சென்னை: இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று பழைய வரி கணக்கு நடைமுறை மற்றொன்று புதிய வரி கணக்கு நடைமுறை.
மத்திய அரசை பொருத்தவரைக்கும் பெரும்பாலானவர்கள் புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறைக்கு மாற வேண்டும் என்றே விரும்புகிறது. இதற்காகவே புதிய வரி கணக்கு நடைமுறையில் பல்வேறு சலுகைகளையும் அரசு அறிவித்துள்ளது. 2025 - 26 ஆம் நிதி ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் பழைய வரி நடைமுறையை தேர்வு செய்ய வேண்டுமா? அல்லது புதிய வரி நடைமுறைக்கு மாற வேண்டுமா என்பது குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்.

வருமான வரி விதிப்பு நடைமுறைகளில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துவிட்டன. இதன்படி ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு எந்தவித வரியும் கிடையாது என புதிய வரி கணக்கு நடைமுறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்தியாவில் பழைய வரி கணக்கு நடைமுறை மற்றும் புதிய வரி கணக்கு நடைமுறை ஆகிய இரண்டுக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய வித்தியாசம் வரி சலுகைகள் தான்.
பழைய வரி கணக்கு நடைமுறையை பொறுத்தவரை பிரிவு 80சி இன் கீழ் நாம் செய்யக்கூடிய முதலீடுகள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி சலுகை பெற முடியும். ஆனால் பழைய வரி நடைமுறையில் வருமான வரி உச்ச வரம்பு ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய். ஆனால் புதிய வரி கணக்கு நடைமுறையில் வருமான வரி உச்சவரம்பு 4 லட்சம் ரூபாய்.
புதிய வரி கணக்கு நடைமுறையில்
ரூ. 4 லட்சம் வரை - 0%
ரூ.4 லட்சம் - ரூ. 8 லட்சம் - 5%
ரூ.8 லட்சம் - ரூ. 12 லட்சம் - 10%
ரூ.12 லட்சம் - ரூ. 16 லட்சம் - 15%
ரூ.16 லட்சம் - ரூ. 20 லட்சம் - 20%
ரூ.20 லட்சம் - ரூ. 24 லட்சம் - 25%
ரூ.24 லட்சத்திற்கு மேல் - 30%
என வரி விகிதங்கள் இருக்கின்றன. அதாவது இதில் அதிக எண்ணிக்கையில் வருமான வரி விகிதங்களும், வருமான வரி உச்ச வரம்பு அதிகமாகவும் இருக்கிறது. பழைய வரி நடைமுறையில் வருமான வரி விகிதங்கள் அதிகம்.
எனவே புதிய வரி நடைமுறையை தேர்ந்தெடுப்பதா அல்லது பழைய வரி நடைமுறையை தேர்ந்தெடுப்பதா என்பது ஒவ்வொரு தனி நபரின் முதலீட்டு போக்கை பொறுத்து மாறும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பழைய வரி முறையில் பிரிவு 80சி இன் கீழ் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரி சலுகை, 80டி இன் கீழ் மருத்துவ காப்பீடு பிரீமியங்களுக்கு வரி சலுகை, வீட்டு கடனுக்கான வட்டி தொகைக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரி சலுகை ஆகியவை கிடைக்கின்றன. எனவே ஈபிஎஃப் , பிபிஎஃப் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் பழைய வரி நடைமுறையிலேயே தொடரலாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
புதிய வரி நடைமுறை மிகவும் எளிமையாக்கப்பட்ட நடைமுறை அதில் வருமான வரி உச்சவரம்பே அதிகமாக தான் இருக்கிறது எனும் போது எளிமையான ஒரு வரி நடைமுறையும் வரி கணக்கீடு எனக்கு தேவை என்பவர்கள் புதிய வரி நடைமுறைக்கு மாறலாம் என அறிவுரை வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications