இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணப் பரிமாற்ற நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் (Paytm), கடன் சேவையையும் தொடங்கியுள்ளது.
ஆக இனி நீங்கள் தனிநபர் கடன்(Personal Loan) பெற வேண்டுமெனில், வங்கிக்குச் செல்லத் தேவையில்லை, இனி வீட்டில் இருந்த படியே பேடிஎம் மூலமாக இருந்த இடத்தில் இருந்தே கடனுக்கு அப்ளை செய்யலாம்.
ஆக இனி பேடிஎம்மின் உதவியுடன், நீங்கள் பர்சனல் லோனுக்கு (Personal Loan) விண்ணப்பிக்கலாம். வங்கிகளை தேடி அலைய வேண்டியதில்லை.
இந்த நிதியாண்டில் இலக்கு
பேடிஎம்மின் இந்த சேவையை இந்த நிதியாண்டிற்குள் 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆக ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த சேவையை, பேடிஎம் ஆப் மூலம் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இஎம்ஐ விகிதம் எப்படி?
இந்த கடன் சேவையை வழங்கி வரும் பேடிஎம், பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களுடன் சேர்ந்து இரண்டு நிமிடங்களுக்குள் கடன் பெற உதவுகின்றது. பேடிஎம்மில் பெறும் இந்த கடனுக்கு 18 - 36 மாதங்களில் திருப்ப
செலுத்தும் அவகாசம் கிடைக்கும். இதனடிப்படையில் உங்களது இஎம்ஐ விகிதமும் இருக்கும்.
என்ன சலுகை?
பேடிஎம்மின் இந்த சலுகையை வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் 24x7 வசதியையும் நீங்கள் பெறலாம். பேடிஎம்மின் இந்த சேவையை சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள், சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. பேடிஎம்மின் இந்த சேவை சிறிய நகரங்களிலிருந்து வந்து, பெரிய வங்கிகளிடமிருந்து கடன் எடுக்க முடியாத பயனர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
அவசர தேவைக்கு உதவிகரமாக இருக்கும்
பேடிஎம் மூலம் 2 நிமிடங்களுக்குள் தனிப்பட்ட கடனை எடுக்கலாம். இது குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி பவேஷ் குப்தா கூறுகையில், குறுகிய கால கடனை உடனடியாக விரும்பும் உழைக்கும் தொழில் வல்லுநர்கள், புதிய கடன் வாங்குபவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு இந்த வசதி நன்மை பயக்கும். இது அவர்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும். அவர்களின் கனவை நனவாக்கும் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications