டெல்லி: இந்தியாவினை பொறுத்தவரையில் முக்கிய தரப்புகளில் ஆதாரினை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. குறிப்பாக அஞ்சலகத்தின் முக்கிய சேமிப்பு திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தேசிய சேமிப்பு பத்திரம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் மகிளா சம்மன் பச்சத் திட்டம் என பல திட்டங்களில் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் அஞ்சலக திட்டங்கள் பலவற்றில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டினை கட்டாயமாக்கியுள்ளது.
ஆதார் அவசியமா?
இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த மாற்றங்கள் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சிறுசேமிப்புத் திட்டத்தின் KYC ஆகப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆதார் எண் இல்லாமலும் இந்த சேமிப்பு திட்டங்களில் டெபாசிட் செய்ய அனுமதிக்கப்பட்டது.
பான் எப்போது அவசியம்
ஆனால் தற்போது நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்புக்கு பின், முதலீட்டாளர்கள் எந்த விதமான முதலீடிற்கும் ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. மேலும், வரம்புக்கு மேல் முதலீடு செய்வதற்கு பான் எண் கட்டாயம் என கூறியுள்ளது.
ஆறு மாதங்களுக்குள் ஆதார் அவசியம்
ஒரு வேளை அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கும் போது உங்களிடம் ஆதார் இல்லை என்றால், ஆதாருக்கான பதிவு சீட்டை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் சிறு சேமிப்பு திட்ட முதலீட்டுடன் முதலீட்டாளரை இணைக்க, கணக்கு துவங்கிய ஆறு மாதங்களுக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள்?
அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டக் கணக்கைத் தொடங்கும்போது உங்களுக்கு என்ன ஆவணங்கள் தேவைப்படும்
சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு சீட்டு
பான் எண் - ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை 30 செப்டம்பர் 2023க்குள் சமர்ப்பிக்கவில்லை என்றால், அவர்களின் கணக்கு அக்டோபர் 1, 2023 முதல் தடை செய்யப்படும்.
அவசியம் இணையுங்கள்
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2023ம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தற்போது வரை பான் கார்டை, ஆதாருடன் இணைக்காமல் இருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications