலீட்டாளார் ஒருவர் ஏப்ரல் 2021ல் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். 2021 - 2022ம் நிதியாண்டில் 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரிச்சலுகையினை பெற முடியும். ஆனால் வரவிருக்கும் ஆண்டுகளில் வரி செலுத்த வேண்டுமா? முதிர்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகைக்கு நான் வரி செலுத்த வேண்டுமா? விவரம் என்ன? என கேட்டுள்ளார்.
டிடிஎஸ் இல்லை
இது குறித்து நிபுணர்கள் அளித்த பதிலில், இந்த பத்திர முடிவில் திரட்டப்படும் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் இருக்காது. ஆனால் ஒருவரின் வருமான வரி வரம்பை பொறுத்து முதலீட்டின் மூலம் கிடைப்பட்ட வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். கிடைக்கப்பெரும் வட்டியை மறு முதலீடு செய்தும் வரி விலக்கு பெறலாம்.
என் எஸ் இ-யில் வரி நோக்கங்களுக்காக இரண்டு விருப்பங்கள் உண்டு. ஒன்று நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் உங்களது வருமான வட்டியை காட்டலாம். அல்லது முதிர்வுகாலத்தில் பெற்ற தொகையை காட்டலாம்.
வரிச் சலுகை எப்போதெல்லாம் கிடைக்கும்?
என் எஸ் இ-யில் வட்டி மாதம் மாத கணக்கிடப்பட்டாலும் திட்ட முடிவிலேயே முதிர்வு தொகை கிடைக்கிறது. இதனால் கிடைக்கும் வட்டி வருமானமும் முதலீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ஆக 80 சி பிரிவின் கீழ் வரிச்சலுகை பெற தகுதியுடையதாகவே பார்க்கப்படுகின்றது. ஆக நீங்கள் இந்த திட்டத்தில் முதிர்வு காலத்தில் பணம் கிடைக்கும், ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் வரிசலுகையை பெறலாம்.
எது பெஸ்ட்
இதே முதிர்வு காலத்தின் போது கிடைக்கும் வட்டி வருமானத்தினை காட்டியும் வரி செலுத்தலாம். ஆனால் இது கூடுதல் சுமையாக இருக்கும். ஆக ஒவ்வொரு ஆண்டும் வரி கணக்கில் காட்டுவதே சரியான ஆப்சனாக இருக்கும் என கூறுகின்றனர். .
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications