இந்தியாவில் நம்பகமான முதலீட்டு திட்டங்கள் என்றாலே நாம் கண்ணை மூடிக்கொண்டு அஞ்சலகத் திட்டங்களில் முதலீடு செய்து விடலாம். ஏனெனில் வங்கிகளை விட அதிக வட்டி தரக்கூடியது மட்டுமல்ல , நமது பணத்தையும் பாதுகாப்பாக திரும்ப வழங்க கூடியவை தான் அஞ்சல் நிலைய முதலீட்டு திட்டங்கள்.
அஞ்சல் அலுவலகங்களில் கிஷான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு திட்டம் மற்றும் மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் ஆகிய மூன்று திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த திட்டங்களை பொறுத்தவரை நாம் செய்யும் முதலீடுகளுக்கு 7.5 முதல் 7.7 % வரை வட்டி வழங்கப்படுகிறது. எனவே பெரும்பாலானவர்களின் விருப்பமான முதலீட்டு திட்டங்களாக இவை இருக்கின்றன.

இதன்படி தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது. கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் மகிளா சம்மன் திட்டங்களுக்கு 7.5% வட்டி கிடைக்கிறது. இதில் இந்த மூன்று திட்டங்களிலுமே குறைந்தபட்சம் 1,000 ரூபாயிலிருந்து முதலீட்டினை தொடங்கலாம். இதில் தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் திட்டங்களில் மட்டும் அதிகபட்ச முதலீட்டு வரம்பு கிடையாது . மகிளா சம்மன் திட்டத்தை பொறுத்தவரை 2 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய முடியாது.
தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள், கிசான் விகாஸ் திட்டத்தில் முதிர்வு காலம் 115 மாதங்கள், மகிளா சம்மன் திட்டத்தை பொறுத்தவரை முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும். இந்தத் திட்டங்களில் எல்லாம் நாம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்தை பொறுத்தவரை நாம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தோம் என்றால் தற்போது கிடைக்கக்கூடிய வட்டி விகிதம் மற்றும் காம்பவுண்டிங் திறன் ஆகியவற்றை கொண்டு கணக்கீடு செய்யும் போது நம்முடைய 1 லட்சம் ரூபாய் 5 ஆண்டுகள் முடிவில் 1, 44, 903 ரூபாயாக நமக்கு கிடைக்கும்.
கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்தில் நாம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் நமக்கு 115 மாதங்கள் அதாவது 9 ஆண்டுகள் 7 மாதங்களில் நம்முடைய பணம் இரட்டிப்பாகி 2 லட்சம் ரூபாயாக கிடைக்கும். மகிளா சம்மன் திட்டத்தில் நாம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் இரண்டு ஆண்டுகளின் முடிவில் நமக்கு 1,16,022 ரூபாயாக திரும்ப கிடைக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications