ஹோம் லோன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிசர்வ் பேங்க், ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்தது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்திலும் 0.25 சதவீதம் ரெப்போ விகிதம் குறைத்துள்ளது. இதனால் ரெப்போ விகிதத்தை பொறுத்து கடன்களை வழங்கும் வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டிச் சுமை குறையும். அதோடு உங்கள் வீட்டுக் கடனை விரைவாகவும் செலுத்த முடியும்.
நீண்ட காலத்திற்கு தொடர்ந்து ஈஎம்ஐ செலுத்தி கொண்டே வாழ்வதற்கு யாருக்குமே விருப்பமில்லை. வீட்டுக் கடன் பெற்று வீடு வாங்குபவர்களுக்கு ஈஎம்ஐ மிகப் பெரிய நிதிச் சுமை. எனவே எப்படியாவது கடனை முடித்து பத்திரத்தை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் பெரும்பாலான கடன் பெற்றவர்களின் சிந்தனை.

இப்படி இருக்கையில் மற்றொரு பிரச்சினை ஒன்றும் வந்துள்ளது. தற்போது நடைமுறைக்கு வந்த புதிய வருமான வரிமுறையின்படி வீட்டுக் கடனுக்கான வருமான வரி சேமிப்பும் வழங்கப்படுவதில்லை. இதனாலேயே அதிகமான கடன் பெற்றோர் விரைவில் தங்கள் கடனை முடிக்க வேண்டும் என்று வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
வட்டி குறைந்ததை பயன்படுத்தி சிலர் முன்கூட்டியே அசலில் வரவு வைக்கவும் முன் வருகின்றனர். இதனை ஆங்கிலத்தில் பார்ஷியல் ரீபேமெண்ட் என்று கூறுவார்கள். இதை சில உதாரணங்களோடு பார்ப்போம்.
வழிமுறை 1: உங்களுக்கு போனஸ், இன்சென்டிவ் போன்றவற்றில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்போது அவற்றை உங்கள் வீட்டுக் கடனை விரைவாகச் செலுத்தப் பயன்படுத்தலாம். நீங்கள் ஒவ்வொரு முறையும் ரீபேமென்ட் செய்யும்போது நிலுவையில் உள்ள கடன் தொகை உடனடியாக குறைக்கப்படுகிறது. அதோடு வட்டி நிலுவையில் உள்ள கடனுக்கு மட்டும்தான் வசூலிக்கப்படுகிறது. காலப்போக்கில் நிலுவைத் தொகையில் நீங்கள் பணம் செலுத்தி குறைத்துக் கொண்டே வந்தால், வட்டி தொகை மிச்சமாகும்.
உங்களிடம் பணம் இருக்கும் போதெல்லாம் பகுதி அளவு கடனில் வரவு வைப்பது உங்கள் வீட்டுக் கடனை விரைவாக செலுத்தி முடிக்க உதவும். உதாரணமாக நீங்கள் வீட்டுக் கடன் பெற்றிருக்கிறீர்கள்.. நிலுவையில் ரூ. 40 லட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு உங்களிடம் வசூலிக்கப்படும் வட்டி விகிதம் 8 சதவீதம், கடனை நீங்கள் 20 ஆண்டுகள் செலுத்த வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
உங்களிடம் பணம் கிடைத்தவுடன் ரூ.1 லட்சத்தை முன்கூட்டியே வரவு வைக்கிறீர்கள், என்றால் உங்களுடைய கடன் 14 மாதங்களுக்கு முன்னதாகவே முடிந்துவிடும். இதனால் ரூ.3.72 லட்சம் வரை வட்டியை சேமிக்கலாம்.
வழிமுறை 2: அதுவே ஒவ்வொரு ஆண்டும் நிலையான தொகையை முன்கூட்டியே செலுத்த முயற்சி செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் ரூ. 40 லட்சம் கடன் நிலுவையில் உள்ளது, அதற்கு 8 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. இதன் கடன் காலமும் 20 ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டும் ரூ. 50,000 முன்கூட்டியே செலுத்தி வருகிறீர்கள் என்றால், 16 ஆண்டுகளுக்குள் உங்களுடைய கடன் முடிந்துவிடும், மேலும் உங்கள் கடன் முழுமையாக அடைக்கப்பட்டு இதன் மூலம் ரூ. 11.11 லட்சம் வரை வட்டி சேமிக்க முடியும்.
வழிமுறை 3: சிலருக்கு போனஸ் வந்தாலும் வேறு செலவுகள் முன்கூட்டியே வந்து நிற்கும். சிலரால் சேமித்து ஒவ்வொரு ஆண்டும் ரூ. 50,000 செலுத்த முடியாது. அப்படி இருக்கையில் என்ன செய்வது? அதே ரூ. 40 லட்சம் வீட்டுக் கடனை எடுத்துக் கொள்வோம். 8 சதவீத வட்டி மற்றும் 20 ஆண்டுகள் கடன் காலத்தில் உங்கள் ஈஎம்ஐ தொகையை 722 ரூபாய் அதிகரிப்பதன் மூலம் ரூ. 2.37 லட்சம் வரை வட்டி சேமிக்க முடியும்.
அதாவது 33,458 ரூபாய் மாதம் ஈஎம்ஐ தொகையாக செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த தொகையை ரூ.34,180-ஆக உயர்த்தும்போது உங்களுடைய கடன் காலத்தை 12 மாதங்கள் குறைக்க முடியும். அதோடு ரூ. 2.37 லட்சம் வரை வட்டியை சேமிக்கலாம்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications