இன்சூரன்ஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி தான். அதில் பாலிசி எடுத்திருந்தாலும், எடுக்காவிட்டாலும் பலருக்கும் இது தெரிந்திருக்கும். அந்தளவுக்கு பலவகையான பாலிசிகளை கொண்டுள்ளது எல்ஐசி.
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு எண்ணம் இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலத்திலாவது ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழவேண்டும். அதாவது வயதான காலத்திலும் யாரையும் சாராமல், சொந்த கால்களில் நிற்க வேண்டும் என்பது தான்.
பென்ஷன் திட்டங்கள்
அரசு ஊழியர்களை பொறுத்தவரையில் கிடைக்கும் பென்ஷன் தொகையை வைத்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பர். இதே மற்றவர்களுக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கு,. ஆனால் தனியார் ஊழியர்கள், பெண்கள், வயதானவர்கள் என பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. எனினும் சில பென்ஷன் திட்டங்கள் உள்ளன. அவற்றின் மூலம் இது போன்ற பலனை பெற்று வருகின்றனர். அந்த வகையில் நாட்டின் முன்னணி மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி-யும் சில பென்ஷன் திட்டங்களை வழங்கி வருகின்றது.
சாரல் பென்ஷன் திட்டம்
அதில் நாம் இன்று பார்க்கவிருப்பது எல்ஐசி-யின் சாரல் பென்ஷன் திட்டத்தினை பற்றித் தான். இந்த பாலிசியின் சிறப்பம்சமே ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் போதும். பாலிசியினை தொடங்கும்போது ஆண்டுத்தொகை விகிதம் உத்தரவாதம் அளிக்கப்படும். இந்த பாலிசியினை எல்ஐசி அலுவலகத்திலோ அல்லது ஆன்லைனிலோ பெற்று கொள்ளலாம்.
வயது வரம்பு
இந்த பாலிசியினை 40 வயது முதல் 80 வயது வரையில் எடுத்துக் கொள்ளலாம். பாலிசிதாரர் இந்த திட்டத்தினை எடுக்கும்போது அதிக தொகையினை ஒரே பிரீமியமாக செலுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பாலிசிதாரர் அவரின் வாழ் நாள் முழுவதும் ஒரு வருமானத்தினை பெறலாம். இதில் பங்கு சந்தை சார்ந்த ரிஸ்க் இல்லை. இதில் இருவகை திட்டம் உண்டு.
இருவகை திட்டம்
முதல் வகை தனி நபர் பாலிசி - 100% திரும்ப தரும் பிரீமியம். இரண்டாவது ஜாய்ண்ட் லைஃப் 100% திரும்ப தரும் பிரீமியம் என இருவகைகள் உண்டு. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12,000 ரூபாய் தொகையாவது செலுத்த வேண்டும். அதாவது மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாயாவது உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அதிகபட்ச தொகைக்கு எந்த வரம்பும் இல்லை. ஆண்டு ஆரையாண்டு, மாதாந்திர முறைகளில் தொகையை செலுத்தவும் வசதி உண்டு.
கடன் வசதி உண்டா?
இந்த பாலிசியினை பெற்ற ஆறு மாதத்திற்கு பிறகு கடன் பெறலாம். 6 மாதத்திற்கு பிறகு சரண்டர் செய்யலாம். பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் இறந்து விட்டால், நாமினி பிரீமியம் தொகையை பெறுவார்கள். இந்த பாலிசியில் முதிர்ச்சி பலன் என்பது கிடையாது. மொத்தத்தில் பாலியின் மூலம் மாத மாதம் வருமானம் கிடைக்கும் ஒரு திட்டமாக உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications