இன்றைய காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், மக்கள் மத்தியில் இன்றும் விருப்பமான திட்டங்களில் ஒன்றாக அஞ்சலக திட்டங்கள் உள்ளன. இந்த அஞ்சலக திட்டங்களுக்கு மத்திய அரசு காலாண்டுக்கு ஒரு முறை, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வட்டி விகிதத்தினை மாற்றியமைக்கிறது.
கடந்த சில காலாண்டுகளாகவே அஞ்சலக திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படாமலேயே இருந்து வந்தது.
தொடர்ந்து ரிசர்வ் வங்கி சமீபத்திய மாதங்களாகவே ரெபோ விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், தற்போது சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
எவ்வளவு வட்டி அதிகரிப்பு?
இந்த வட்டி விகிதமானது 20 - 110 அடிப்படை புள்ளிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம் கிடைக்கும்? இன்றைய வட்டி அதிகரிப்புக்கு பிறகு எவ்வளவு வட்டி விகிதம் கிடைக்கும். தற்போது 4.0 - 7.6% வரையில் வட்டி விகிதமானது கிடைத்து வருகின்றது.
என்னென்ன திட்டங்கள்
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அரசு 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருட டெர்ம் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.
இது தவிர மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), மாதாந்திர வருவாய் திட்டம் (MIS), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC)
வட்டியில் மாற்றமில்லை
மேற்கண்ட திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டாலும், முதலீட்டாளர்களின் மிக விருப்பமான திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா உள்ளிட்ட திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை.
புதிய வட்டி எவ்வளவு?
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு 1.15 வரையில் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு ஜனவரி 1ல் இருந்து 7% வழங்கப்படலாம் என தெரிகிறது. இது தற்பொது 6.85 ஆக இருந்து வருகின்றது. இதே மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8% ஆக அதிகரிப்படலாம் என தெரிகிறது. இது தற்போது 7.6% ஆக வழங்கப்பட்டு வருகின்றது.
இதே டெர்ம் டெபாசிட்டுகள் 1 - 5 ஆண்டுகளுக்கு 1.1% அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதே மாதாந்திர வருவாய் திட்டத்திற்கு 6.7%ல் இருந்து, 7.1% ஆக அதிகறிக்கலாம் என தெரிகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சிறு சேமிப்பு திட்டங்களுக்கு ஜாக்பாட் வட்டி தான்! ஆனால் அவசரப்பட்டு முதலீடு செய்யாதீங்க - ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications