சொந்த வீடு வாங்குவது என்பது எளிதாகிவிட்டது. ஏனெனில் வங்கிகள் வீட்டு கடன்களை வாரி வழங்க தயாராக உள்ளன. அந்த வகையில் பலரது சொந்த வீடு கனவையும் வங்கி கடன்கள் தான் நிறைவேற்றுகின்றன. வங்கியில் கடன் வாங்கி சொந்த வீடு வாங்குவது சிலருக்கு பின்னாளில் பெரிய சுமையாக மாறுகிறது, காலபோக்கில் வங்கியில் வாங்கிய வீட்டு கடனை திரும்ப செலுத்தவே பல ஆண்டுகள் உழைக்க வேண்டியதாகிவிடுகிறது. இதற்காக பல தியாகங்களையும் செய்ய வேண்டியுள்ளது.
வங்கியில் வாங்கும் வீட்டு கடனை பொறுத்தவரை நாம் வாங்கிய அசல் தொகையை விட வட்டியே அதிகமாக செலுத்தி இருப்போம். இதனால் எப்படியாவது லோனை ப்ரீ செட்டிலமெண்ட் முறையில் அடைத்துவிட வேண்டும் என பலரும் போராடுகிறார்கள். வீட்டு கடனை திரும்ப செலுத்துவதில் ஒரே ஒரு டிரிக்கை பின் தொடர்ந்தால் போது முன் கூட்டியே க்டனை அடைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

30 ஆண்டு கால வீட்டு கடனை கூட 17 ஆண்டுகளிலேயே செலுத்தி விடலாம் என நிபுணர்கள் ஒரு வழிமுறையை பரிந்துரை செய்கின்றனர். முதலில் வீட்டு கடன் வாங்கும் போது கடன் திரும்ப செலுத்தும் காலம் 30 ஆண்டு காலத்திற்கு இருக்க வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர். ஏனெனில் கடன் திரும்ப செலுத்தும் காலம் அதிகமாக இருந்தால் மாதாந்திர ஈஎம்ஐ தொகை குறையும்.
உதாரணமாக 50 லட்சம் ரூபாய்க்கு வீட்டு கடன் வாங்கிய ஒருவர் அதற்கு 8% வட்டி செலுத்துவதாக வைத்து கொள்வோம். கடன் காலம் 30 ஆண்டுகள் என்பதால் மாதாந்திர ஈஎம்ஐ 36,688 ரூபாய், இதுவே கடன் காலம் 20 ஆண்டுகள் என்பதாக இருந்தால் மாதாந்திர ஈஎம்ஐ 41,822. இதனால் தான் கடன் காலத்தை 30 ஆண்டுகளாக கொண்டால் நாம் மாதாந்திர ஈஎம்ஐ தொகையில் மட்டும் 5,134 ரூபாய் சேமிக்க முடியும். இப்படி பார்த்தால் ஓராணுடுக்கு நாம் 61,608 ரூபாய் வரை சேமிக்க முடியும்.
இந்த பணத்தை கொண்டு ஒவ்வொரு ஆண்டும் 12 ஈஎம்ஐ உடன் சேர்த்து கூடுதலாக ஒரு ஈஎம்ஐ செலுத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்படுகிறது. அப்படி என்றால் ஆண்டுக்கு நாம் 13 ஈஎம்ஐ செலுத்தி இருப்போம். ஆண்டுக்கு 12 ஈஎம்ஐ செலுத்தினால் 50 லட்சம் ரூபாய் வீட்டு கடனுக்கு நாம் வட்டியாக 82.1 லட்சம் ரூபாய், கடன் தொகையுடன் சேர்த்து மொத்தம் 1.32 கோடி ரூபாயை 30 ஆண்டுகாலத்திற்கும், மொத்தமாக செலுத்தி இருப்போம்.
இதுவே ஆண்டுக்கு ஒரு ஈஎம்ஐ கூடுதலாக சேர்த்தால் மொத்தம் 13 ஈஎம்ஐ செலுத்தி இருப்போம். இந்த முறையில் நாம் 17 ஆண்டுகளிலேயே கடனை செலுத்தி முடித்து இருப்போம். அதாவது கடனே முடிந்து விடும், இதில் நாம் வாங்கிய கடனுக்கு 48 லட்சம் ரூபாய் தான் வட்டியாக செலுத்தி இருப்போம். அதாவது மொத்தமாக 98 லட்சம் தான் திரும்ப செலுத்தி இருப்போம். இந்த ஒரு கூடுதல் ஈஎம்ஐ நமக்கு வட்டியில் 34 லட்சத்தையும், கடன் காலத்தில் 13 ஆண்டுகளையும் சேமித்து தரும் என சொல்லப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

