சென்னை: எந்த ஒரு பிணையமும் இல்லாமல் வங்கிகள் நமக்கு வழங்கப்படக்கூடிய ஒருவகை கடன் தான் பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன். ஆனால் மற்ற வகை கடன்களுடன் ஒப்பிடுகையில் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.
இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மக்கள் அதிக வட்டி இருந்தாலும் தனிநபர் கடன்களை வாங்குகின்றனர். கார் வாங்க வேண்டும் ஆனால் அதற்கு தனிநபர் கடன் வாங்குவதா அல்லது வாகன கடன் வாங்குவதா என்ற குழப்பம் இருக்கிறதா? இந்த கட்டுரையில் அதற்கான விடையை தெரிந்து கொள்ளலாம்.

எந்த ஒரு கடனை வாங்குவதற்கு முன்பும் அதில் உள்ள சாதக பாதகங்களை தெரிந்து கொள்வது அவசியம். கார் வாங்குவதற்காக தனிநபர் கடன் வாங்க வேண்டுமெனில் இது வாகன கடனை விட அதிக நெகிழ்வு தன்மை கொண்டது.
ஏனெனில் வாகன கடன் வாங்க ஒரு குறிப்பிட்ட கார் டீலரிடம் சென்று அதற்கான எஸ்டிமேஷனை வாங்குவது என்பன போன்ற முன் தயாரிப்புகளை நீங்கள் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் தனிநபர் கடனில் அதற்கான அவசியம் இல்லை.
தனிப்பட்ட முறையில் வங்கியில் கடனுக்கான விண்ணப்பத்தை செய்து உங்களுக்கு விரும்பிய இடத்தில் இருந்து நீங்கள் கார் வாங்கிக் கொள்ளலாம்.
வாகன கடனுக்கான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் கிடைக்க சில காலம் தேவைப்படும் ஆனால் தனிநபர் கடன்களுக்கு வங்கிகள் விரைவாகவே ஒப்புதல் தந்துவிடுகின்றன. ஏனெனில் வாகன கடன்களை விட தனிநபர் கடன்கள் வங்கிகளுக்கு லாபம் அளிப்பவை.
ஒரு குறிப்பிட்ட தள்ளுபடி வந்துள்ளது அது முடிய குறுகிய காலம் தான் இருக்கிறது ஆனால் அதற்கு வாகன கடன் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் எனில் தனிநபர் கடன் வாங்கலாம்.
பொதுவாக வாகன கடன்களை விட தனிநபர் கடன்களின் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். ஆனால் உங்களுக்கு நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்கிறது என்ற பட்சத்தில் தனிநபர் கடன்களிலேயே குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆனால் மிகவும் அரிதான விஷயம் இது. உங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனத்திடம் ஏற்கனவே நீங்கள் முன் தகுதி பெற்றிருந்தால் எந்த சிரமமும் இன்றி எளிதாக தனி நபர் கடனை பெற முடியும். ஆனால் வாகன கடன் பெற பல்வேறு ஆவண சரிபார்ப்புகள் நடைபெறும்.
வாகன கடனில் நாம் வாங்கும் வாகனம் தான் பிணையமாக வைக்கப்படுகிறது. எனவே இதில் வட்டி விகிதம் குறைவு. ஆனால் எந்த பாதுகாப்பும் இல்லாததால் தனிநபர் கடனில் வட்டி விகிதம் அதிகம்.
இதன் விளைவு உங்களின் மாதாந்திர ஈஎம்ஐ வாகன கடனை விட தனிநபர் கடனில் அதிகமாக இருக்கும். இது மட்டுமின்றி வாகன கடனில் கடனை திரும்ப செலுத்தும் காலம் அதிகம். ஆனால் தனிநபர் கடனில் திரும்ப செலுத்தும் காலம் குறைவு என்பதாலும் மாதாந்திர தவணை தொகை அதிகமாக இருக்கும். இது உங்களின் பட்ஜெட்டிற்கு உகந்ததா என யோசனை செய்து கொள்ளுங்கள்.
வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் இரண்டிலுமே சாதக, பாதகங்கள் உள்ளன. உங்களின் தற்போதைய நிதிச்சூழல் மற்றும் தேவையை பொறுத்து தான் எந்த கடனை தேர்வு செய்யலாம் என்ற முடிவை எடுக்க வேண்டும்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications