Credit Card மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் CIBIL Score குறையுமா? மக்களே கவனம்..!!

இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பல குடும்பங்கள் கிரெடிட் கார்டுகள் மூலமாக தான் மாதாந்திர குடும்ப செலவுகளையே மேற்கொள்கின்றன. இந்த கிரெடிட் கார்டு பயன்பாட்டில் நாம் செய்யும் சில தவறுகள் நம் கிரெடிட் ஸ்கோரை நமக்கே தெரியாமல் குறைய செய்கின்றன.

அண்மை காலமாக கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துவது மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. இது செய்வதற்கு எளிதாக தோன்றினாலும், இதில் மறைமுகமாக அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. கிரெடிட் கார்டு நிறுவனங்கள் மற்றும் பிராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு Processing Fee வசூலிக்கின்றன. இது வாடகை தொகையில் 1% முதல் 3% வரை இருக்கலாம். உதாரணமாக, உங்கள் மாத வாடகை 20,000 ரூபாய் எனில், 2% கட்டணம் என கணக்கிட்டால், மாதம் 400 ரூபாய் கூடுதல் செலவு.

Credit Card மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் CIBIL Score குறையுமா? மக்களே கவனம்..!!

மேலும் வீட்டு வாடகையை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் போது, சரியான நேரத்தில் முழு தொகையையும் நாம் திரும்ப செலுத்த தவறினால், அதன் மீது விதிக்கப்படும் அதிகப்படியான வட்டி, உங்களை எளிதில் கடன் வலையில் சிக்க வைத்துவிடும். மாதந்தோறும் தவிர்க்க முடியாத நிலையான செலவு வீட்டு வாடகை. இதனை தொடர்ச்சியாக கிரெடிட் கார்டு மூலம் செலுத்துவது, எதிர்காலத்தில் பெரிய கடன் சுமையை உருவாக்கலாம். எனவே, அவசர தேவைக்கு மட்டுமே கிரெடிட் கார்டு என்பதை மக்கள் முதலில் பழக வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

Also Read

ஒரு நபரின் சிபில் ஸ்கோரை நிர்ணயிப்பதில் கிரெடிட் பயன்பாட்டு விகிதம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் கிரெடிட் கார்டு வரம்பு 1 லட்சம் ரூபாய் என வைத்துக்கொள்வோம். அதில் 30,000 ரூபாயை வாடகைக்காக பயன்படுத்தினால், உங்கள் வரம்பில் 30% உடனடியாக குறைந்துவிடுகிறது. ஒரு ஆரோக்கியமான சிபில் ஸ்கோரை பராமரிக்க, உங்கள் கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை 30%க்கு கீழே வைத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வாடகை போன்ற பெரிய தொகைகளை தொடர்ந்து கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும்போது, இந்த விகிதம் அதிகரித்து, உங்கள் சிபில் ஸ்கோரை குறைக்கும். இதனால், எதிர்காலத்தில் நீங்கள் மற்ற கடன்களை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம், என்கின்றனர்.

Recommended For You

மேலும் கிரெடிட் கார்டு பில்களில் மினிமம் டியூ மட்டும் செலுத்துவது, உங்கள் கணக்கை செயல்பாட்டில் வைத்திருக்கும். ஆனால், மீதமுள்ள நிலுவை தொகைக்கு அதிக வட்டி விதிக்கப்படும். இது, உங்களுக்கு பெரிய சுமையாக மாற்றிவிடும் என எச்சரிக்கின்றனர்.

கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துவது என்பது அவசர காலங்களுக்கு மட்டுமே ஏற்றது. ரிவார்டு பாய்ண்ட்ஸ் வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இந்த முறையை பின்பற்றுவது, நீண்ட கால அடிப்படையில் உங்கள் நிதி ஆரோக்கியத்திற்கும், சிபில் ஸ்கோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கூறும் நிபுணர்கள், கிரெடிட் கார்டை ஸ்மார்ட்டாக பயன்படுத்தினால் அதன் அதிக பலனை அனுபவிக்கலாம் , அதுவே சிறிய தவறு செய்தாலும் படிப்படியாக அது உங்களை பெரிய கடன் வலையில் சிக்க வைத்துவிடும் என எச்சரிக்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+